பொது செய்தி

இந்தியா

இரண்டே மாதத்தில் சேதமான திருநள்ளார்- விழுதியூர் சாலை

Added : செப் 24, 2012
Share
Advertisement

காரைக்கால் : காரைக்காலில் ரூ.2 கோடியில் போடப்பட்ட திருநள்ளார்-விழுதியூர் தார் சாலை 2 மாதத்தில் பிதுங்கியது.காரைக்காலில் கோவில் நகர திட்டத்தின்கீழ் திருநள்ளார் சுற்றியுள்ள கிராமங்களை இணைக்கும் சாலைகள் புதிதாக அமைக்கப்படுகிறது. அதன்படி திருநள்ளாரில் இருந்து விழுதியூரை இணைக்கும் 2 கி.மீ., தூரமுள்ள தார் சாலை கடந்த 2 மாதங்களுக்கு முன் 2 கோடி ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்டது. இந்த சாலை அமைத்த சில தினங்களில் பல இடங்கள் குண்டும் குழியுமாக மாறியது. தற்போது, அந்த சாலை வழியாக கனரக வாகனங்கள் செல்வதால் சாலைகள் பிதுங்கி பள்ளங்கள் உருவாகியுள்ளது.இரண்டு கோடி ரூபாயில் பணிகள் நடக்கும் போது, அவை தரமான முறையில் நடக்கிறதா? சரியான உயரத்தில் சாலை அமைக்கப்படுகிறதா? என பொதுப் பணித் துறை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. "மாமூலான' பணிகளை மட்டும் கண்காணிக்கின்றனர். இதற்கு புதுச்சேரி உயர் அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதால், தரமற்ற பணிகள் மூடி மறைக்கப்படுகிறது. முதல்வர் உரிய நடவடிக்கை எடுத்து விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.காரைக்காலில் பொதுப்பணித்துறை மேற்கொள்ளும் அனைத்து பணிகளும் அதிகபட்ச மதிப்பீட்டில் செய்து முடிக்கப்படும். சாதாரணமாக 2 லட்சத்தில் நடக்கும் பணிக்கு 5 லட்சம் வரை மதிப்பீடு செய்யப்பட்டு பணிகள் நடக்கும். இதற்கு உதாரணம் தகராத்தால் ஆன கலெக்டர் கார் ஷெட் 4 லட்சத்தில் பொதுப்பணித்துறை செய்து முடித்த சாதனை குறிப்பிடத்தக்கது.பல லட்சம், கோடிகளை அதிகரித்து மதிப்பீடு செய்து திட்டங்களை மேற்கொண்டாலும், அவை தரமானதாக உள்ளதா என்றால் அதுவும் கிடையாது. தரமற்ற பணிகளால் கட்டிடங்கள் இடிந்து விழும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் ரூ.3 கோடியில் போடப் பட்ட கோவில் பத்து மேலகாசாக்குடி இணைப்பு சாலை சில மாதங்களிலேயே பஞ்சராகி குண்டும் குழியுமாக மாறியது.சனிபகவான் கோவிலில் பொதுப் பணித் துறை மூலம் 2 கோடியில் மேற்கொள்ளப்பட்ட வசந்த மண்டபம் பணியின்போது கான்கிரீட் தளம் இடிந்தது, அதைத்தொடர்ந்து, 30 லட்சம் ரூபாய் செலவில் திருநள்ளார் வாஞ்சியாறு பாலம் பலப்படுத்தும் பணியின்போது, கான்கிரீட் தளம் சரிந்து விழுந்தது. தொடர்ந்து பொதுப்பணித்துறையின் தரமற்ற பணிகளின் வரிசையில் தற்போது திருநள்ளார் விழுதியூர் சாலையும் இணைந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X