சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நான்கு பெண்கள் மாயம்

Added : செப் 24, 2012
Share
Advertisement

காஞ்சிபுரம்: வெவ்வேறு இடங்களில், இளம் பெண்களை காணவில்லை என, காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் திருச்சோலை தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகள் கவிதா, 20. பச்சையப்பன் மகளிர் கல்லூரியில் இளங்கலை தமிழ் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். 21ம் தேதி கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் விஷ்ணுகாஞ்சி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.காஞ்சிபுரம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் தண்டபாணி மகள் மீரா, 18. (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த 22ம் தேதி, தனது தோழியின் திருமண நிச்சயத்திற்கு சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து, விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் அவரது தாயார் சரஸ்வதி கொடுத்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.கூடுவாஞ்சேரி மாடம்பாக்கம் வள்ளலார் நகரை சேர்ந்தவர் ராஜாமணி மனைவி மாரிமுத்து, 40. சித்தாள் வேலை செய்து வந்தார். 22ம் தேதி மாலை, வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. கணவர் ராஜாமணி கொடுத்த புகாரின் பேரில், கூடுவாஞ்சேரி காவல் துறையினர் தேடி வருகின்றனர்.பெருநகர் எம்.என்.கண்டியை சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவரது மனைவி சகாயமேரி, 26. கடந்த, 22ம் தேதி, கணவன் மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. மனமுடைந்த சகாயமேரி வீட்டை விட்டு வெளியே சென்றார். பின், வீடு திரும்பவில்லை. கணவர் கொடுத்த புகாரின் பேரில், பெருநகர் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X