பொது செய்தி

தமிழ்நாடு

ரேபிஸ் என்ற அரக்கன்: இன்று உலக ரேபிஸ் தினம்

Added : செப் 28, 2012 | கருத்துகள் (5)
Share
Advertisement
ரேபிஸ் என்பது ஒரு வகை வைரஸ். இது காடுகளில் வாழும் வவ்வால், நரி, ஓநாய் போன்ற விலங்குகளையும், வீட்டு விலங்கான நாயையும் எளிதில் தாக்கக் கூடியது. ரேபிஸ் வைரஸ் தாக்கிய விலங்குகள், மனிதர்களை நேரடியாக கடிப்பதாலோ அல்லது அவ்விலங்குகளால் கடிக்கப்பட்ட பிற விலங்குகள் மூலமாகவோ பரவுகிறது. ரேபிஸ் நோய்க்கு தடுப்பு மருந்தை, முதன் முதலில் 1885ல் லூயிஸ் பாஸ்டர் என்பவர் கண்டுபிடித்தார்.
ரேபிஸ் என்ற அரக்கன்: இன்று உலக ரேபிஸ் தினம்

ரேபிஸ் என்பது ஒரு வகை வைரஸ். இது காடுகளில் வாழும் வவ்வால், நரி, ஓநாய் போன்ற விலங்குகளையும், வீட்டு விலங்கான நாயையும் எளிதில் தாக்கக் கூடியது. ரேபிஸ் வைரஸ் தாக்கிய விலங்குகள், மனிதர்களை நேரடியாக கடிப்பதாலோ அல்லது அவ்விலங்குகளால் கடிக்கப்பட்ட பிற விலங்குகள் மூலமாகவோ பரவுகிறது.


ரேபிஸ் நோய்க்கு தடுப்பு மருந்தை, முதன் முதலில் 1885ல் லூயிஸ் பாஸ்டர் என்பவர் கண்டுபிடித்தார். அதற்கு மன் இந்நோய்க்கு மருந்தே கிடையாது. உயிரிழப்புகளும் அதிகம் நிகழ்ந்தன. இவரது சாதனையை அங்கீகரிக்கும் விதமாக, இவரது மறைந்த நாளான செப்., 28ம் தேதி, உலக ரேபிஸ் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ரேபிஸ் நோயால், உலகில் ஆண்டுதோறும் 55 ஆயிரம் பேர் இறக்கின்றனர், சராசரியாக 10 நிமிடத்துக்கு ஒருவர் இறக்கிறார் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. 97 சதவீத ரேபிஸ் நோய், நாய்கள் மூலம் தான் பரவுகின்றன. இந்தியாவில் மட்டும் 2 கோடியே 50 லட்சம் நாய்கள் உள்ளன. அதில் 60 சதவீதம் தெருவில் திரியும் நாய்களாகவும், மீதி வீட்டில் வளர்க்கும் நாய்களாகவும் உள்ளன என தனியார் ஆய்வு தெரிவிக்கிறது. இவை மூலம் ரேபிஸ் அதிகமாக பரவுகிறது.


கவனம் அவசியம்: வீட்டில் வளர்க்கும் விலங்குகளிடம் கவனமாகவும், தொடர் கண்காணிப்பிலும் இருக்க வேண்டும். அதன் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படின், உடனே கால்நடை மருத்துவரை அணுக வேண்டும். ரேபிஸ் வைரஸ் தாக்கிய விலங்குகள் கடித்தவுடன், அந்த இடத்தில் சோப்பு நீரால் 10 முதல் 15 நிமிடம் நன்கு கழுவ வேண்டும். பின் டாக்டரிடம் காட்டி, சிகிச்சை மேற்கொண்டால் நோயிலிருந்து பாதுகாக்கலாம். இல்லாவிட்டால் இது உயிரையும் பறிக்கக் கூடியது.


Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karutthu kandhasamy - Kandhagar,ஆப்கானிஸ்தான்
28-செப்-201219:40:57 IST Report Abuse
karutthu kandhasamy In US, there is a treatment for this disease. But in india, once we identified if a person has water phobia, we put them in the dark room.
Rate this:
Cancel
manikandan.s - vellore  ( Posted via: Dinamalar Android App )
28-செப்-201217:49:07 IST Report Abuse
manikandan.s world become to eradicate the virus and curate on awarenes to environment
Rate this:
Cancel
ilango - Al-Khobar,சவுதி அரேபியா
28-செப்-201212:09:41 IST Report Abuse
ilango என்னுடைய நண்பன் இந்த கொடிய வைரஸ் மூலம் இறந்தது இப்பொழுது நினைத்தாலும் எனக்கு நடுக்கம் ஏற்படுகிறது. அவன் அன்பாக வளர்த்த ஆடு கடித்ததால் (நாய் இந்த ஆட்டை ஏற்கனவே கடித்த்திருந்தது) மிக கொடிய முறையில் இறந்து போனான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X