DISTRICT NEWS | பூச்சிகொல்லி மருந்து பயன்பாடு அழிவின் பாதையில் பறவை இனங்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பூச்சிகொல்லி மருந்து பயன்பாடு அழிவின் பாதையில் பறவை இனங்கள்

Added : அக் 10, 2012
Advertisement

குன்னூர்:"பெருகி வரும் பூச்சிக்கொல்லி மருந்து பயன்பாடு காரணமாக, வாரம் ஒரு பறவையினம் அழிந்து வருகிறது,' என கானுயிர் வார விழாவில் கவலை தெரிவிக்கப்பட்டது.
பெட்டட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உலக கானுயிர் வாரத்தை முன்னிட்டு சிறப்பு கருத்துரங்கு நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் மனோகரன் தலைமை வகித்தார். தேசிய பசுமை படை திட்டத்தின் குன்னூர் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தலைமையாசிரியர் லட்சுமி நாராயணன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் ஆசிரியர் ராஜூ சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில்,""ஒரு புலி வாழ 25 சதுர கி.மீ., வனப்பகுதி தேவை.

அத்தகைய ஒரு காட்டில் அனைத்து உயிரினங்களும் வாழும். மேலும் அங்கு நிதி உற்பத்தியாகும். எனவே தான் புலியை பல்லூயிரின விலங்கு என அழைக்கின்றனர். யானை தன் கழிவு மூலம் 16 தாவர இனங்கள் தழைக்க உதவுகிறது. ஒவ்வொரு பாம்பும் ஒரு நாளைக்கு ஆறு எலிகளை சாப்பிட்டு நம் உணவு தானியத்தை காக்கிறது. ஒரு ஆந்தை ஒரு இரவில் 32 எலிகளை சாப்பிட்டு அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துகிறது. உலகில் 8,300 வகையான பறவையினங்கள் உள்ளன. பெருகி வரும் பூச்சிக்கொல்லி மருந்து பயன்பாடு காரணமாக வாரம் ஒரு பறவையினம் அழிந்து வருகிறது,'' என்றனர்.
ஆசிரியை புஷ்பா வரவேற்றார். ஆசிரியை ஜெயலட்சுமி நன்றி கூறினார். நிகழ்ச்சியை முன்னிட்டு மாணவர்களுக்கு நீலகிரி பசுமை படை திட்டத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட "ஜக்கு' என்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறும்படம் காண்பிக்கப்பட்டது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X