இந்திய வீரர்களின் தியாக வரலாற்றை பாட புத்தகத்தில் சேர்க்க இஸ்ரேல் திட்டம்

Added : செப் 24, 2012 | கருத்துகள் (1)
Share
Advertisement

ஹைபா:இஸ்ரேலின் ஹைபா நகர விடுதலைக்காக நடந்த போரில், உயிர் நீத்த இந்திய வீரர்களின் வரலாற்றை பாடப் புத்தகங்களில் இடம் பெற செய்ய, நகர நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

துருக்கி நாட்டு பிடியில், 402 ஆண்டுகளாக இருந்து வந்த இஸ்ரேலின் ஹைபா நகரம், 1918ம் ஆண்டில் முதல் உலகப் போரின் போது விடுவிக்கப்பட்டது. இந்த விடுதலைப் போரில், இந்திய ராணுவத்தினர், கூட்டுப் படையுடன் இணைந்து சண்டையிட்டு, ஏராளமானோர் இறந்தனர்.
இந்திய ராணுவத்தினரின் தியாக வரலாறு குறித்து, "ஹைபா ஹிஸ்டாரிக்கல் சொசைட்டி' என்ற அமைப்பு, விரிவான ஆய்வு மேற்கொண்டது. அதில், முதல் உலகப்போரின் போது, ஹைபா நகர விடுதலைக்காக இந்திய ராணுவத்தைச் சேர்ந்த குதிரைப்படை வீரர்கள், தங்கள் உயிரை தியாகம் செய்தது தெரிந்தது.எதிரிகளின் இயந்திர துப்பாக்கி தோட்டா முழக்கங்களுக்கு அஞ்சாமல் துணிச்சலாக முன்னேறிய, இந்திய குதிரைப்படை வீரர்களின் தீரம் குறித்தும், இஸ்ரேலின் பல்வேறு இடங்களில், 900க்கும் மேற்பட்ட இந்திய வீரர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டது குறித்தும், அந்த அமைப்பு விரிவான ஆவணங்களை தயாரித்தது.இதைத் தொடர்ந்து, வரும், 2018ம் ஆண்டில் முதல் உலகப் போரின் நூற்றாண்டு நினைவு விழாவின் போது, இந்திய வீரர்களின் அர்ப்பணிப்புக்கு சிறப்பு மரியாதை செய்ய, ஹைபா நகராட்சி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

இந்திய அரசும் இணைந்து, இந்த விழாவை சிறப்பாக நடத்தித் தர வேண்டும் என்றும், ஹைபா நகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது."தேவையான ஆதரவை இந்திய அரசு வழங்கும்' என, டெல் அவிவ்வில் உள்ள இந்திய தூதரக அதிகாரி வாணி ராவ் உறுதி அளித்துள்ளார்.இதற்கிடையே, ஹைபா விடுதலைப் போரின் போது, இந்திய ராணுவத்தைச் சேர்ந்த குதிரைப்படைகளின் தியாக வரலாறு மற்றும் வீர, தீரச் செயல்களை, பள்ளி மாணவர்களும் தெரிந்துகொள்ளும் வகையில், வரலாற்றுப் பிரிவு பாடப் புத்தகங்களில் அவற்றை இணைக்கவும், ஹைபா நகராட்சி நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக, துணை மேயர் ஹெட்வா அல்மாக் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mujibur Rahman - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
24-செப்-201212:16:13 IST Report Abuse
Mujibur Rahman ஹலோ 1918 இல் இஸ்ரேல் எங்கே இருந்தது ?வரலாற்றை மாற்றி எழுதி மக்களை குழப்ப வேண்டாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X