தமிழ்நாடு

நோபல் பரிசு போட்டி: ஐ.ஐ.டி., தகுதி

Added : செப் 24, 2012
Share
Advertisement

சென்னை: நோபல் பரிசு குறித்து வினாடி-வினா போட்டியில் நடந்தது. இதில் சென்னை ஐ.ஐ.டி.,யின் மனிதவியல் மற்றும் சமூக அறிவியல் துறை சேர்ந்த மாணவர்கள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.சென்னை ஐ.ஐ.டி.,யில் நேற்று நடைபெற்ற வினாடி-வினா போட்டியில், கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட கல்லூரிகளில், ஒரு அணிக்கு மூன்று மாணவர்கள் வீதம், 50 அணிகள் கலந்து கொண்டன. இதில் ஆறு அணிகள் இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகின.இவற்றில் நான்கு அணிகள் சென்னை ஐ.ஐ.டி.,யை சேர்ந்தவை. இந்த ஆறு அணிகளிடையே நடைபெற்ற போட்டியில், ஐ.ஐ.டி.,யின் மனிதவியல் மற்றும் சமூக அறிவியல் துறையை சேர்ந்த மூன்று மாணவர்கள் வெற்றி பெற்றனர்.இவர்கள், டில்லி ஐ.ஐ.டி.,யில் நவம்பர் 3ல் நடக்கும் இறுதிச் சுற்றில் கலந்து கொள்வர். வெற்றி பெறும் மாணவர்கள், சுவீடனுக்கு, அந்நாட்டின் செலவில் சென்று, அங்குள்ள நோபல் அருங்காட்சியகம் மற்றும் பல்கலைகளை பார்வையிடலாம். பி.பி.சி., தொலைக்காட்சியில் வினாடி-வினா நிகழ்ச்சி நடத்தும், ஆதித்யாநாத் முபாயி இந்நிகழ்ச்சியை நடத்தினார். சுவீடன் நாட்டு சென்னை துணை தூதரக அதிகாரி அருண் வாசு இதில் கலந்து கொண்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X