தினமலர் "ஷாப்பிங்' பெருவிழா; இன்னொரு சித்திரை திருவிழா : துவங்கியது மதுரையில்...

Updated : ஆக 05, 2010 | Added : ஆக 05, 2010 | கருத்துகள் (7) | |
Advertisement
மதுரை : "இன்னொரு சித்திரை திருவிழா மதுரையில் நடக்கிறதோ' என கேட்கும் அளவிற்கு, "தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' கண்காட்சி, நேற்று அமோகமாக துவங்கியது. ஆக.9 வரை, காலை 10.30 மணி முதல் இரவு 8 மணி வரை தென் மாவட்ட மக்கள், பயனுள்ள வகையில் பொழுதை போக்கும் வகையில் இது நடக்கிறது. எப்போதுமே வித்தியாசமான அனுபவத்தை வாசகர்களுக்கு தருவது தினமலர் வழக்கம். கண்காட்சி அமைப்பதிலும் இதை பின்பற்ற
Dinamalar, Smart Shoppers Expo, opened, தினமலர், ஸ்மார்ட் ஷாப்பர்ஸ், எக்ஸ்போ, திறப்பு விழா,

மதுரை : "இன்னொரு சித்திரை திருவிழா மதுரையில் நடக்கிறதோ' என கேட்கும் அளவிற்கு, "தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' கண்காட்சி, நேற்று அமோகமாக துவங்கியது. ஆக.9 வரை, காலை 10.30 மணி முதல் இரவு 8 மணி வரை தென் மாவட்ட மக்கள், பயனுள்ள வகையில் பொழுதை போக்கும் வகையில் இது நடக்கிறது.


எப்போதுமே வித்தியாசமான அனுபவத்தை வாசகர்களுக்கு தருவது தினமலர் வழக்கம். கண்காட்சி அமைப்பதிலும் இதை பின்பற்ற தினமலர் தவறுவதில்லை. தென் மாவட்ட மக்களுக்கு, புதுமையான அனுபவத்தை தரும் நோக்கத்துடன், இக்கண்காட்சி தொடங்கி உள்ளது. தமுக்கம் மைதானத்தில் கண்காட்சி ஸ்டால்களை கலெக்டர் சி.காமராஜ் நேற்று காலை திறந்து வைத்து, பார்வையிட்டார். அவர் கூறும்போது, ""வெறும் பொழுதுபோக்காக இல்லாமல், பயனுள்ள வகையிலும் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது'' என்று பாராட்டினார். பி.ஆர்.ஓ., சரவணன் உடன் இருந்தார்.


பெண்கள் பிரிவை, மாநகராட்சி கமிஷனர் எஸ்.செபாஸ்டின், திறந்து வைத்தார். அவருடன் தலைமை பொறியாளர் சக்திவேல், மக்கள் தொடர்பு அலுவலர் ஆர்.பாஸ்கரன் கலந்து கொண்டனர். மீன் காட்சியகத்தை போலீஸ் கமிஷனர் பாலசுப்பிரமணியன் திறந்து வைத்தார்.  உதவி கமிஷனர்கள் சண்முகநாதன், சோமசுந்தரம் கலந்துகொண்டனர். பறவைகள் கண்காட்சியை மனித நேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி, "மேஸ்' விளையாட்டை "போத்தீஸ்' நிர்வாக இயக்குனர் முருகேஸ் திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சிகளில், தினமலர் வெளியீட்டாளர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி, தினமலர் சார்பாக, கி.ராமசுப்பு, எல்.ஆதிமூலம், கி.வெங்கட்ராமன் உடன் இருந்தனர்.


