தமிழ்நாடு

மின்வெட்டால் கொசுவலை விற்பனை அமோகம் : கொசுவிரட்டிகள் பயன்படுத்த முடியாமல் மக்கள் தவிப்பு

Added : செப் 24, 2012 | கருத்துகள் (2)
Share
Advertisement

கடலூர் மாவட்டத்தில் பகல், இரவு என தொடரும் மின் வெட்டால் "கொசு வலை' விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.
தமிழகத்தில் நகர்ப்பகுதிகளில் 12மணி நேர மின்வெட்டும், கிராமப் பகுதிகளில் 14 மணி நேர மின்வெட்டு அமலில் உள்ளது. "கிரிட்' இணைப்பில் இருக்கும் கடலூரில் 12 மணி நேரம் மின்நிறுத்தம் செய்யப்பட்டு வருகிறது.
கிராமப் புறங்களைப்பொறுத்தவரை எப்போது நிறுத்துவார்கள், எப்போது "சப்ளை' கொடுப்பார்கள் என யாருக்கும் தெரியாது. அதிகபட்சம் 16 மணி நேரத்திற்கும் மேல் மின்சப்ளை நிறுத்தம் செய்யப்படுகிறது. இதே பாணியில்தான் பண்ருட்டி, சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, வடலூர் பகுதியிலும் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
தேர்வு செய்யப்பட்ட நகர, உள்ளாட்சி அமைப்புகள் கழிவு நீர் தேங்காமல் வாய்க்கால்களில் மருந்து அடித்து கொசு உற்பத்தியை கட்டுப்படுத்துவதே இல்லை. ஆங்காங்கே தேங்கி நிற்கும் கழிவுநீர் வாய்க்காலில் உருவாகும் கொசுக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வீடுகளில் அதிகரித்துள்ள கொசுக்களை மின்சாரத்தால் இயங்கக்கூடிய ரசாயன கலவை மற்றும் "எலக்ட்ரிக் பேட்' பயன்படுத்தி விரட்டி வந்தனர்.
தற்போது இரவு நேரங்களில் மின்சப்ளை துண்டிக்கப்படுவதால் அதற்கும் வழியில்லாமல் கொசுக்கடியால் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. காற்றுக்காக கதவை திறந்து வைத்து படுத்தால் ஒருபக்கம் திருடர்கள் பயம், மற்றொரு பக்கம் கொசு பயம். காலை முதல் மாலை வரை உழைத்துவிட்டு இரவு ஓய்வெடுக்கும் நேரத்தில் கொசுத்தொல்லையால் தூக்கத்தை மறந்து கண் விழிக்கும் நிலை உள்ளது.
மின்சாதன கொசு விரட்டிகள் பயன்பாடின்றி குழந்தைகள், முதியோர் கொசுக்கடியால் அவதியடைவதால், கொசு வலை பயன்பாடு அதிகரித்துள்ளது.
இதையடுத்து பெங்களூரு கொசு வலைகள் கடலூர் மாவட்டத்தில் அமோகமாக விற்பனையாகிறது.
இது குறித்து கொசு வலை வியாபாரி பெங்களூரு குன்னப்பன் கூறுகையில், ஒரு மீட்டர் கொசு வலை துணி 10 முதல் 30 ரூபாய் வரை தரத்திற்கேற்ப வாங்கி, வீட்டிலேயே தைக்கப்படுகிறது.
பெங்களூரு பகுதிகளில் குடிசைத் தொழிலாகவே கொசு வலை தயாரிப்பு உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பார்சல் மூலம் கொசு வலை அனுப்பப்படுகிறது. 160 ரூபாய் முதல் 225, 350, 450 ரூபாய் வரை தரத்திற்கேற்ப கொசு வலை உள்ளது. நான் மற்றும் எனது குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் மோட்டார் சைக்கிளில் பெங்களூருவிலிருந்து புறப்பட்டு தனித்தனியாக பல்வேறு பகுதிகளுக்கு செல்வோம். அங்கிருந்த பார்சலை பெற்று கிராமப் பகுதிகளில் விற்பனை செய்து வருகிறோம்.
இங்கு, இரவு நேர மின்வெட்டு அதிகரித்துள்ளதால் கொசு வலை அமோகமாக விற்பனையாகிறது. உணவு உட்பட இதர செலவுகள் போக, போதிய வருவாய் கிடைக்கிறது என்றார்.

-நமது நிருபர்-

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nar Ra - kabul,ஆப்கானிஸ்தான்
24-செப்-201211:40:50 IST Report Abuse
Nar Ra சரியான நிர்வாகம் இல்லை என்பதை தான் இது காட்டுகிறது
Rate this:
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
24-செப்-201209:20:48 IST Report Abuse
மதுரை விருமாண்டி ஹூம்... எல்லாரும் கொசுவுக்கு பயந்து போயஸ் கார்டனுக்கா போக முடியும் ?? கொசுவுக்கு ரத்த தானம் பண்ணிட்டு, அந்த புண்ணியத்துக்கு டெங்கு, மலேரியாவை அள்ளிக்கிட்டு போக வேண்டியது தான்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X