அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் 5 இடங்களில் நடத்த தி.மு.க., ஏற்பாடு

Added : செப் 24, 2012 | கருத்துகள் (2)
Share
Advertisement

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், அ.தி.மு.க., அரசைக் கண்டித்து தி.மு.க., சார்பில் ஐந்து தாலுகாகளில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.தி.மு.க., மாவட்டச் செயலாளர் ராஜா வெளியிட்ட அறிக்கை:அ.தி.மு.க., அரசைக் கண்டித்து கட்சித் தலைவர் கருணாநிதி உத்தரவுப்படி, ஈரோடு மாவட்டத்தில் ஐந்து தாலுகாகளில், பொதுமக்களின் பிரச்னைகளை முன்னிட்டு ஆர்ப்பாட்டம் நடத்துவது என கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்ற, 3 மாதத்துக்குள் மின் தட்டுப்பாட்டை அறவே நீக்குவேன் என்று சூளுரைத்தார். அதற்கு மாறாக தற்போது தினமும், 12 மணி நேர அறிவிப்படாத மின்தடை, இல்லாத மின்சாரத்துக்கு பல மடங்கு மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு, கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.கூட்டுறவு சங்கங்களில் போலி உறுப்பினர்களாக அ.தி.மு.க.,வினரை சேர்த்துக் கொண்டு முறைகேடான தேர்தலை அதிகாரிகள் துணையோடு நடத்த முயற்சிப்பதைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் பங்கேற்க வேண்டும். ஐந்து இடங்களிலும் காலை, 10 மணியளவில் நடக்கும் போராட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் ராஜா தலைமை வகிக்கிறார்.இன்று (24ம் தேதி) சத்தியமங்கலம் புதிய பஸ் ஸ்டாண்டு, செப்டம்பர், 28ம் தேதி கோபி பெரியார் திடல், அக்டோபர், 3ம் தேதி பவானி தாலுகா அலுவலகம், அக்டோபர், 5ம் தேதி பெருந்துறை புதிய பஸ் ஸ்டாண்டு, அக்டோபர், 9ம் தேதி ஈரோடு தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடக்கிறது, என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anandane Alain - Paris-93 ,பிரான்ஸ்
25-செப்-201200:57:41 IST Report Abuse
Anandane Alain அறிவாலயத்தில் சேர்த்துவைத்துள்ள பணத்தை செலவழித்து கூட்டங்கள், மாநாடுகள், மறியல் போராட்டங்கள் நடத்தும் காலம் வருமா? ஏழைகளின் உழைப்பும், பணமும் செலவழித்து பெருமைதேடிக்கொள்ளும் தலைவர்கள் உள்ள கழகம்-போரட்டங்கள் நடத்தி எணிக்கை சேர்ப்பதில் வல்லவர்கள். ஏமாளிகள் உள்ளவரை,தலைவர்கள் குலம் தழைத்து ஓங்கும். அலன் ஆனந்தன்-பிரான்ஸ்.
Rate this:
Cancel
KUNDRATTHU BAALAA - MARUTHAI,இந்தியா
24-செப்-201221:21:21 IST Report Abuse
 KUNDRATTHU BAALAA மற்ற மாவட்ட உநா பினா கதி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X