தமிழ்நாடு

கூடன்குளம்: ஒட்டுமொத்த மின்சாரத்தை தமிழகத்திற்கு வழங்க வலியுறுத்தி போராட்டம்

Updated : செப் 24, 2012 | Added : செப் 24, 2012 | கருத்துகள் (1)
Share
Advertisement

தூத்துக்குடி : கூடன்குளத்தில் உற்பத்திசெய்யப்படும் ஒட்டு மொத்த மின்சாரத்தையும் தமிழ்நாட்டுக்கு வழங்க வலியுறுத்தி கோரம்பள்ளத்தில் நேற்றுகாலையில் திடீர் மறியல் போராட்டம் நடந்தது. இதனால் தூத்துக்குடி-திருநெல்வேலி ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கூடன்குளத்தில் அணுமின்நிலையம் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி துவங்குவதற்கான ஆயத்தப்பணிகள் தீவிரமாக நடந்துவரும் நிலையில் அணுஉலையை மூடக்கோரி அணு உலை எதிர்ப்பு குழுவினர் பல்வேறு போராட்டங்களை நடத்திவருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் தற்போது வரலாறு காணாத வகையில் மின்தட்டுப்பாடு ஏற்பட்டு பல மணிநேரம் மின்தடை ஏற்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் தற்போது அணு உலைக்கு ஆதரவாக ஒரு பிரிவினர் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். அணுஉலைக்கு எதிராக போராடுகிறவர்களை கைது செய்ய வலியுறுத்தியும், அணுஉலையில் யுரேனியம் நிரப்பி உடனடியாக மின் உற்பத்தியை துவங்கவேண்டும் என்றும் அணு உலை ஆதரவு குழுவினர் போராடி வருகின்றனர். இதில் ஒருபகுதியாக நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் அணு உலை ஆதரவு குழுவினர் கூடன்குளத்தில் உற்பத்தியாகும் அனைத்து மின்சாரத்தையும் தமிழகத்திற்கே வழங்கவேண்டும் என்றும், உடனடியாக கூடன்குளத்தில் மின்சார உற்பத்தியை துவங்கவேண்டும் என்றும், கூடன்குளம் அணு மின்நிலையத்திற்கு ஆதரவு தரகோரியும் வீடுவீடாக பிட்நோட்டீஸ் மூலம் விநியோகம் செய்தனர்.
இந்நிலையில் திடீரென்று நேற்று காலையில் தூத்துக்குடி-திருநெல்வேலி ரோட்டில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து கூடன்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கு வழங்கவேண்டும் என்று வலியுறுத்தி திடீர் மறியல்போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் செல்வம், கோரம்பள்ளம் விஏஓ முத்தையா, தனிப்பிரிவ ஏட்டு பொன்ராஜ் உட்பட பலர் மறியல் செய்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியல் போராட்டத்தை போராட்டக்காரர்கள் கைவிட்டனர். திடீர் மறியல் போராட்டத்தினால் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திடீர் மறியல் போரட்டம் நடத்தியதாக போராட்டக் குழு தலைவர் ஆனந்த், ஸ்டாலின், இஸ்ரேல்,முருகேசன், யாக்கோபு, ஆண்ட்ரூஸ்,மைக்கேல்,ரஹ்மத்துல்லா, ராஜ்குமார், ஜஸ்டின், அருண்குமார், ஜாய்சன், பாலு, பிரைட்டோ உள்ளிட்ட 37 பேரை போலீசார் போலீஸ்ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்றுவிசாரணை நடத்திவிட்டு அவர்களை விடுவித்தனர். இந்தசம்பவத்தால் தூத்துக்குடியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நெற்றிக்கண் - தமிழகம்,இந்தியா
24-செப்-201218:26:23 IST Report Abuse
நெற்றிக்கண் கேட்பதில் தவறே இல்லை .........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X