தமிழ்நாடு

அண்ணா வளைவு ஒட்டும் பணி தாமதம் பாலம் கட்டும் செலவை மிஞ்சும் கிரேன் வாடகை

Added : செப் 24, 2012 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை:அவசர கோலத்தில் அறுத்து, பாதியில் விடப்பட்ட அண்ணா வளைவை தாங்கிப் பிடிக்க, தினமும் லட்சக்கணக்கில் கிரேனுக்கு வாடகை செலுத்த நேர்ந்த போதிலும், "மேலிடத்து உத்தரவு இல்லாமல், ஒட்டும் பணியை துவங்க இயலாது' என, நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்கள் கைவிரிக்கின்றனர்.


சொதப்பல்

சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலை மற்றும் அண்ணா நகர் மூன்றாவது நிழற்சாலையை இணைக்கும் வகையில், அமைய உள்ள மேம்பாலம் மற்றும் கீழ்ப்பாலத்திற்கு இடையூறாக இருக்கும், அண்ணா வளைவை அறுத்து அப்புறப்படுத்துவது என, முடிவு செய்யப்பட்டு, கடந்த ஒன்றாம் தேதி, பணிகள் துவங்கின.நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்களின், திட்டத்தில் "சொதப்பல்' ஏற்பட்டதால், வளைவு அவசர கோலத்தில் அறுக்கப்பட்டு, பாதியில் நிறுத்தப்பட்டது. அதன் பின் அண்ணா வளைவை அகற்றாமல், பாலம் கட்டுவது என, முடிவெடுக்கப்பட்டதால், பாதி அறுபட்ட நிலையில் உள்ள வளைவை, 450 டன் கொண்ட கிரேன் தாங்கிப் பிடித்து நிற்கிறது.இதற்காக தினமும் 4 லட்சம் ரூபாய் வாடகை என, ஒப்பந்ததாரர்கள் கூறுகின்றனர். இதுவரை 96 லட்சம் ரூபாய் வாடகையாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வாடகை தொகை நாளுக்கு நாள் எகிறிக்கொண்டே போகும் நிலையில், அறுபட்ட அண்ணா வளைவை ஒட்டும் பணி இன்னும் துவங்கவில்லை.


பாதுகாப்பு இல்லை

அண்ணா வளைவு அருகே காக்கை, குருவிகள் தென்படுகிறதே தவிர, பாதுகாப்புக்கு என போலீசார் ஒருவரையும் காண முடியவில்லை. "24 மணி நேரமும் அண்ணா வளைவை சுற்றிச் சுற்றி வருகிறோம். பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது,' என, தெரிவித்த போலீசார், விநாயகர் சிலை கரைப்பு, நெரிசல் அதிகரிப்பு, சட்டம்-ஒழுங்கு தொடர்பாக மேலதிகாரிகளின் உத்தரவை நிறைவேற்றுவதற்கே நேரம் சரியாக இருக்கிறது. அண்ணா வளைவு பக்கம் யார் செல்கின்றனர் என்பதைக் கூட பார்க்க முடியவில்லை என, அங்கலாய்த்துக் கொள்கின்றனர்.


ஒட்டும் பணி எப்போது?

அண்ணா வளைவை ஒட்டுவதற்கு மும்பையில் இருந்து பொறியாளர்கள் வருகிறார்கள் என்றெல்லாம் தெரிவித்த நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், வளைவு ஒட்டும் பணிக்கான பூர்வாங்க பணிகளாவது நடக்கிறதா எனக் கேட்டால் வாய் திறக்க மறுக்கின்றனர். இவர்கள் இப்படியே காலம் கடத்தினால், பாலம் கட்டி முடிப்பதற்கான செலவுத் தொகையை விட, கிரேனுக்கு செலுத்த வேண்டிய வாடகைத் தொகை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.


காத்திருப்பு

அண்ணா வளைவு விவகாரம் முதல்வர் வரை சென்று விட்டதால், நெடுஞ்சாலைத் துறை உயர் அதிகாரிகள் தலைமையில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி வருகின்றனர். மிகச்சரியாக திட்டமிட்டு, நேர்த்தியுடன் பாலத்தை கட்டி, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பதில், பொறியாளர்கள் தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது. பாலம் கட்டும் பணி எப்போது தொடங்கும்; அண்ணா வளைவை ஒட்டுவது எப்போது என, கேட்டால், அதற்கு மவுனம் தான் பதிலாக கிடைக்கிறது. பொறியாளர் ஒருவர் கூறுகையில், ""மேலிடத்து உத்தரவுக்காக காத்து இருக்கிறோம். விரைவில் பணிகள் துவங்கும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mk - madurai  ( Posted via: Dinamalar Android App )
24-செப்-201211:19:50 IST Report Abuse
mk எல்லா செலுவுகளையும் ஏன் வெட்டித்தனமாக சென்னையிலேயே செலவழிக்குறாங்க...?? "கரன்ட்-கட்"டிலும் சென்னைக்கு சலுகை ஏன்...?? மற்ற ஊர்களெல்லாம் தமிழ்நாட்டை சேர்ந்தது இல்லையா...?? இல்லை, மற்ற ஊர்களில் உள்ளவர்கள் மனிதர்கள் இல்லையா...??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X