பாகிஸ்தானுடன் படிப்படியாக பேச கிருஷ்ணா விருப்பம்

Added : ஆக 05, 2010 | கருத்துகள் (8)
Share
Advertisement
பாகிஸ்தானுடன் படிப்படியாக பேச கிருஷ்ணா விருப்பம்

புதுடில்லி : ""பாகிஸ்தான் உடனான ஒவ்வொரு பிரச்னைகள் குறித்தும் படிப்படியாக பேச்சு வார்த்தை நடத்த தயார். அதே நேரத்தில், இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளை பாக்., அரசு ஒழித்துக் கட்ட வேண்டும்,'' என வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.


பாகிஸ்தான் உடனான பேச்சு வார்த்தை தொடர்பாக ராஜ்ய சபாவில், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த எஸ்.எஸ்.அலுவாலியாவும் மற்றும் பலரும் நேற்று கேள்வி எழுப்பினர். "பாகிஸ்தான் உடனான பேச்சு வார்த்தையில் காஷ்மீர், சியாச்சின் மற்றும் சர்கிரீக் விவகாரங்கள் குறித்து இந்தியா பேச விரும்புகிறதா' என்றும் வினவினர். இதற்கு பதில் அளித்த வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா கூறியதாவது: பாகிஸ்தான் உடனான அனைத்து பிரச்னைகளையும் படிப்படியாக பேச்சு வார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள விரும்புகிறோம். காஷ்மீர், சியாச்சின் மற்றும் சர்கிரீக் பிரச்னைகள் உட்பட ஒவ்வொரு பிரச்னை குறித்து விவாதிக்கவும் இந்திய அரசு தயாராக உள்ளது. எந்தப் பிரச்னை பற்றியும் பேச நாம் பயப்படவில்லை. நமது மனசாட்சி தெளிவாக உள்ளது; நமது நிலை தெளிவாக உள்ளது. அதனால், பாகிஸ்தான் தலைவர்களைச் சந்தித்துப் பேச நாம் தயங்குவதில்லை. பாகிஸ்தானில் செயல்படும் ஜிகாதி சக்திகள், இந்தியாவிற்கு எதிராக தொடர்ந்து விஷத்தை கக்கி வருகின்றன. ஒவ்வொரு நாளும் இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபடுகின்றன. இந்த நிலை தொடர்ந்தால், இரு நாடுகள் இடையேயான நம்பிக்கை மேம்படாது. மாறாக ஒரு நாடு மீது மற்ற நாடு கொண்டுள்ள நம்பிக்கை குறையும்; அவநம்பிக்கை ஏற்படும். இதை பாகிஸ்தான் தலைவர்களிடமும் தெரிவித்து விட்டேன்.


இந்தியாவும், பாகிஸ்தானும் நல்ல நட்புள்ள அண்டை நாடுகளாக தொடர வேண்டுமெனில், ஜிகாதிகளின் நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு முடிவுக்கு கொண்டு வர வேண்டும். நட்புறவை மேம்படுத்த வேண்டும் எனில், இந்தியா கொண்டுள்ள நல்லெண்ணத்தை பாக்., அரசு புரிந்து கொள்ள வேண்டும். பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முகமது குரேஷியை பேச்சு வார்த்தைக்கு இந்தியா வரும்படி அழைத்துள்ளேன். அவர் வரும் தேதி பற்றி பரிசீலிக்கப்பட்டு வருகிறது. கடந்த 15ம் தேதி குரேஷியுடன் நான் பேச்சு வார்த்தை நடத்திய போது, இரு நாட்டு மீனவர்களை விடுவிப்பது உட்பட மனிதாபிமான ரீதியான பல பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. இரு நாடுகளுக்கும் இடையேயான தொடர்புகளை அதிகரிப்பது, பரிமாற்றத் திட்டத்தின் கீழ் மாணவர்கள், துணைவேந்தர்கள் வந்து செல்வது, வர்த்தகத்தை விரிவுபடுத்துவது உட்பட பல விஷயங்கள் குறித்தும் ஆலோசித்தோம். இவ்வாறு கிருஷ்ணா கூறினார்.


அமைதி காத்ததால் ஜெத்மலானி பாராட்டு: மத்திய உள்துறைச் செயலர் ஜி.கே.பிள்ளையை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முகமது குரேஷி விமர்சித்த விவகாரத்தில் அமைதி காத்த அமைச்சர் கிருஷ்ணாவுக்கு, பாரதிய ஜனதா எம்.பி., ராம் ஜெத்மலானி பாராட்டு தெரிவித்தார். மத்திய உள்துறைச் செயலர் பிள்ளையை, லஷ்கர் -இ- தொய்பா தலைவர் ஹபீஸ் சயீதுவுடன் ஒப்பிட்டு, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முகமது குரேஷி சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா எந்தப் பதிலும் தெரிவிக்கவில்லை; அமைதி காத்தார்.


இந்த விவகாரம் பற்றி நேற்று ராஜ்ய சபாவில் பேசிய பா.ஜ., கட்சியைச் சேர்ந்த வெங்கையா நாயுடு, அருண் ஜெட்லி போன்றோர் வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணாவின் செயலுக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். அதே நேரத்தில், பா.ஜ., சார்பில் சமீபத்தில் எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்ட ராம் ஜெத்மலானி, அமைச்சர் கிருஷ்ணாவை பாராட்டினார். "பிள்ளையை விமர்சித்த விவகாரத்தில், கிருஷ்ணா பெருந்தன்மையுடன் நடந்து கொண்டார். இந்தியாவில் கலாசார பெருமையை காப்பாற்றும் வகையில் செயல்பட்டார்' என்று கூறினார்.


Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நலம்விரும்பி - tamizhan,இந்தியா
06-ஆக-201014:19:08 IST Report Abuse
நலம்விரும்பி படித்த IAS அதிகாரிகளுக்கு வழி விடுங்கப்பா. அவங்க நாடஆளட்டும். அரசியல்வாதிங்க பேரன் பேதிந்களோட பொழுத போக்குங்க. நாடும் உருப்படும் வீடும் உறுப்படும் .
Rate this:
Cancel
GODWIN - CHENNAIMAHALAKSHMINAGER,இந்தியா
06-ஆக-201014:15:14 IST Report Abuse
GODWIN இன்னும் என்ன பாகிஸ்தானுடன் பேச வேண்டும் நம்ம கிருஷ்ணாவுக்கு போவது அவர் மானம் அல்ல.நூறு கோடி இந்திய மக்களின் மானம் தான்,பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தி எந்த பயனும் இல்லை,அவர் நம் நாட்டு மக்களை பற்றி கவலை பட்டால் போதும்.வாழ்க பரதம்!!
Rate this:
Cancel
karthik - Tamizhan,இந்தியா
06-ஆக-201010:02:01 IST Report Abuse
karthik இன்னும் காஷ்மீர் பத்தி என்ன பேச வேண்டியிருக்கு எதுக்கு திரு கிருஷ்ணா அவர்கள் பாகிஸ்தானுக்கு மகுடி அடறாரு கஷ்மிர காப்பத தெரியலன்னா பதவிய ரகினாமா பன்னசொல்லுங்க. யாருக்கு தேராம இருக்கோ அவங்க நட்ட அலட்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X