சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புரட்டாசியில் தேங்கும் முட்டைகள் : ஏற்றுமதி மூலம் ஈடுகட்ட திட்டம்

Added : அக் 06, 2012
Share
Advertisement

நாமக்கல்: "ஓமன் நாட்டுக்கு முட்டை ஏற்றுமதி அனுமதி கிடைத்துள்ளதால், புரட்டாசி மாதம் தேங்கும் முட்டை, ஏற்றுமதி மூலம் சரி செய்யப்படும்' என, தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு, நாமக்கல் மண்டல் சேர்மன் டாக்டர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: உத்தரபிரதேசம், பீகார், மேற்குவங்காளம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில், முட்டை தேவை அதிகரித்ததன் எதிரொலியாக, முட்டை விலை உயரத் துவங்கியுள்ளது. விநாயகர் சதுர்த்தி முடிந்ததால், மகாராஷ்டிரா உள்ளிட்ட இடங்களில், முட்டை நுகர்வு அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், இன்று, புரட்டாசி, மூன்றாவது சனிக்கிழமை முடிவடைகிறது. அதனால், தமிழகத்திலும், முட்டை நுகர்வு அதிகரிக்க வாய்ப்புள்ளது. காலாண்டுத் தேர்வு விடுமுறை என்பதால், சத்துணவுத் திட்டத்துக்கு அனுப்பப்பட்டு வந்த முட்டைகள் நிறுத்தப்பட்டன. அடுத்த வாரம் முதல், பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், சத்துணவுத் திட்டத்துக்கு, முட்டைகள் அனுப்பப்படும். அதனால், முட்டைக்கான தேவை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தமிழகத்தில், இறைச்சி விலையேற்றம் இருந்தபோதும், அதன் நுகர்வு அதிகரித்து வருகிறது. அதுபோல், முட்டையின் நுகர்வு அதிகரித்துள்ளதால், நாடு முழுவதும் முட்டை விலையேற்றம் அடைந்துள்ளது.
ஓமன் நாட்டுக்கு முட்டை ஏற்றுமதி அனுமதி கிடைத்துள்ளதால், புரட்டாசி மாதம் தேங்கும் முட்டை, ஏற்றுமதி மூலம் சரி செய்யப்படும். இதன் காரணமாக, முட்டை விலை, இதே நிலையில் தொடர வாய்ப்புள்ளது. தீவனம் விலையேற்றம் காரணமாக உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளது. அதனால், முட்டை விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வரும் காலங்களில், சந்தை விற்பனையை மட்டுமே கணக்கிடாமல், உற்பத்திச் செலவையும் கருத்தில் கொண்டு, முட்டை விலை நிர்ணயம் செய்யப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X