திருப்பதி தேவஸ்தான போர்டு புதிய உறுப்பினர்கள் நியமனத்தை எதிர்த்து வழக்கு

Added : செப் 24, 2012
Share
Advertisement

நகரி : திருப்பதி தேவஸ்தான போர்டின் சேர்மன், உறுப்பினர்கள் நியமனத்தை எதிர்த்து ஆந்திர உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மெகபூப்நகர் மாவட்டம் ஆலம்பூரை சேர்ந்த வழக்கறிஞர் விஜயபாஸ்கர் இந்த மனுவை தாக்கல் செய்தார். கடந்த தேவஸ்தான போர்டின் பதவிக் காலம் சென்ற ஆகஸ்ட், 25ம் தேதியுடன் முடிவடைந்தது. பின்னர், நிபந்தனைகளின் படி, புதிய போர்டு நியமனம் தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்படவில்லை என அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார். திருப்பதி தேவஸ்தான போர்டின் சேர்மன், உறுப்பினர் பதவி நியமனம் செய்வதற்கு வெங்கடேச பெருமாள் பக்தர்களில் இப்பதவிக்கு பக்தி சுபாவம் கொண்ட தகுதியுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பம் பெற வேண்டியுள்ளது. ஆனால், திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவின் சேர்மனாக காங்கிரஸ் எம்.பி., கனுமுரி பாபி ராஜூம், உறுப்பினர்களாக மேலும் பத்து பேரையும் ஆந்திர மாநில அரசு உடனடியாக நியமனம் செய்துள்ளது. தேவஸ்தான விதிகளின்படி, உறுப்பினர்களாக நியமனம் செய்வதற்கு அவர்கள் தகுதியானவர்களா, இல்லையா என்பதை பரிசீலனை செய்வதற்கு எவ்வித விசாரணையும் மேற்கொள்ளவில்லை. நெறிமுறைகள், நிபந்தனைகள் படி நியமனம் செய்யப்படாத தற்போதைய தேவஸ்தான போர்டின் சேர்மன், உறுப்பினர்களின் நியமனம் ரத்து செய்யப்பட வேண்டும். நிபந்தனைகளின் படி, புதிய போர்டு நியமனம் செய்வதற்கு மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X