சம்பவம் செய்தி

தமிழ்நாடு

100 வயது மரம் தீ வைத்து எரிப்பு

Added : செப் 24, 2012
Share
Advertisement

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில், பறவைகள் புகலிடமாக இருந்த நூறாண்டு பழமையான மரம், மர்ம நபர்கள் வைத்த தீயால், வேறோடு சரிந்தது.மாமல்லபுரத்தில், கோனேரி அருகில், இரு புராதன குடைவரை மண்டபங்கள் உள்ளன. இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இவ்வளாகத்தில், மண்டபத்திற்கு அருகே வேப்ப மரங்கள், காட்டுவாகை மரங்கள், செடி, கொடிகள் அடர்த்தியாக வளர்ந்து, இயற்கை வனமாக உள்ளது. இங்கு, ஏரிக்கரையில் உள்ள ஒரு காட்டுவாகை மரம், நூறாண்டு பழமையானது.பறவைகளின் புகலிடம்இம்மரம், மிக உயரமாக, பெரிய கிளைகளுடன் படர்ந்திருந்தது. பறவைகளுக்கு புகலிடமாகவும் விளங்கியது. இப்பகுதி முன்பு முறையாக பராமரிக்கப்பட்டபோது, மண்டபங்களை காணவும், சுற்றுச்சூழலை ரசிக்கவும், வெளிநாட்டுப் பயணிகள் மட்டும், இப்பகுதிக்கு வந்துசென்றனர்.கடந்த பல ஆண்டுகளாக பராமரிக்கப்படவில்லை. இதனால், குடைவரை மண்டபங்கள் பகுதி காடாக மாறிவிட்டது. உல்லாசத்திற்கு வரும் காதலர்களுக்கும், சமூகவிரோதிகளுக்கும் புகலிடமாகி விட்டது. கடந்த 21ம் தேதி மாலை வந்த மர்மநபர்கள், நூறாண்டு பழமையான காட்டுவாகை மரத்தின், பொந்தில் தீவைத்துள்ளனர். சில நிமிடங்களில், தீ மரத்தின் வேர்ப்பகுதியில் ஊடுருவி, சேதத்தை ஏற்படுத்தியது. புகை பரவியதைக் கண்டு, சிலர் தொல்பொருள் ஆய்வுத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.பொதுமக்கள் அதிர்ச்சி தீயணைப்புத் துறையினர் மரத்தில் மேலும் தீ பரவாமல் அணைத்தனர். இருப்பினும், வேர்ப்பகுதி முற்றிலும் எரிந்ததால், பலமிழந்து, வேறோடு மரம் சரிந்தது. அதன் உட்பகுதி யில் தீ கனன்று, மறுநாளும் புகைந்தது. தொல்பொருள் துறை ஊழியர்கள், தீயை அணைத்தனர். நூறாண்டு கால மரம், சமூகவிரோதிகளால் அழிந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.இது குறித்து, மாமல்லபுரம் பராமரிப்பு அலுவலர் வாசுதேவனிடம் கேட்டபோது, ""அடையாளம் தெரியாதவர்கள் வைத்த தீயால் மரம் எரிந்து விழுந்தது. இதுபற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X