"பிரதமர் ராஜினாமா செய்வதால் பிரச்னை தீர்ந்து விடாது'

Added : செப் 24, 2012 | கருத்துகள் (1)
Share
Advertisement

டேராடூன் : மத்திய அரசு, சமீபத்தில் எடுத்த அதிரடி முடிவுகளை காரணம் காட்டி, "பிரதமர் பதவி விலக வேண்டும்' என, பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தி வருகிறது. ஆனால், அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான, பி.சி. கந்தூரி, "பிரதமர் ராஜினாமா, பிரச்னைக்கு தீர்வாகாது' என்ற, புதிய தகவலைத் தெரிவித்துள்ளார். இது குறித்து, உத்தரகண்ட் மாநில முன்னாள் முதல்வரான, பி.சி.கந்தூரி, டேராடூனில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: நாட்டில் தலைவிரித்தாடும் பிரச்னைகளுக்கு, பிரதமர் பதவி விலகுவது, தீர்வாகாது. குறுகிய காலத் தீர்வுகளை, நாம் நாடிச் செல்லக்கூடாது. மாறாக, நாட்டில் புரையோடிக் கிடக்கும் ஊழலை, வேரோடு பிடுங்கி எறிவதே பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வாக அமையும். பிரதமர் ராஜினாமா செய்து விட்டால், புதிய பிரதமர் வருவார். அப்போதும், இதே பிரச்னைகள் மீண்டும் மீண்டும், தொடர்ந்து கொண்டே இருக்கும். உத்தரகண்டில் உள்ளதைப் போன்று, நாடு முழுமைக்கும், வலிமையான, லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். பிரதமர் மன்மோகன் சிங், சிறந்த பொருளாதார நிபுணர். பல தரப்பில் இருந்தும் ஏற்படும் நெருக்கடி காரணமாக, அவரால் திறம்படச் செயல்பட முடியவில்லை. கூட்டணி ஆட்சி காரணமாக, சீர்திருத்தங்களை கொண்டு வர முடியாமல் போகிறது. அரசியல் சீர்திருத்தங்களை, அமல்படுத்த வேண்டிய காலம் வந்து விட்டது. ஒவ்வொரு அரசுக்கும், நிலையான குறிப்பிட்ட கால வரம்பை நிர்ணயித்தால், ஸ்திரத்தன்மை ஏற்படும். அரசு ஸ்திரத்தன்மை இழக்கும் போது, திட்டத்தைச் செயல்படுத்த முடியாமல் போகிறது. ஊழல்வாதி, பிரதமர் பதவிக்கு வந்தால், அமெரிக்காவில் உள்ளது போன்று, கண்டனத் தீர்மானம் கொண்டு வந்து, பதவியில் இருந்து நீக்க, சட்டத்தில் வகை செய்ய வேண்டும். இவ்வாறு கந்தூரி கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vaithi Esvaran - Chennai,இந்தியா
24-செப்-201217:14:58 IST Report Abuse
Vaithi Esvaran உண்மை "பிரதமர் மன்மோகன் ராஜினாமா செய்வதால் பிரச்னை தீர்ந்து விடாது&39. ஒருவேளை மன்மோகன் ராஜினாமா செய்தபின் மூத்த ஊழல் தலைவர் என்கிற ரீதியில் சிதம்பரத்தை பிரதமர் ஆக்கினால் நிலைமை இன்னும் மோசமாகும். சோனியா முக்கியமாக நாட்டை விட்டு தொலையவேண்டும். அல்லது காங்கிரஸ் கட்சியே காணாமல் போகவேண்டும். வைத்தி சென்னை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X