பதிவு செய்த நாள் :
கருத்துகள் (7)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

தஞ்சாவூரில் மாவட்டத்தில், வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, மத்திய குழுவினரை, அழைத்து செல்வதில், மாவட்ட அதிகாரிகள் கோட்டை விட்டதால், தமிழகத்திற்கு உரிய நியாயம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்கான காவிரி நதிநீர் தேவை குறித்து, மத்திய குழுவினர் நேற்று ஆய்வுப்பணியை துவக்கினர்.

விருந்தில் கவனம்: ஆய்வு பணிகள் விரிவாகவும் நடக்கும் என, விவசாயிகள் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் நிலையில், நேற்றைய ஆய்வு பணி விமரிசையாக மட்டுமே நடந்தது. முதலில், மத்திய குழுவினர் கல்லணை சென்று, அங்கு மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் காவிரி நீர் அளவை ஆய்வு செய்வார்கள் என, தெரிவிக்கப் பட்டது. இதையடுத்து படை, பரிவாரங்களுடன் அதிகாரிகளும், பத்திரிகையாளர்களும் அங்கு திரண்டனர். அங்குவந்த மத்திய குழுவினருக்கு, மாவட்ட அதிகாரிகள் தரப்பில், சந்தனமாலை அணிவித்து மரியாதை வழங்கப் பட்டது. இதை தொடர்ந்து, தடபுடல் விருந்து வைபம் துவங்கியது.

தஞ்சாவூரில் உள்ள பிரபல தனியார் ஓட்டலில் இருந்து வரவழைக்கப் பட்ட "வெஜிடபிள் பிரைட் ரைஸ்', "கடாய் சிக்கன்', சப்பாத்தி, "பன்னீர் பட்டர் மசாலா', காவிரி ஆற்று கட்லா மீன் வறுவல், சாதம், மீன் குழம்பு, சாம்பார், ரசம், தயிர், சேமியா பால் பாயாசம் உள்ளிட்ட உணவு வகைகள் விருந்தில் இடம்பெற்றன. பத்திரிகையாளர்கள், மாவட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களது உதவியாளர்களுக்கு வடை, பாயசம் உள்ளிட்ட சைவ விருந்துடன், மீன் வறுவல் கூடுதலாக வழங்கப் பட்டது. இதை முடித்த பின், மத்திய குழுவினர், அங்கு ஆய்வு ஏதும் செய்யாமல், சாப்பிட்டு முடித்த கையுடன், கடம்பன்குடி, பூதலூர், கள்ளப்பெரம்பூர், உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர். மாலை 6.45 மணியளவில் ஆய்வை முடித்துக்கொண்டு தஞ்சாவூரில் ஓய்வெடுத்தனர். இன்று தஞ்சாவூரில் இரண்டு இடங்களை மட்டுமே ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ள மத்திய குழுவினர், அதை தொடர்ந்து, திருவாரூர் மற்றும் நாகை மாவட்டத்தில் ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள செல்லவுள்ளனர்.

