பதிவு செய்த நாள் :
கருத்துகள் (12)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை முடிந்து, வீடு திரும்பு வோருக்கான தொடர் சிகிச்சை நடைமுறைகள் மற்றும் அவர்கள் பின்பற்ற வேண்டிய அறிவுரைகள் ஆங்கிலத்தில் கொடுக்கப்படுவதால், பலர் புரியாமல் தவிக்கின்றனர். இந்த நடைமுறையில் மாற்றம் செய்து, தமிழில் அறிவுரை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளியாக சிகிச்சை பெறுவோர், சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் போது, "டிஸ்சார்ஜ் சம்மரி' வழங்கப்படும்.

ஆங்கிலத்தில் அறிவுரை: இதில், நோயாளி மருத்துவமனைக்கு வரும் போது இருந்த நிலை, அளிக்கப்பட்ட சிகிச்சை விவரம், கொடுக்கப்பட்ட மருந்துகள், தற்போதைய உடல் நிலை பற்றிய விவரம், தொடர் சிகிச்சைக்கு உரிய அறிவுரை அல்லது, வீடு திரும்பிய பின் கடைபிடிக்க வேண்டிய நடைமுறை பற்றிய அறிவுரைகள் இருக்கும். இந்த குறிப்புகள் அனைத்தும், ஆங்கில மொழியில் எழுதி தரப்படுகிறது. நோயின் தன்மை, அளிக்கப்பட்ட சிகிச்சை ஆகிய விவரங்கள், மருத்துவர்களுக்கு தெரிந்தால் போதும் என்ற கருத்து உள்ளது. இவற்றை ஆங்கில மொழியில் எழுதுவதால் பிரச்னை ஒன்றும் இல்லை என, நோயாளிகளும் தெரிவிக்கின்றனர். ஆனால்,

சிகிச்சைக்கு பின் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற அறிவுரை, நோயாளிக்கு கண்டிப்பாக புரிய வேண்டும். அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வருவோர் பெரும்பாலும், ஆங்கிலம் அறியாதவர்கள் என்பதால், ஆங்கிலத்தில் அளிக்கப் படும் மருத்துவ அறிவுரையை புரிந்து கொள்வதில், அவர்களுக்கு சிக்கல் ஏற்படுகிறது. உதாரணத்திற்கு, பிரசவம் முடிந்து வீடு திரும்பும் பெண்களுக்கு, அறிவுரைகள் ஆங்கிலத்தில் அச்சடிக்கப் பட்ட துண்டு சீட்டுகளாக வழங்கப்படுகிறது. இவற்றில், குழந்தையை எவ்வாறு பராமரிக்க வேண்டும்; பாலூட்டுவதற்கான கால இடைவெளி; பாலுட்டும் நேரத்தில் உடல் பராமரிப்பு போன்ற முக்கிய தகவல்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், இவை ஆங்கிலத்தில் இருப்பதால், பெரும்பாலான பெண்களுக்கு பயனில்லாமல் போய்விடுகிறது.
இது குறித்து, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில், சிகிச்சை பெற்று திரும்பிய, சுமதி கூறியதாவது: ஏழைகள் தான் பெரும்பாலும் இங்கு வருகின்றனர். ஆங்கிலத்தில் புலமை உள்ளவர்கள் இதில் அதிகம் இருக்க வாய்ப்பில்லை. ஆலோசனைகளை தமிழில் அச்சடித்து கொடுத்தால், அதை படித்து தெரிந்து கொள்ளவும், அதை நடைமுறையில் பின்பற்றவும் வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு சுமதி கூறினார். மேலும், ""ஆங்கிலத்தில் அறிவுரைகள் இருப்பதால், அவற்றால் பயன்

Advertisement

இல்லை. இதில் என்ன எழுதி இருக்கிறது என்று மருத்துவமனை ஊழியர் களிடம் கேட்டால், திட்டு தான் விழும். தமிழில் விவரங்களை தரும் முறையை அரசு மருத்துவமனையில் கொண்டு வர வேண்டும்,'' என்றார்.

