கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பெரியார் தி.க., பிரமுகர் கொலை வழக்கு அக்., 5ல் குற்றப்பத்திரிகை தாக்கல்?

Added : செப் 24, 2012
Share
Advertisement

ஓசூர்: பெரியார் தி.க., அமைப்பாளர் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட, தளி, இ.கம்யூ., - எம்.எல்.ஏ., உள்ளிட்ட, 26 பேர் மீது, அக்., 5ம் தேதி, தனிப்படை போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளதாக, போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓசூர் அடுத்த பாலேபுரத்தை சேர்ந்த, கிருஷ்ணகிரி மாவட்ட, பெரியார் தி.க., அமைப்பாளர் பழனி, 47. இவர் ஜூலை, 5ம் தேதி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், தளி, இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், உள்ளிட்ட, 26 பேர், சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
விசாரணை, ஓசூர், நீதிமன்றத்தில் நடக்கிறது. இந்த வழக்கில் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட, 26 பேரையும் போலீசார் தனித்தனியாக போலீஸ் காவலில் எடுத்து வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
வாக்கு மூலத்தில் கொலை நடந்த வீதம், கொலையில் நேரடியாக பங்கு பெற்றவர்கள், தூண்டியவர்கள், கொலைக்கு பயன்படுத்திய ஆயுதம், வாகனங்கள், எதற்காக கொலை நடந்தது, கொலையில் ஒவ்வொருவருடைய பங்கு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தனிப்படை போலீசார் பதிவு செய்துள்ளனர்.
இந்த விவரங்கள் அனைத்தும், குற்றப்பத்திரிகையில் இடம்பெறுகிறது. கொலையாளிகளுடைய தடயங்கள், ஆதாரங்கள் இன்னும் அறிவியல் ஆய்வுக் கூடத்தில் இருந்து வர வேண்டி உள்ளது. அந்த விவரங்கள் வந்தவுடன் குற்றப்பத்திரிகை தயார் செய்யும் பணி நிறைவடையும்.
அதன் பின் போலீசார், குற்றப்பத்திரிகையை அடுத்த மாதம் முதல் வாரத்தில் தாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
சிறையில் அடைக்கப்பட்ட, எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் உள்ளிட்ட, 26 பேரின் காவலையும், வரும், 5ம் தேதி வரை, நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனால், வரும், 5ம் தேதி, 26 பேரையும் ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்வர் என, போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X