அசாமில் மழை வெள்ளம்: 15 மாவட்டங்களில் பாதிப்பு

Added : செப் 24, 2012
Share
Advertisement

கவுகாத்தி : அசாம் மாநிலத்தில், கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால், 15 மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அனைத்து நதிகளிலும், வெள்ள நீர், அபாய அளவைத் தாண்டி ஓடுகிறது. வெள்ளப் பெருக்கில் சிக்கி, இதுவரை ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். கசிரங்கா வனவிலங்கு பூங்கா, பொபித்ரா வனவிலங்கு சரணாலயம் ஆகியவை, தண்ணீரில் மூழ்கிஉள்ளன. இதனால், இங்குள்ள விலங்குகளை, பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கியுள்ள கிராம மக்களை, படகுகள் மூலம் மீட்கும் நடவடிக்கை, தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளம் காரணமாக, ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், சிக்கிம் மாநிலத்தின் வடக்கு பகுதியிலும், கடந்த சில நாட்களாக, பலத்த மழை பெய்து வருவதால், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதோடு, அடிக்கடி நிலச்சரிவும் ஏற்படுகிறது. கடந்த சில நாட்களில் மட்டும், முக்கிய வழித்தடங்களில், ஒன்பது முறை, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில், 21 பேர் பலியாகினர். பலியானவர்களில், நான்கு பேர், இந்தோ - திபெத் பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர்கள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X