சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக அல்தமஸ் கபீர் பதவியேற்பு

Updated : அக் 04, 2012 | Added : செப் 30, 2012
Advertisement

புதுடில்லி:சுப்ரீம் கோர்ட்டின், 39வது தலைமை நீதிபதியாக, அல்தமஸ் கபீர், நேற்று பதவியேற்றார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
சுப்ரீம் கோர்ட் தலை மை நீதிபதியாக, இரண்டரை ஆண்டு காலம் பணியாற்றி வந்த, எஸ்.எச்.கபாடியா ஓய்வு பெற்றதை அடுத்து, புதிய தலைமை நீதிபதியாக, அல்தமஸ் கபீர், 64, நேற்று பதவியேற்றார்.

ஜனாதிபதி மாளிகையின், அசோகா ஹாலில் நடந்த விழாவில், கடவுளின் பெயரில், அல்தமஸ் கபீர் உறுதிமொழியேற்றார்.அல்தமஸ் கபீர், 2005, செப்டம்பர் 9ம் தேதி, சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். மனித உரிமை மற்றும் தேர்தல் சட்டம் தொடர்பான, முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு வழக்குகளில், அவர் தீர்ப்புகள் வழங்கி உள்ளார்.

தலைமை நீதிபதி பொறுப்பை, ஒன்பது மாதங்கள் வகிக்க உள்ள, கபீர், 2013, ஜூலை 18ம் தேதி, ஓய்வு பெறுவார்.
பதவியேற்பு விழாவில், பிரதமர் மன்மோகன் சிங், துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, காங்கிரஸ் தலைவர் சோனியா, மத்திய அமைச்சர்கள் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி செயல் தலைவர் அத்வானி, ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜெட்லி, சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் உட்பட, பலர் கலந்து கொண்டனர்.
கோல்கட்டாவில், 1948ம் ஆண்டு பிறந்த கபீர், அங்குள்ள பல்கலைக் கழகத்தில், முதுகலைப் பட்டம் பெற்றார். பின், சட்டக் கல்வி பயின்றார். கோல்கட்டா ஐகோர்ட்டின் நிரந்தர நீதிபதியாக, 1990ல் நியமிக்கப்பட்டார்அரசியல் கட்சியில் இருந்து "சஸ்பெண்ட்' செய்யப்பட்டவர், எம்.பி.,யாக நீடிக்க முடியுமா என்ற வழக்கில், தீர்ப்பு சொன்னவர் கபீர்.

சமீபத்தில், கேரளாவில் இரண்டு மீனவர்களை, கொள்ளையர் என, கருதி, இத்தாலிய கப்பலின் பாதுகாவலர்கள் சுட்டுக் கொன்ற வழக்கை விசாரித்த நீதிபதிகள், "பெஞ்ச்'சிலும் கபீர் இடம் பெற்றிருந்தார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X