தந்தை என தெரியாமல் திருமண வாழ்க்கை: அமெரிக்க பெண்ணை அதிர செய்த ரகசியம்!

Added : செப் 24, 2012 | கருத்துகள் (32)
Share
Advertisement
தந்தை என தெரியாமல் திருமண வாழ்க்கை: அமெரிக்க பெண்ணை அதிர செய்த ரகசியம்!

நியூயார்க்:கட்டிய கணவனே தந்தை; குடும்ப நண்பராக இருந்த பெண்ணே தாய்; தந்தையாக இருந்தவர் தான் தாத்தா; லேசாக தலை சுற்றுவது போல் இருக்கிறதா? அமெரிக்காவைச் சேர்ந்த பெண், தன் வாழ்வில் நிகழ்ந்த சோகத்தை, பல ஆண்டுகளுக்குப் பின், வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்.

அமெரிக்காவில், ஓகியோ மாகாணத்தில், டாயில்ஸ்டவுன் பகுதியைச் சேர்ந்த பெண், வலேரி ஸ்புருல்,60. பல ஆண்டுகளாக குடும்பம் நடத்திய பின், 1998ம் ஆண்டு கணவர் காலமானார்.
இந்நிலையில், அவரின் உறவினர் ஒருவர், தனக்கு கிடைத்த அதிர்ச்சித் தகவலை, வலேரியிடம் கூறினார். எளிதில் ஜீரணிக்க முடியாத வகையில், அவர் கூறிய விஷயத்தை கேட்டு நொந்து போனார் வலேரி. அவரின் கணவனாக வாழ்க்கை நடத்தியவர் தான், வலேரியின் தந்தையாம். இதை மரபணு சோதனை மூலம் உறுதி செய்து கொண்டார், வலேரி. அடுத்து என்னென்ன ரகசியங்கள் தன் வாழ்வில் புதையுண்டு கிடக்கிறது என்பதை, ஆராயத் துவங்கினார்.அவருக்கு கிடைத்த தகவல்படி, வலேரியின் தாய் கிறிஸ்டி, விபசாரத் தொழிலில் ஈடுபட்டவர். பெர்சி ஸ்புருல் என்பவருடன் ஏற்பட்ட உறவில், பிறந்தவர் தான் வலேரி.மூன்று மாத குழந்தையாக இருந்தபோது, அவரின் பாட்டி எடுத்து வளர்த்தார்; அம்மாவை பார்த்ததில்லை. ஆனால், தந்தை எனக் கூறி, அவரது வீட்டுக்கு அவ்வப்போது வந்து போனது, உண்மையில் வலேரியின் தாத்தா; அதாவது, பெர்சி ஸ்புருலின் தந்தை.

கிறிஸ்டி தான் தன் தாய் எனத் தெரியாமல், குடும்ப நண்பராக நினைத்து, வலேரி பழகி வந்தார். 1984ம் ஆண்டு கிறிஸ்டி இறந்து போனார்.ஆண்டுகள் உருண்டோட, வளர்ந்து பெரியவளான பின், வலேரியை, அவர் தன் மகள் என்பதை அறியாமலே திருமணம் செய்து கொண்டார் பெர்சி. கணவன் இறந்த பின், வலேரியின் வாழ்க்கையில் பல்வேறு ரகசிய முடிச்சுகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்ந்து இருக்கின்றன. சில ஆண்டுகள் கழித்து, தற்போது, 60 வயது ஆன நிலையில், தன் வாழ்க்கையின் உண்மைக்கதை உலகத்துக்கு தெரிய வேண்டும் என, வலேரி நினைத்தார். அவரது கதையை, "நியூயார்க் டெய்லி நியூஸ்' பத்திரிகை செய்தியாக வெளியிட்டுள்ளது. "கிறிஸ்டி மூலமாக என்னுடன் பிறந்த மற்ற சகோதர, சகோதரிகளுக்கும் இந்த உண்மை தெரிய வேண்டும் என, விரும்புகிறேன். என் வாழ்வில் நான் பட்ட துயரம், யாருக்கும் நேரக்கூடாது' என, வலேரி கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mr y - thamizhnadu,இந்தியா
26-செப்-201217:59:46 IST Report Abuse
Mr y இது போல ஒரு கதையை இலங்கை இயக்குனர் ஒருவர் மிகவும் துணிச்சலாக ஆஷார்யா என்ற பெயரில் ரத்தமும் சதையுமாக எடுத்துள்ளார் வளையில் உண்டு. தேடி கண்டு பின் இதன் காரணம் அறிந்து கொள்ளுங்கள் இலங்கை மகா வம்சம் ஒரு சகோதர மணத்தில்தான் ஆரம்பமாகி உள்ளது..
Rate this:
Cancel
Vaitheeswaran Ramaswamy - Toronto,கனடா
26-செப்-201208:25:10 IST Report Abuse
Vaitheeswaran Ramaswamy கை கொட்டி சிரிப்பார்கள் ஊரார் சிரிப்பார்கள் விளையாட்டு கல்யாணமே அது விபரீத உறவாகுமே
Rate this:
Cancel
Samuel - Losangeles,யூ.எஸ்.ஏ
26-செப்-201201:49:58 IST Report Abuse
Samuel அமெரிக்காவின் கலாச்சாரம் எல்லாம் வேசி என்று சொல்லுவது தவறு. தமிழ் சொல்லும் கலாசாரம் அதாவது, குடும்பம் பல்கலை கழகம் என்று நம் முன்னோர் சொல்லும் வழி வாழும் பலரை காணலாம். அமெரிக்காவில் வாழும் சராசரி குடும்பம், நம் கிராமத்து மக்கள் வாழ்கை முறை போன்றே உள்ளது. தமிழன் தவறு கண்டு,சிந்தித்து, பேசி, மகிழ்து , அவனே அதை செய்கிறான். அவன் கற்று கொடுத்த முறை மறந்தான் . மற்றவன் கண்டான், கற்றான், உயர்ந்தான். தமிழனோ, இன்னும் குற்ரம் பார்த்து, சுற்றம் விட்டு வாய் பார்த்து திரிகிறான். என்னே தமிழ் பண். தமிழ் செத்தாலும் , தமிழ் பண் வாழும் தமிழன் என்று சொல்லுபவன் , வாய் பார்த்து வாழ்வான் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X