சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நான்கு மாதமாக உலா வந்த திருட்டு கும்பல்

Added : செப் 24, 2012
Share
Advertisement

மறைமலை நகர்: வண்டலூர் அருகே, மேம்பாலம் கட்டும் இடத்தில் இருந்து, இரும்புக் கம்பிகளை திருடிய ஆறு பேரை, காவல் துறையினர் கைது செய்தனர்.மண்ணிவாக்கம் அருகே, வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலைக்கான மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு, சமீபகாலமாக இரும்பு கம்பிகள் திருடு போவது அதிகரித்து வந்தது. சிக்கினர்இதுதொடர்பாக, காவல் துறை யினர் விசாரித்து வந்தனர். இந்நிலையில், ஓட்டேரி காவல் உதவி ஆய்வாளர் லூர்துசாமி தலைமையில், காவல் துறையினர் நேற்று முன்தினம் இரவு, அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வண்டலூர் அருகே "டாடா மேஜிக்' ஆட்டோவில் இரும்பு கம்பிகளை ஏற்றிச் சென்ற ஆறு பேர் கொண்ட கும்பல், காவல் துறையினரை கண்டதும் தப்பி யோடியது. காவல் துறையினர் அவர்களை துரத்திப் பிடித்தனர். விசாரணையில், அவர்கள், நெற்குன்றத்தைச் சேர்ந்த சிவகுமார், 30. புதுநல்லூரைச் சேர்ந்த செல்வகுமார், 26. மதுரவாயிலைச் சேர்ந்த செல்வம், 26. முகப்பேரைச் சேர்ந்த பார்திபன், 36. கோயம்பேட்டில் இரும்புக்கடை நடத்தி வரும் அயூப்கான், 42 மற்றும் சரவணன், 45, என தெரிய வந்தது.தொடர் திருட்டுகடந்த நான்கு மாதங்களாக, இரவு நேரங்களில் இவர்கள் இங்கு வந்து, இரும்பு கம்பிகளை திருடி விற்பனை செய்தது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து ஆட்டோ மற்றும் 50 ஆயிரம் மதிப்பிலான இரும்பு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட ஆறு பேரும் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர். காப்பர் கம்பி திருட்டு: மண்ணிவாக்கம் பகுதியில் உள்ள தனியார் அலைபேசி கோபுரத்தில், உயர் ரக காப்பர் ஒயர்களை மர்ம நபர்கள் சிலர் அறுத்துக் கொண்டிருப்பதாக அப்பகுதி மக்கள் ஓட்டேரி காவல் துறையினருக்கு புகார் செய்தனர். காவல் துறையினர் அங்கு சென்றபோது, மூன்று வாலிபர்கள் காப்பர் கம்பிகளை திருடிக் கொண்டிருந்தனர். விசாரித்ததில், சிதம்பரத்தைச் சேர்ந்த தரணிராஜன், 23. சிங்கபெருமாள்கோவிலைச் சேர்ந்த கவுதமன், 23 மற்றும் தாம்பரத்தைச் சேர்ந்த கண்ணன், 26, ஆகியோர் என தெரிய வந்தது. மூவரையும் கைது செய்த காவல் துறையினர், நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X