பொது செய்தி

தமிழ்நாடு

குமரியில் தொடர்கிறது மழை அணைகளில் நீர்மட்டம் "கிடு கிடு'

Added : அக் 20, 2012
Share
Advertisement

நாகர்கோவில் :கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் கிடு கிடு என உயர்ந்து வருகிறது. கொட்டாரத்தில் அதிகபட்சமாக 50 மி.மீ., மழை பதிவானது.
குமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்த மழை அனைத்து தரப்பினர் மத்தியிலும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் பேச்சிபாறை, பெருஞ்சாணி உட்பட அனைத்து அணைகளிலும் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
கடந்த இரு தினங்களாக பெய்த மழையால் அணைகளுக்கு வரும் தண்ணீரின் உள்வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை அணையில் தற்போது 5.90 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணியில் 20.90 அடி, சிற்றார் ஒன்றில் 3.61 சிற்றார் இரண்டில் 3.71 அடி தண்ணீர் உள்ளது.
பேச்சிப்பாறைக்கு நேற்று முன்தினம் 198 கனடி தண்ணீர் உள்வரத்தாக வந்த நிலையில் தற்போது விநாடிக்கு 268 கன அடியும், பெருஞ்சாணிக்கு 64 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் 137 கனஅடி தண்ணீர் உள்வரத்தாக வந்துகொண்டிருக்கிறது.
5 அடி நீர்மட்டம் இருந்த பேச்சிப்பாறை அணையில் நேற்று 5.90 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அதுபோன்று பெருஞ்சாணியில் ஒரு அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தற்போது பெருஞ்சாணி அணையில் இருந்து 51 கனஅடி தண்ணீர் வெளியேறிகொண்டு இருக்கிறது.
மழையளவு: இந்நிலையில் பேச்சிப்பாறையில் 9 மி.மீ., பெருஞ்சாணியில் 17.4 மி.மீ., சிற்றாறு 1ல் 7 மி.மீ, 2ல் 11 மி.மீ, பூதப்பாண்டியில் 13மி.மீ., நாகர்கோவிலில் 18.1 மி.மீ., சுருளோட்டில் 17 மி.மீ., கன்னிமாரில் 10.2 மி.மீ., அடையாமடையில் 17 மி.மீ., புத்தன் அணையில் 17 மி.மீ., கோழிபோர்விளையில் 22 மி.மீ., ஆனைகிடங்கில் 16 மி.மீ., இரணியலில் 13.2 மி.மீ., நிலப்பாறையில் 12 மி.மீ., குருந்தன்கோட்டில் 18.6 மி.மீ., மழையும் பதிவானது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X