சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சினிமா பாடகியிடம் சமூக வலைதளத்தில் வக்கிர பேச்சு: உதவி பேராசிரியர் உட்பட இருவர் கைது

Added : அக் 23, 2012 | கருத்துகள் (3)
Advertisement
சினிமா பாடகியிடம் சமூக வலைதளத்தில் வக்கிர பேச்சு: உதவி பேராசிரியர் உட்பட இருவர் கைது

சென்னை:சினிமா பாடகி சின்மயியிடம், சமூக வலைதளத்தில் ஆபாசமாக பேசி, மன உளைச்சல் ஏற்படுத்திய, "நிப்ட்' உதவி பேராசிரியர் உட்பட, இருவரை, போலீசார் கைது செய்துள்ளனர்."கன்னத்தில் முத்தமிட்டால்' என்ற சினிமா படத்தில் இடம்பெற்ற, "ஒரு தெய்வம் தந்த பூவே' என்ற பாடல் மூலம் அறிமுகமானவர் சின்மயி. தேசிய விருது உள்ளிட்ட, பல்வேறு விருதுகளை பெற்றவர். இவர், கடந்த, 18ம் தேதி, தாய் பத்மாசினியுடன், சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம், புகார் அளித்தார்.


அதில், "சமூக வலைதளமான, "டுவிட்டரில்', என் வலைதளத்திற்குள் புகுந்து, சில சமூக விரோதிகள், மிக கேவலமாக, ஆபாச வார்த்தைகளை பதிவு செய்கின்றனர். நான், இலங்கை தமிழர்களுக்கு எதிராக செயல்படுவதாக சித்தரித்து, மன உளைச்சலை ஏற்படுத்தி வருகின்றனர். என் தாய்க்கும் மிரட்டல் வந்துள்ளது. என் புகழுக்கு களங்கம் கற்பிப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோரியிருந்தார்.


சைபர் கிரைம் போலீசார் விசாரிக்க, கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார். உதவி கமிஷனர், ஜெகபர்சாலி தலைமையிலான தனிப்படை போலீசார், பெண் வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிந்து, சென்னை, "நிப்ட்' கல்லூரி உதவி பேராசிரியர் சரவணகுமார் பெருமாளை, 37, நேற்று கைது செய்தனர்.சென்னை, நங்கநல்லூரை சேர்ந்த இவர், மேலும் சிலருடன் சேர்ந்து, சமூக வலைதளத்தில், ஆபாசமாக பேசி பதிவு செய்தது உறுதி செய்யப்பட்டது. இவர், எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இந்த கும்பலில் தொடர்புடைய, ராஜன் என்பவரை போலீசார், கோவையில் கைது செய்துள்ளனர்.


அவர், கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இன்று சென்னை கொண்டு வரப்படுகிறார். மேலும், நான்கு பேரை தேடி வருகின்றனர்.
இதுகுறித்து, கமிஷனர் ஜார்ஜ் கூறுகையில், ""சைபர் கிரைம் பிரிவில், தடயவியல் பரிசோதனைக்கான போதிய கட்டமைப்பு உள்ளது. எந்த மாதிரியான, சைபர் குற்றங்களில் ஈடுபட்டாலும், அவர்களை கண்டுபிடித்து, நடவடிக்கை எடுக்க முடியும். தயக்கமின்றி பொதுமக்கள் புகார் செய்யலாம்; உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ammu - chn  ( Posted via: Dinamalar Android App )
24-அக்-201220:19:03 IST Report Abuse
ammu ஆசிரியர்கள இப்படி இருந்தா நாடு விளங்கிறும்
Rate this:
Share this comment
Cancel
தமிழன் - covai  ( Posted via: Dinamalar Android App )
24-அக்-201200:13:17 IST Report Abuse
தமிழன் சரியாக புலனாய்ந்து அடுத்த செய்தி்யை வெளியிடுங்கள்
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - salem,இந்தியா
23-அக்-201217:14:19 IST Report Abuse
K.Sugavanam இவனுங்களை லாடம் கட்டி அதிக பட்ச்ச தண்டனை கொடுக்க வேண்டும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X