பொது செய்தி

தமிழ்நாடு

மின் வாரிய பணிக்கான மூப்பு பட்டியல் வெளியீடு

Added : செப் 24, 2012
Share
Advertisement

காஞ்சிபுரம்: தமிழ்நாடு மின் வாரியத்தில், ஹெல்பர் பணியிடத்திற்கான பதிவு மூப்பு பட்டியலை, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ளது.இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் சித்ரசேனன் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ்நாடு மின் வாரியத்தில், எலக்ட்ரீசியன், ஒயர்மேன், ஹெல்பர் பணியிடங்களுக்கு, ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக, 10ம் வகுப்பு கல்வித்தகுதியுடன், ஐ.டி.ஐ., அல்லது ஐ.டி.ஐ., ஒயர்மேன் முடித்து, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். 1.7.2012 அன்று பொதுப்பிரிவினருக்கு, 30 வயதும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு, 32 வயதும், தாழ்த்தப்பட்டோர் வகுப்பினருக்கு, 35 வயதும் மற்றும் விதிகள் 12 டி-ன்படி, வயது வரம்பு சலுகையும் உள்ளன. இதை பயன்படுத்தி, பதிவுதாரர்கள் தங்களது பதிவு மூப்பு பரிந்துரையை சரிபார்த்து கொள்ளலாம். விடுபாடுகள் ஏதேனும் இருந்தால், மாவட்ட வேலை வாய்ப்பு உதவி இயக்குனரை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X