சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண்ணை கற்பழித்து, வீடியோ படம் எடுத்து மிரட்டல்: ராமேஸ்வரம் நகராட்சி தலைவர் உட்பட 6 பேர் கைது

Added : ஆக 08, 2010 | கருத்துகள் (3)
Advertisement
பெண்ணை கற்பழித்து, வீடியோ படம் எடுத்து மிரட்டல்: ராமேஸ்வரம் நகராட்சி தலைவர் உட்பட 6 பேர் கைது

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெண்ணை கற்பழித்து, வீடியோ படம் எடுத்த நகராட்சித் தலைவர் ஜலீல் உட்பட ஆறு பேரை, போலீசார் கைது செய்தனர்.


கீழக்கரை எஸ்.என்.தெருவைச் சேர்ந்த முகம்மது ரபீக் மனைவி யாஸ்மின் பானு(32). இவர், ராமேஸ்வரம் நகராட்சித் தலைவர் (தி.மு.க.,) ஜலீல் தர வேண்டிய பணத்தை வாங்க, கடந்த 5ம் தேதி மாலை 6 மணிக்கு, ராமேஸ்வரத்தில் ஜலீலுக்குச் சொந்தமான கட்டடத்திற்கு சென்றார். இவருடன் நிஷா(48)வும் சென்றார். அங்கிருந்த ஜலீல், இருவருக்கும் குளிர்பானம் கொடுத்துள்ளார். இதை குடித்த இருவரும் மயங்கினர். அரைகுறை மயக்க நிலையில் இருந்த யாஸ்மின் பானுவை, ஜலீல் மற்றும் அவருடன் இருந்த மேலும் ஐந்து பேர் கற்பழித்தனர்.


நள்ளிரவில் சுயநினைவுக்கு வந்த பின்னும், கத்தியை காட்டி மிரட்டி நிர்வாணமாக்கி, மொபைல் போனில் படமெடுத்த இவர்கள், மீண்டும் தங்களது உடல் பசியை தீர்த்துக் கொண்டனர். மறுநாள் அதிகாலை 6 மணி வரை குடிபோதையில், ஒருவர் மாற்றி ஒருவராக வெறிச்செயலை அரங்கேற்றினர். பின், "நடந்ததை யாரிடமும் சொல்லக்கூடாது' என, மிரட்டி இருவரையும் அனுப்பினர். பாதிக்கப்பட்ட யாஸ்மின் பானு, ராமநாதபுரம் எஸ்.பி., பிரதீப்குமாரிடம் தெரிவித்தார். அவரது உத்தரவுப்படி, ராமேஸ்வரம் டவுன் ஸ்டேஷனில் புகார் செய்தார். நகராட்சித் தலைவர் ஜலீலை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த மொபைல் போனை பறிமுதல் செய்தனர். போனில் யாஸ்மின் பானுவை மிரட்டி எடுக்கப்பட்ட நிர்வாணக் காட்சிகள் இருந்ததை உறுதி செய்தனர்.


அவரது தகவலைத் தொடர்ந்து, சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ்காரர் தியாகராஜன்(45), உதயகுமார்(36), ஷேக்(42), ரகுபதி(21), ராமநாதபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்த கேசவன்(31) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் கமலாபாய் டி.எஸ்.பி., விசாரணை செய்து, நேற்று காலை ராமேஸ்வரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். நகராட்சித் தலைவர் ஜலீல் உட்பட ஆறு பேரையும் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் குமரேசன் உத்தரவிட்டதை தொடர்ந்து, மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.


பாதிக்கப்பட்ட யாஸ்மின் பானு கூறியதாவது: நகராட்சித் தலைவர் ஜலீல் என்னிடம் கடனாக வாங்கியிருந்த 10 ஆயிரம் ரூபாயை தராததால், பல முறை கேட்டேன். பணம் தருவதாகக் கூறியதால் அவரது கட்டடத்திற்கு நிஷாவுடன் சென்றேன். குளிர்பானம் கொடுத்து, என்னை பலமுறை கெடுத்தனர். கத்தியைக் காட்டி நிர்வாணமாக்கி மொபைல் போனில் படமெடுத்த ஜலீல், இன்டர்நெட்டில் போட்டு மானத்தை வாங்கி விடுவேன் எனக் கூறி, மற்றவர்களுடன் சேர்ந்து மீண்டும் கெடுத்தார். சிகரெட்டால் சுட்டு, அடித்து சித்ரவதை செய்தார். இவ்வாறு யாஸ்மின் பானு கூறினார்.


Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ashik - trichy,இந்தியா
08-ஆக-201020:55:37 IST Report Abuse
ashik these should be punished by hanging , when the punishment is hard the criminal will reduce ruling party what s going to do?
Rate this:
Share this comment
Cancel
சூர்யா - Mangalore,இந்தியா
08-ஆக-201015:59:44 IST Report Abuse
சூர்யா இவனெல்லாம் எப்படி ஊர்த்தலைவரானான்!? இவனை ஆளும்கட்சி இன்னும் விலக்காதது ஏன் ?. ஏற்கெனவே பலமுறை இதே நபர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்தபோது ஆளுகட்சி ஹோதாவில் தப்பியவரை இறைவனே பொறுக்கமுடியாமல் மாட்டிவிட்டுள்ளார் ! பொலிசாரின் பலநாள் தலைவலியும் முடிவுக்கு வந்துள்ளது !
Rate this:
Share this comment
Cancel
ரவி - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
08-ஆக-201014:41:36 IST Report Abuse
ரவி இவர்களுக்கு கடுமையான தண்டனை உடனடியாக கொடுக்கப்படவேண்டும், அது மற்றவர்களுக்கு பாடமாக இருக்கவேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X