திருமலையில் கருட சேவை நெரிசலில் சிக்கி நால்வர் காயம்

Added : செப் 24, 2012
Share
Advertisement

நகரி : திருமலையில் கருட சேவையின்போது, மலையப்ப சுவாமியை தரிசிக்க வந்த பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி நால்வர் காயம் அடைந்தனர்.திருமலை வெங்கடேச பெருமாள் கோவிலில் நேற்று முன்தினம் இரவு கருட வாகன சேவை நடந்தது. மலையப்ப சுவாமி உற்சவராக திருமலை மாட வீதியில் புறப்பட தயாராக இருந்தபோது, கட்டுக்கடங்காத கூட்டம், ஒரே நேரத்தில் முண்டியடித்து முன்னேறியது. இதனால், வாகன மண்டபம் முன்பு, சின்ன ஜீயர் சுவாமி மடம் அருகே நெரிசலில் சிக்கி, நான்கு பக்தர்கள் காயமடைந்தனர். கீழே விழுந்த, 10க்கும் மேற்பட்ட பக்தர்கள், பக்தர்களின் காலில் மிதிபட்டதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கினர். தகவலறிந்த ஸ்ரீவாரி சேவகர்கள், பாதுகாப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நெரிசலில் சிக்கியவர்களை மீட்டனர். காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சையும் அளித்தனர். புது நடைமுறையால் சிக்கல் : கருட வாகன சேவையில் எழுந்தருளும் மலையப்ப சுவாமியை காண்பதற்கு வாகன மண்டபம் முன், திரண்டு இருந்த முக்கிய பிரமுகர்களுக்கு ஆரத்தி, சடாரி மரியாதையுடன் தரிசனம் செய்ய தேவஸ்தான அதிகாரிகள் ஏற்பாடு செய்து இருந்தனர். இந்த நடைமுறை புதிது என்பதால்,சுவாமி புறப்பாடு துவங்கிவிட்டது என நினைத்து குழுமியிருந்த பக்தர்கள் முண்டியடித்து கொண்டு முன்னேறினர். இதனால் நெரிசல் ஏற்பட்டது. முக்கிய பிரமுகர்களுக்கு மரியாதை செய்வதற்காக, சில நிமிடங்கள் ஆனதால் பிரச்னை உருவானது. பக்தர்கள் ஏமாற்றம்:மேலும், கோவிலைச்சுற்றி தடுப்பு வேலிகள் அமைத்து, பக்தர்கள் முண்டியடித்து கொண்டு வராத வகையில் செய்து இருந்தனர். இதனால், பல அடி தூரத்திற்கு மெயின் ரோட்டிலேயே பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். பெரும்பாலான பக்தர்கள் சுவாமியை தரிசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் சென்றனர். மாலை 4 மணிக்கு முன்பாக நான்கு மாட வீதிகளில் அமைக்கப்பட்ட இருந்த தடுப்பு வேலிகளுக்குள் இடம் பிடித்த பக்தர்கள் மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய முடிந்தது. மாலை 6 மணிக்கு மேல் வந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். பெரிய திரைகள் அமைத்து பல இடங்களில் , நேரடி காட்சியை ஒளிபரப்புவதற்கு தேவஸ்தானம் ஏற்பாடுகள் செய்யவில்லை என பக்தர்கள் குறைபட்டு கொண்டனர். இதனால், கருட சேவைக்கு இந்த முறை பக்தர்கள் கூட்டம் எதிர்பார்த்ததை விட குறைவாக இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X