என்னென்ன புதுமைகள்: இந்த ஆண்டு, கண்காட்சியில் இடம் பெற்றுள்ள இலவச மீன்கள் காட்சியகத்தில், நீங்கள் கேட்டறியாத, பார்த்தறியாத, வண்ண, வண்ண மீன்கள் இடம் பெற்றுள்ளன. அதிலும் பிரத்யேகமாக கடல் தண்ணீரை கொண்டு வந்து, அதில் மட்டுமே வளரும் மீன்கள், உயிருள்ள சிப்பி மற்றும் ஜெல்லி மீன்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. வினோத பறவைகளின் கண்காட்சியில் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் இடம் பெற்றுள்ளன. பெண்களுக்கான விசேஷ பிரிவில், மைதிலீஸ் அழகு பயிற்சி, வகை, வகையான மெஹந்தி, உடனுக்குடன் உங்கள் விருப்பப்படி தயாரித்து வழங்கப்படும் அலங்கார நகைகள், அப்பல்லோ மருத்துவமனையின் இலவச ஆலோசனை, உங்கள் உருவத்தை கண் முன்னே வரையும் கேலிச்சித்திரங்கள், டாட்டூ ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன. அவசர தேவைக்கு மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் இலவச ஆம்புலன்ஸ் சேவையும் உள்ளது.


நமது மதுரையின் கலாச்சாரம் நமக்கு தெரிய வேண்டாமா? இதற்காகவே, மதுரை மக்கள் பார்த்தறியாத, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சித் துறை வழங்கும் ஆயிரம் புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சி, இலவசமாக வைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா அலுவலர் தர்மராஜ் இதற்கான ஏற்பாட்டை செய்துள்ளார். தென் மாவட்ட மக்கள், சுவைக்க விரும்பும், டொமினோ பிஸா, கேரள புட்டு வகைகள், மற்றும் பல்வேறு மாநிலங்களின் உணவு வகைகள் தனி ஸ்டால்களாக அமைக்கப்பட்டுள்ளன. உங்கள் கண் முன்னே, "செதுக்கப்படும்' மணல் சிற்பங்கள், பாய்ந்து வரும் பந்தை சமாளிக்கும் அனுபவத்தைத் தரும், "பவுலிங் மெஷின்', அழகு கிளிகளின் சாகசங்கள், "ஜிம்னாஸ்டிக்ஸ்' வீரர்களின் சாகசங்கள், நாய் கண்காட்சி என, தொடர்ந்து உங்களை ஆச்சரியப்பட வைக்கப் போகிறது இக்கண்காட்சி.


நம் வீடுகளில் பயன்படுத்தும் தண்ணீரின் தரத்தை இலவசமாக தெரிந்து கொற்வதற்காகவே, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அமைக்கும் ஸ்டாலில், பரிசோதித்துக்கொள்ளலாம். இந்த பட்டியல் இன்னமும் முடியவில்லை. சலுகை விலையில் உங்களுக்கு தேவையான பொருட்கள், எங்கும் கிடைக்காத குறைந்த விலையில் இங்கு கிடைக்கும். உங்கள் ஷாப்பிங் அனுபவத்தை குதூகலமாக்க, 200க்கும் மேற்பட்ட "ஏசி' ஸ்டால்கள், தயாராக இருக்கின்றன. நடக்க சிரமப்படும் முதியவர்களும், குஷியாக சுற்றிப் பார்க்க வீல் சேர் வசதி, குழந்தைகள் குலூகலத்துடன் விளையாட மூன்று சக்கர சைக்கிள்களும் உண்டு.


வெளிநாட்டு அனுபவம்: மதுரையில் இதுவரை நடந்த கண்காட்சிகளில் உள்நாட்டு ஸ்டால்களைத் தான் பார்த்திருப்பீர்கள். தற்போது முதன்முறையாக, தினமலர் "ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' கண்காட்சியில் தாய்லாந்து, கென்யா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் உற்பத்தி பொருட்களும் இடம் பெற்றுள்ளன. வெளிமாநில ஸ்டால்களும் ஏராளமாக உண்டு. திக்குமுக்காட வைக்கும் விளையாட்டு: ஒவ்வொரு கண்காட்சியிலும் ஒரு புதுமையை அறிமுகப்படுத்துகிறது தினமலர். இக்கண்காட்சியில், இந்த ஆண்டு, "போத்தீஸ்' நிறுவனம் வழங்கும், "மேஸ்' என்ற "வழி தேடும்' விளையாட்டு இடம் பெற்றுள்ளது. எவரையும் திக்குமுக்காட வைக்கும் இவ்விளையாட்டு, மதுரைக்கு முதன்முறையாக வந்துள்ளது.


