பொது செய்தி

தமிழ்நாடு

இளம்பெண் தீக்குளிப்பு

Added : செப் 24, 2012
Share
Advertisement

காஞ்சிபுரம்: தாய் வீட்டிற்கு அனுப்ப கணவன் மறுத்ததால், இளம்பெண் தீக்குளித்து, காயமடைந்தார்.வளத்தோட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர், அரிதாஸ். மனைவி பொன்னம்மாள்,20. இருவருக்கும் திருமணமாகி, ஐந்து மாதங்களாகின்றன. பொன்னம்மாள், தன் தாய் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என, கணவரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே வாய் தகராறு ஏற்பட்டது.இதனால் மனமுடைந்த பொன்னம்மாள், நேற்று முன்தினம் இரவு, 8 மணி அளவில், தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். காயமடைந்த அவரை, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். மாகரல் காவல் துறையினர் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X