"தமிழ் என்றால் சிரமம்': நோயாளிகளுக்கான அறிவுரை களை தமிழில் வழங்குவது குறித்து, சுகாதார துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் மட்டும் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வீடு திரும்புவோருக்கு, டிஸ்சார்ஜ் சம்மரியில், அவர்கள் விரும்பிக் கேட்டால் அறிவுரைகளை தமிழில் எழுதி கொடுக்கிறோம். இதற்காக, ஒரு ஸ்டெனோ பணியில் உள்ளார். இவ்வாறு அவர் கூறினார். மேலும், ""மற்ற எல்லா அரசு மருத்துவமனைகளிலும் ஆங்கிலத்தில் தான் உள்ளது. மருத்துவ தகவல்களை, தமிழில் எழுதி கொடுப்பது சற்று சிரமமான விஷயம். அரசு டிஸ்சார்ஜ் சம்மரி தாள்களை அச்சடித்து வழங்கும் போதே, அதை தமிழில் அச்சடித்தால், நடைமுறை மாற வாய்ப்பு உண்டு,'' என்றார். தமிழ், தமிழர், தமிழ் நாடு என, தவறாமல் முழங்கும் நமது அரசியல்வாதிகளின் கவனம், சற்று, பாக் ஜலசந்தியின் அப்புறத்தில் இருந்து இப்புறம் திரும்பினால், தமிழ் பிழைக்க, தமிழர் வாழ்வு மேம்பட வழிபிறக்கும்.
- நமது நிருபர் -
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (12)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mk - madurai  ( Posted via: Dinamalar Android App )
28-செப்-201223:08:29 IST Report Abuse
mk அப்பா "அதி்மேதாவி" ராமராசு..! முதலில் மருத்துவர்களை மதி்க்க கற்று கொள்ளுங்கள்.. மருத்துவர்கள் ஒன்றும் கடவுள் இல்லை, உத்தரவாதம் கொடுப்பதற்கு..! நீங்கள் எல்லா தவறையும் செய்துவிட்டு கடைசியில் நோய் வந்ததும் மருத்துவரிடம் பவ்வியமாக வந்து நிற்பீர்கள், அவர்கள் உங்களை உபசரிக்கனுமாக்கும்...?? எத்தனை பேர் புகை பிடித்த கையோடு மருத்துவரிடம் வந்து எனக்கு இருமல் இருந்துகிட்டே இருக்கு, குணமாகவே மாட்டேங்குதுன்னு சொல்வாங்க தெரியுமா...?? மருத்துவர்களை மதி்த்து நம்பிக்கை வையுங்கள், அப்போவே பாதி் நோவு குணமாகிவிடும்...
Rate this:
Share this comment
Cancel
kadal nandu - Dhigurah,மாலத்தீவு
28-செப்-201222:21:38 IST Report Abuse
kadal nandu நல்ல கட்டுரை......அரசு மருத்துவமனை = அவல மருத்துவமனை ?சீர்கெட்ட நிர்வாகம் . சம்பத்தப்பட்ட அதிகாரிகள் எதையும் ( நோயாளிகள், ம(ரு)று த்தவர்கள், சுற்றுசூழல் )கண்டு கொள்வதில்லை ... நிர்வாகம் சரியாக இயங்கும் பட்சத்தில் தமிழ், ஆங்கிலம் மட்டுமின்றி எந்த ஒரு பிரச்சனையும் உருவாகாது ....எடுத்துகாட்டாக .பெரும்பாலான மாலதீவு அரசு மருத்துவ மனைகள் நம் நாடு தனியார் மருத்துவமனைகள் ஐ விட மேலானது ...so...இருக்கிறவன் ஒழுங்கா இருந்தால் .......????
Rate this:
Share this comment
Cancel
Ananda Ayyappan JV - Düsseldorf,ஜெர்மனி
28-செப்-201214:51:16 IST Report Abuse
Ananda Ayyappan JV தமிழ் நாட்டில் தமிழ் இல்லை எனில் வேறு எங்கு நாம் அதனை எதிர்பார்க்க இயலும்? இயன்ற அளவு தமிழினில் பேச்சு மற்றும் எழுத்து இருத்தல் வேண்டும். ஆங்கிலத்தில் இருக்கும் பட்சத்தில், ஆங்கில அறிவு படைத்த மக்கள் தாமாக முன்வந்து தமிழக்கம் செய்து அதனை புரியவைத்தல் வரவேற்கத்தக்கது
Rate this:
Share this comment
Cancel
RAVI KUMAR. - chennai,இந்தியா
28-செப்-201212:36:51 IST Report Abuse
RAVI KUMAR. The Idea was good, but still all the medicine manufactures in india not keeping the Drug information leaflet inside the medicine, It is very use ful to the comsumer and rights to know the medicine in their mother tounge, The leaflets mentions the drug name, use, side effects, advers effect, ect, when it is become a regular routine work Physicians can not give dumping medicines to the patients, and today your news photo was a discharge summary, I recommed the discharge summary and reports should be in english a Universal Language, any time any were ready reference to any body, but regarding to the medicine which was dissolved in their own blood each and every one should know the medicine how it was working in his/her body and what is out come was human Rights. Tamil Nadu Drugs Control Department can take nessasary Action ?
Rate this:
Share this comment
Cancel
ராம.ராசு - கரூர்,இந்தியா
28-செப்-201210:53:43 IST Report Abuse
ராம.ராசு பொதுவாகவே நமது மருத்துவர்கள் அவர்கள் சொல்வதை மட்டுமே கேட்க வேண்டும் என்று எதிர்ப்பவர்கள். எதிர்ப்பார்ப்பது என்ன.. அப்படித்தான் நடந்து கொள்வார்கள். விளக்கம் கேட்டால் அதற்க்கு பதில் அவர் பதில் சொல்ல மாட்டார், அருகில் இருக்கும் உதவியாளரைக் காட்டுவார்கள். மருத்துவம் படித்திவிட்டால் ஏதோ அனைத்தும் தெரிந்ததுபோலவும், மற்றவர்களுக்கு ஒன்று தெரியாதது போலவும் இருக்கும் அவர்களது பேச்சும் பார்வையும். பணம் வாங்குவதில் கறார் காட்டுவார்கள். ஆனால் நோயை தீர்பதற்கு உத்திரவாதம் தரமாட்டார்கள். அதுவும் அரசு மருத்துவமனை மருத்துவர்களைக் கேட்கவே வேண்டாம். அப்படி இயந்திரத்தனமான, அலட்சியமான பதிலாக இருக்கும். மருந்தின் பெயர்களை மிகத் தெளிவாக இருக்கவேண்டும் என்பது அரசு உத்தரவு. ஆனால் ஒரு சிலரைத் தவிர மற்ற அனைவரும் அரசின் உத்தரவை மதிப்பதே இல்லை. அப்படிப்பட்டவர்கள் தமிழில் எழுதித் தரவேண்டும் என்று சொன்னால்... நடக்கிற காரியமா.. அதுசரி அரசு ஆணைகளே இன்னும் முழுமையாக தமிழ் வருவது இல்லை. அப்படி இருக்க....
Rate this:
Share this comment

Microsoft OLE DB Provider for SQL Server error '80040e31'

Query timeout expired

/xtralog_load.asp, line 349