அரசியல் செய்தி

தமிழ்நாடு

குழல் விளக்குக்கு பதில் எல்.இ.டி., விளக்குகள் மாநகராட்சி, நகராட்சிகளில் பொருத்த உத்தரவு

Added : செப் 24, 2012
Share
Advertisement

சென்னை:சேலம் மாநகராட்சி மற்றும் ஓசூர், மறைமலைநகர், கொடைக்கானல், தேனி - அல்லிநகரம், பரமக்குடி உள்ளிட்ட, 10 நகராட்சிகளுக்கு, புதிய அலுவலகக் கட்டடங்கள் கட்ட, 26 கோடி ரூபாய் மானியமாக வழங்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார்.தமிழக அரசின் செய்திக்குறிப்பு:


நகராட்சிகளின் எரிசக்தி மற்றும் பராமரிப்பு செலவைக் குறைக்கும் வகையில், திறன் குறைந்த குழல் விளக்குகளுக்குப் பதிலாக, எல்.இ.டி, சூரிய சக்தி மின் விளக்குகள் பயன்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.நடப்பாண்டில், பரிசோதனை முறையில் ஒன்பது மாநகராட்சிகள், திருப்பூர் மற்றும் தஞ்சை மண்டலங்களிலுள்ள, 35 நகராட்சிகள் மற்றும் 101 பேரூராட்சிகளுக்குட்பட்ட தெருக்களில், எல்.இ.டி., மின் விளக்குகள் பொருத்தப்படும்.


போதிய இடவசதி மற்றும் அடிப்படை வசதியின்றி இயங்கும் சேலம் மாநகராட்சி மற்றும் ஓசூர், மறைமலைநகர், கொடைக்கானல், சங்கரன்கோவில், திருச்செங்கோடு, ராணிப்பேட்டை, தேனி-அல்லிநகரம், தர்மபுரி, துறையூர் மற்றும் பரமக்குடி ஆகிய 10 நகராட்சிகளுக்கு, 37 கோடி ரூபாய் செலவில், புதிய அலுவலகக் கட்டடங்கள் கட்டப்படும்.அதற்கு அரசு மானியமாக, 26 கோடி ரூபாய் வழங்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X