பொது செய்தி

தமிழ்நாடு

இருக்க வேண்டும் இரும்பு இருதயம்: இன்று உலக இருதய தினம்

Added : செப் 29, 2012 | கருத்துகள் (2)
Share
Advertisement
உடல் உறுப்புகளில் இருதயம் முக்கியமானது. இருதய துடிப்பு இருக்கும் வரை தான், உயிர் துடிப்பும் இருக்கும். உடல் உறுப்புகளுக்கு ரத்தத்தை அனுப்பும் வேலையை, இருதயம் செய்கிறது. இருதயத்தில் ஏற்படும் கோளாறுகளால், இறப்பவர்களின் எண்ணிக்கை, ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இருதயத்தை பாதுகாப்பது பற்றி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, செப்.,29ம் தேதி உலக இருதய தினம்
 இருக்க வேண்டும் இரும்பு இருதயம்: இன்று உலக  இருதய தினம்

உடல் உறுப்புகளில் இருதயம் முக்கியமானது. இருதய துடிப்பு இருக்கும் வரை தான், உயிர் துடிப்பும் இருக்கும். உடல் உறுப்புகளுக்கு ரத்தத்தை அனுப்பும் வேலையை, இருதயம் செய்கிறது. இருதயத்தில் ஏற்படும் கோளாறுகளால், இறப்பவர்களின் எண்ணிக்கை, ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இருதயத்தை பாதுகாப்பது பற்றி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, செப்.,29ம் தேதி உலக இருதய தினம் கடைபிடிக்கப்படுகிறது. இருதய நோய்களில் 80 சதவீத மாரடைப்புகள் தடுக்கப்படக் கூடியவை.


இதுவே அதிகம்:

உலகில் ஏற்படும் உயிரிழப்புகளில், இருதய நோயால் ஏற்படும் இறப்புகள் தான் அதிகம். ஆண்டுதோறும் 1 கோடியே 73 லட்சம் பேர் இறக்கின்றனர். மலேரியா, எச்.ஐ.வி., மற்றும் டி.பி., ஆகியவற்றால் 38லட்சம் பேர் மட்டுமே இறக்கின்றனர். இதிலிருந்து இருதய நோயின் பாதிப்பு எந்தள உள்ளது என தெரிந்து கொள்ளலாம் என, உலக சுகாதார நிறுவன ஆய்வு தெரிவிக்கிறது. உலகில் ஆண்டுக்கு 10 லட்சம் குழந்தைகள், பிறக்கும் போதே இருதய குறைபாட்டுடன் பிறக்கின்றன. உலகில் 10 மாணவர்களில் ஒருவர், அதிக எடை உள்ளவர்களாக உள்ளனர்.


என்ன காரணம்:

முறையற்ற உணவு பழக்க வழக்கம், அதிக நேர பணி, உழைப்பின்மை, நிம்மதியின்மை போன்றவை இருதய நோய்க்கான சாத்தியக் கூறுகளை அதிகரிக்கின்றன. அதேபோல், உலகில் மாரடைப்பால் இறப்பவர்களில் 20 சதவீதம் பேர் புகை பிடிப்பவர்கள். மற்றவர்களை விட, புகை பிடிப்பவர்களுக்கு இருதய நோய் வரும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம். புகை பிடிப்பதால் இருதயத்துக்கு செல்லும் ஆக்சிஜன் அளவு குறைகிறது. புகை பிடிப்போர், வெளியிடும் புகையினால் அருகில் உள்ளவர்களும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். ஆண்டுக்கு சிறுவர்கள் உட்பட 6 லட்சம் பேர், இந்த வகையில் பாதிக்கப்படுகின்றனர். சர்க்கரை நோயால் இருதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாய்கள் சேதமடைவதால் மாரடைப்பு ஏற்படலாம். சர்க்கரை நோயாளிகளில் 75 சதவீதம் பேருக்கு இக்குறைபாடு இருக்கிறது.


மாரடைப்பை தடுப்பது எப்படி

* புகை பிடிப்பதை முற்றிலும் கை விடுங்கள். பெண்களுக்கு வீட்டு வேலை செய்வதே உடற்பயிற்சி செய்வதற்கு சமம். எனவே, முடிந்தளவுக்கு உடம்புக்கு வேலை கொடுங்கள்.
* உப்பு மற்றும் சர்க்கரை அதிகம் பயன்படுத்தாதீர்கள். இதனால் ரத்தக்கொதிப்பு அதிகரிக்கும். காய்கறிகள், பழங்கள், கீரைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
* சைக்கிள் ஓட்டுவது நல்லது.
* இனிப்பு வகைகளை சாப்பிட விரும்பினால் சாக்லேட்டிற்கு பதிலாக, மாம்பழம் எடுத்துக்கொள்ளுங்கள். ரத்தத்தில் கொலஸ்ட்ரால், சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்றவற்றை சீராக வைத்திருக்க வேண்டும்.
* பெரும்பாலான நேரங்களில், "எஸ்கலேட்டர்',"லிப்ட்' ஆகியவற்றை பயன்படுத்தாமல், மாடிப் படிகளை பயன்படுத்த வேண்டும். ஒரு நாளுக்கு சராசரியாக 10 ஆயிரம் அடிகள் நடக்க வேண்டும்.
* "பாஸ்ட் புட்' உணவு வகைகளை தவிர்த்து விடுங்கள். அதற்கு பதில் கொழுப்பு இல்லாத இறைச்சி, மீன், பருப்பு வகைகள், மக்காச்சோளம், சூரிய காந்தி எண்ணெய் ஆகியன, ஓய்வின்றி உழைக்கும் இருதயத்துக்கு பாதுகாப்புஅளிக்கின்றன.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
p.boopathy enkira Boopathiyar - chennai,இந்தியா
29-செப்-201218:59:03 IST Report Abuse
p.boopathy enkira Boopathiyar மூளைக்கு நல்ல தூய்மையான காற்றும்....,நல்இதயத்துக்கு நல்ல இரத்த தேவையும் அறிந்து மனிதன் இயற்கை உணவை சாப்பிட்டு...இவ்யுலகின் பசுமையும் தன் ஆரோகியத்தையும் காக்கவேண்டும் " இதய வாழ்த்துகள்" -பூபதியார்
Rate this:
Cancel
azhagarasan - ahemadabad  ( Posted via: Dinamalar Android App )
29-செப்-201208:34:17 IST Report Abuse
azhagarasan heartly wishes
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X