கெஜ்ரிவால் காணாமல் போய்விடுவார்: பால் தாக்கரே ஆவேசம்

Updated : அக் 20, 2012 | Added : அக் 19, 2012 | கருத்துகள் (11)
Share
Advertisement

மும்பை:பா.ஜ., தேசிய தலைவர், நிதின் கட்காரிக்கு சிவசேனா தலைவர், பால் தாக்கரே வக்காலத்து வாங்கியுள்ளார்.சிவசேனா கட்சியின் பத்திரிகையான, "சாம்னா'வில், இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:"மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியில், 100 ஏக்கர் விவசாய நிலத்தை, அங்கு ஆட்சியில் உள்ள, காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசிடமிருந்து, பா.ஜ., தேசிய தலைவர், நிதின் கட்காரி குத்தகைக்கு பெற்றுள்ளார். மகாராஷ்டிரா மாநில அரசும், விதிகளை தளர்த்தி, அவருக்கு நிலத்தை வழங்கியுள்ளது' என, அரவிந்த் கெஜ்ரிவாலும், தமன்யாவும் ஊழல் குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.
மகாராஷ்டிரா அரசிடமிருந்து, நிலத்தை குத்தகைக்கு பெற்று, அங்கு தன் தொழில் திட்டத்தை கட்காரி அமல்படுத்தியுள்ளதற்கு, கெஜ்ரிவாலும், தமன்யாவும் அதிருப்தி அடைய வேண்டிய அவசியம் இல்லை. இந்த ஊழல் குற்றச்சாட்டுகள் எல்லாம், கட்காரிக்கு எதிராக, கெஜ்ரிவாலும், தமன்யாவும் செய்த சதி. அவர்களின், குற்றச்சாட்டால், எந்த பலனும் ஏற்படாது. இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அவர்கள் தொடர்ந்து கூறினால், சமூக சேவகர் அன்னா ஹசாரே போல, காணாமல் போய் விடுவர்.இவ்வாறு பால் தாக்கரே கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sasi, packottuvilai - vashafaru,மாலத்தீவு
20-அக்-201220:18:19 IST Report Abuse
sasi, packottuvilai இவர் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் பாம்பே இன்று தீவிரவாதிகளின் கையில் இருந்திருக்கும் . இவரது இயக்கம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் நீங்கள் இன்று கை வீசி பாம்பே தெருக்களில் நடக்க முடியாது
Rate this:
Cancel
rajaguru - chennai,இந்தியா
20-அக்-201218:15:31 IST Report Abuse
rajaguru கேஜ்ரிவாலை யார் யார் எல்லாம் எதிர்கிறார்களோ அவர்களின் உண்மையான விபரங்களை மக்கள் மன்றத்தில் முதலில் வெளிபடுத்த வேண்டும் .
Rate this:
Cancel
s.r.ramkrushna sastri - secunderabad,இந்தியா
20-அக்-201212:05:33 IST Report Abuse
s.r.ramkrushna sastri அறுபது வருஷமா சிவ சேனையை நடத்திட்டு வறியே, உன்னாலே உருப்படியா என்ன செய்ய முடிஞ்சுது, மாநில, மத உணர்வுகளை தூண்டுவதை தவிர? கசாப் மும்பையை சின்னாபின்னமாக்கிய போது, உங்க சிவ சேனை என்ன கயிறை புடிங்கிகிட்டு இருந்தது? மொதல்லே உதார் , சவடால் எல்லாத்தியும் நிறுத்து
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X