"மாஜி' மிஸ் மலேசியாவை ஏலம் எடுத்தார் இந்திய வக்கீல்

Updated : செப் 24, 2012 | Added : செப் 24, 2012 | கருத்துகள் (8)
Share
Advertisement
 "மாஜி' மிஸ் மலேசியாவை ஏலம் எடுத்தார் இந்திய வக்கீல்

கோலாலம்பூர்:மலேசியாவில் புகழின் உச்சியில் உள்ள ஐந்து பெண்கள், கூவிக் கூவி ஏலம் விடப்பட்டனர். முன்னாள் "மிஸ் மலேசியா'வை இந்திய வம்சாவளி வழக்கறிஞர், ஏலம் எடுத்து பெருமிதம் அடைந்தார்.

மலேசியாவைச் சேர்ந்த, "அன்டிம்சியா' நிதி மையம், பல்வேறு மக்கள் நலத் திட்டங்களுக்கு உதவி வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியாக, மலேசியாவின் பிரபல பெண்கள் ஐந்து பேரை, ஏலம் விடும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.இந்த ஏலத்தில் விடப்பட்ட பிரபலங்களில், முன்னாள் "மிஸ் மலேசியா' நாடியா ஹெங்கும் ஒருவர். இவரை இந்திய மதிப்பில், 11 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தவர் இந்திய வம்சாவளி வழக்கறிஞர் திபேந்திர ராய்,23.

ஏலத்தில் வென்ற பெருமையுடன், நெஞ்சை நிமிர்த்தி, ராய் பேசுகையில், "நாடியா ஆச்சரியப்பட வேண்டும் என்பதற்காகத்தான் ஏலம் எடுத்தேன்' எனத் தெரிவித்தார்.

நாடியா கூறுகையில், "ஏலத்தில் என்னை விற்றதில், துளி கூட வருத்தம் இல்லை. நல்ல காரியத்துக்காகப் பணம் பயன்படும் என்ற திருப்தியே முக்கியம்' என்றார்.

இருப்பினும், நாடியாவை விட அதிக விலைக்கு ஏலம் போன பிரபலம், எட்மண்ட் பான். இவரை ஆடம் லூ, 22 ஆயிரம் ரூபாய்க்கு வென்றார்.ஏலம் போனவர்கள், வென்றவர்களுடன் ஒரு நாள் பொழுதைக் கழிப்பர்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nelson - TIRUNELVELI,இந்தியா
24-செப்-201215:07:28 IST Report Abuse
Nelson ஏலம் எடுத்த அழகிகளை என்ன செய்வார்கள் ..........................
Rate this:
Cancel
- Jaffna,இலங்கை
24-செப்-201212:22:53 IST Report Abuse
 கனவுகளில் மிதக்க வேண்டாம் தோழர்களே, கொடுத்த காசுக்கு ஒருமுறை அவர்களுடன் சென்று ஒரு நல்ல ஹோட்டலில் சாப்பிட்டு பில் கொடுத்து வரலாம். அவ்வளவுதான்.
Rate this:

Microsoft OLE DB Provider for SQL Server error '80040e31'

Query timeout expired

/xtralog_load_full_taboolabc.asp, line 394