இக்கண்காட்சியின் "அசோசியேட் ஸ்பான்சார்'களாக மதுரை அனிதா ஸ்டோர்ஸ், ஸ்ரீமீனாட்சி பேன் ஹவுஸ், என்.ஜே.பி., (தேசிய சணல் வாரியம்), ஆச்சி ஆகிய நிறுவனங்களும், "கோ-ஸ்பான்சார்'களாக பட்டர்பிளை, இண்டிகா விஸ்டா, அபி, சூர்யா, ஆதவன், சபோல்ஸ் ஆகிய நிறுவனங்களும், ரேடியோ பார்ட்னராக "ரேடியோ மிர்ச்சி'யும் இருக்கும்.


மணக்க.... சுவைக்க... பிரியாணி, சைனீஸ் வகைகள்: கண்காட்சி என்றாலே மிளகாய் பஜ்ஜி, டில்லி அப்பளம் என்ற கருத்தை மாற்றுவதற்காக திண்டுக்கல் வேணு பிரியாணி ஸ்டால் இடம் பெற்றுள்ளது. தனி சுவையில் மட்டன், சிக்கன் பிரியாணி வகைகள், இவற்றுக்கு "ஜோடியாக' தால்சா, தயிர் பச்சடி, சிக்கன் குழம்பு, கோலா உருண்டை, சில்லி சிக்கன், லாலிபாப் ஆகிய வகைகள், உங்கள் கண் எதிரே, "பிரஷ்' ஆக அப்போதைக்கு அப்போது தயாரித்து வழங்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்திற்கு உரித்தான அகலமான மைசூர் இட்லி, போண்டா, எலுமிச்சை, புளி, தக்காளி சாதங்கள், மிளகாய் பஜ்ஜி, இதற்கு "ஜோடியாக' மைசூர் சட்னி வழங்கப்படுகிறது. சைனீஸ் உணவு ஸ்டாலில், உண்மையான சீன சுவையில் சில்லி, பெப்பர் சிக்கன், சிக்கன் மஞ்சூரியன், வெஜிடபிள் பக்கோடா, பிரைடு ரைஸ் உங்கள், நாவுக்கு சுவை கூட்ட காத்திருக்கின்றன.


பிளஸ் 2 மாணவர்களுக்கு பரிசு: தற்போது பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் 5 பேருக்கு தினமும் பரிசு வழங்க, தனி ஸ்டால் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தரப்படும் படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தால், அதில் இருந்து தேர்வு செய்யப்படும் அதிர்ஷ்டசாலி மாணவர்களுக்கு பரிசு வழங்கப்படும்.


கண்காட்சி நேரம்: காலை 10.30 மணி முதல் இரவு 8 மணி வரை


நுழைவு கட்டணம்: 5 வயது முதல் 12 வயதிற்குட்பட்டவர்களுக்கு ரூ.10. பெரியவர்களுக்கு ரூ.30.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பா.சரவனகார்த்திக் - Rajapalayam,இந்தியா
05-ஆக-201020:25:21 IST Report Abuse
பா.சரவனகார்த்திக் ஆஹா தினமலர் எங்கள் வாழ்வின் ஒரு ஒரு காலையின் புது மலர் என்று தான் நினைத்தோம்!! இன்று தான் தெரிந்தது இது ஒருவர வாழ்வின் vasanththa மலர் என்று ஒரு ஒரு விசியத்திலும் புதுமை. அதுவே எங்கள் தினமலரின் பெருமை!!!!!!! எங்கள் ஊருக்கும் கொண்டு வாருங்களேன்!!
Rate this:
Cancel
Ashok - Madurai,இந்தியா
05-ஆக-201014:44:55 IST Report Abuse
Ashok புதுமை... வினோதம்... வித்தியாசம்... பொழுதுபோக்கு என அத்தனைவிதமான ரசனைகளையும் அள்ளித் தரும், "தினமலர் "தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் - கொண்டாட்டம்..."
Rate this:
Cancel
thriupathie - london,யுனைடெட் கிங்டம்
05-ஆக-201014:23:07 IST Report Abuse
thriupathie Thanks a lot for arranging this shopping in my native place. I would like to see this wonderful shopping but it is not possible. congratulations to my people.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X