கோட்டைவிட்ட அதிகாரிகள்: தஞ்சாவூரில் மத்திய குழுவினர்

Advertisement

நேற்று ஆய்வு செய்த கிராமங்கள் அனைத்தும் கல்லணையை ஒட்டிய பகுதிகள். இந்த பகுதிகளில் நிலத்தடி நீராதாரம், இருப்பதால், அதை பயன்படுத்தி, நெற்பயிருக்கு மாற்றாக, வாழை, சோளம், கம்பு உள்ளிட்டவை பயிரிடப் பட்டு உள்ளன. ஆனால், தஞ்சாவூரில், காவிரி, கொள்ளிடம் ஆறுகளின் கால்வாய்கள் செல்லும் பல பகுதிகளில், தண்ணீரின்றி, பல ஏக்கர் நிலங்கள் வறண்டு கிடக்கின்றன. மத்திய குழுவினரை, அங்கு அழைத்து சென்றிருந்தால், மக்களை சந்தித்தும், அப்பகுதிகளை பார்வையிட்டும், அவர்கள் வறட்சி நிலையை அறிந்துக்கொள்ள வசதியாக இருந்திருக்கும். சரியான திட்டமிடல் இல்லாததால், மத்திய குழுவினர் அங்கு அழைத்து செல்லப்படவில்லை. இதனால், டெல்டா மாவட்டங்களின் உண்மையான வறட்சி நிலையையும், நீர் தேவையையும் மத்திய குழுவினர் அறிந்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இன்றும் ஆய்வுப்பணி மூன்று மாவட்டங்களில் தொடரவுள்ளதால், இனியாவது தமிழக அதிகாரிகள் கவனத்துடன் செயல்படவேண்டும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் எழுந்து உள்ளது.
- நமது நிருபர் -
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mona Nats - chennai,இந்தியா
08-அக்-201220:19:54 IST Report Abuse
Mona Nats நானும் ஒரு அரசு வங்கி அதிகாரிதான். இம்மாதிரி ஆய்வுக்கு வரும் அதிகாரிகளுக்கு பட்டை சாதம் மட்டும்தான் வழங்க வேண்டும் என்று ஒரு சட்டம் போடவேண்டும். எனது வங்கியில் ஆய்வுக்கு வரும் ஒரு அதிகாரி மூன்று ரூபாய் பிஸ்கட் பாக்கெட் இரண்டுமட்டுமே மதிய உணவாக பெற்றுக்கொள்வார். தண்ணீர்கூட மினரல் வாட்டர் கேட்காமல் சாதா தண்ணீர்தான் அருந்துவார்.
Rate this:
Share this comment
Cancel
Subramaniam - Prague,செக் குடியரசு
07-அக்-201215:58:53 IST Report Abuse
Subramaniam தங்கள் கடமை மறந்து , மத்திய அரசு அதிகாரிகள் கவனிப்பு செலவில் தங்களையும் கவனிப்பதில் குறி கொண்ட தமிழக அரசு அதிகாரிகளையும் அம்மா அவர்கள் கவனிப்பது நன்று.
Rate this:
Share this comment
Cancel
p.mohamed rafik,kuruvadi - hafar al batin,இந்தியா
07-அக்-201201:13:38 IST Report Abuse
p.mohamed rafik,kuruvadi உணவு விசயத்தில் இவ்வாறு எல்லாம் குறை கூறுவது தமிழர் பண்பாடு அல்ல .அதிகாரிகள் தங்கள் பொறுப்பை உணர்ந்து வறட்சி பகுதிகளை சுற்றி காண்பிக்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Sanjay A - NJ,யூ.எஸ்.ஏ
06-அக்-201221:22:08 IST Report Abuse
Sanjay A தமிழ்நாடுல ஒரு மரம் கூட கிடையாது , எல்லா மரங்களையும் அரசியல் வியாதிகள் வெட்டி வித்துட்டானுங்க. அப்புறம் எப்படி மழை வரும். சென்னை டு கன்னியாகுமரி வரைக்கும் ரெண்டு சைடு மரங்கள் நிறைய இருக்கும். தமிழ்நாட தவிர மத்த எல்லா ஸ்டேட் நல்லா தான் இருக்கு. இவங்க எதுவும் நடவடிக்கை எடுக்க மாட்டனுங்க. Karanada / Andhrapradhes / கேரளா. நல்ல மரம் / நீலத்தடி நீர் சேமிப்பு பண்ணுவானுங்க. இவனுங்க என்னடானா போராட்டம் பண்ணி தண்ணி வேணுமா . கொஞ்சமாவது யோசிங்கபா ......வீட்டுக்கு ஒரு மரம் வளருங்க ...Streetku ரெண்டு மரத்த வளருங்க ...அப்பறம் எப்படி தண்ணீ பஞ்சம் வருதுன்னு பார்போம். நீங்க அடுத்தவனுக்கு தண்ணீ கொடுக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
maran - riyadh,சவுதி அரேபியா
06-அக்-201212:26:45 IST Report Abuse
maran உழைத்து கஷ்ட்டப்பட்டு நாட்டுக்கும் ,தனக்கும் உள்ள தேவையை பூர்த்தி செய்யும் விவசாயிக்கு தெரியும் உணவின் கஷ்ட்டம் .....அரசுபணியில் சுகமாய் சுற்றித்திரியும் பன்னிகளுக்கு எங்கே தெரியும் ....? தண்ணி இருந்தாதானே உணவு சமைக்கமுடியும் என ஒன்னுமே கொடுக்காமல் பட்டினிபோட்டிருந்தால் தெரியும் ......
Rate this:
Share this comment
Cancel
rudramoorthy - madurai,இந்தியா
06-அக்-201206:39:01 IST Report Abuse
rudramoorthy அதெல்லாம் கஷ்டப்பட்டு படித்து பட்டம் வாங்கி வேலைக்கு வந்து உண்மையாக உழைக்கும் அதிகாரி யாராவது இருந்தால் அல்லவா? சதாகாலமும் நல்ல சாப்பாடு, மது,மங்கை,மாமிசம் என்று ஜாலி வாழ்க்கை வாழும் இதுபோன்ற ஆட்களுக்கு விவசாயி இருந்தால் என்ன செத்தால் என்ன? ஹே பாரதமாதா நீ சீக்கிரமாய் இரண்டாய் பிளந்து உன் உண்மையான மக்களை உன்னிடத்தில் வாங்கிக் கொள். இறந்தாலும் உன் மடியில் உரமாவான் விவசாயி. போதும் விவசாயி பட்ட துன்பங்கள்.லஞ்சத்தால் மட்டுமே வாழும் அதிகாரிகள் மட்டும் சுகமாய் வாழட்டும்.
Rate this:
Share this comment
Cancel
ulaganathan.maa - Thiruneelakudi ,இந்தியா
06-அக்-201206:20:53 IST Report Abuse
ulaganathan.maa அடப்பாவிகளா தங்கறதுக்கும் திங்கறதுக்கும் தான் அங்கேர்ந்து வந்தீங்களா ?நம்ம அதிகாரிங்க service and supply -ல எப்பவுமே கெட்டிகாரங்க.தணிக்கைத்துறை ஆளுங்களைக் கவனிச்சே பழக்கப் பட்டவங்களாச்சே.. பாதிக்கப் பட்ட பகுதியை காமிக்கலேன்னா விவசாயி தலையில துண்டு தான்மா.உலகநாதன், திருநீலக்குடி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X