பொது செய்தி

இந்தியா

மக்கள் வரிப்பணத்தை வீணடித்த ராணுவ தளபதிகள்; அறிக்கையில் பகீர் தகவல்

Updated : அக் 23, 2012 | Added : அக் 23, 2012 | கருத்துகள் (35)
Advertisement
ஆயுத கொள்முதல் ராணுவ அதிகாரிகள் ஊழல்: தணிக்கையில் பகீர்

புதுடில்லி: இந்திய ராணுவத்திற்கு தேவைப்படும் ஆயுதங்களை கொள்முதல் செய்ததில் மக்கள் வரிப்பணம் சுமார் 100 கோடி ரூபாய் வீணடித்துள்ளதாக தற்போதைய தளபதி, முன்னாள் தளபதி மற்றும் ராணுவ அதிகாரிகள் மீது ராணுவ தணிக்கை குழு அறி்க்கையில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

100கோடி இழப்பு :

தற்போதைய ராணுவ தளபதி பிக்ராம்சிங் மற்றும், முன்னாள் தளபதி வி.கே.சிங்.,மற்றும் ராணுவ அதிகாரிகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 100கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக ராணுவ தணி்க்கை அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது. இழப்புகள் அனைத்தும் வெளிநாட்டு கருவிகளை ‌கொள்முதல் செய்வதில் ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

வெளிநாட்டு கருவிகள்:

ராணுவத்திற்கு தேவையான கருவிகளை கொள்முதல் செய்வதில் சீன தயாரிப்புகளே முக்கிய இடம் பிடித்துள்ளது. இவற்றில் பெரும்பாலான தயாரிப்புகள் தரம் குறைந்தவையாக உள்ளது. வெளிநாடுகளில் இருந்து தருவிக்கப் பட்ட கருவிகள் என கூறப்பட்டுள்ள அனைத்து கருவிகளும் மிக அதிக விலையில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் அந்த கருவிகள் இந்திய சந்தையி்ல் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்திருக்கலாம் என தணிக்கையி்ல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக உயர்தர பைனாகுலர்களை இந்திய இடைத்தரகர்கள் மூலம் கிழக்கு பிராந்திய பிரிவினர் ‌கொள்முதல் செய்துள்ளனர். அதே தரத்தில் இந்திய தயாரிப்பு கருவிகள் குறைந்த விலையில் விற்பனைக்கு இருந்துள்ள போதிலும் அவைகள‌ை கண்டுகொள்ளவில்லை என தெரிகிறது..

மற்றொரு உதாரணமாக ராணுவ தலைமையகம் ஒதுக்கிய புல்லட் புருப் ஜாக்கெட்டுகளை வடக்கு பிராந்திய ராணுவத்தினர் கொள்முதல் செய்துள்ளனர். இதன்மூலம் பிராந்தியங்களுடையே முறையான தகவல் பரிமாற்‌றத்திலும் குளறுபடி காணப்பட்டுள்ளது. இதனால் கடந்த 2009-10 மற்றும் 2010-2011 ஆகிய இரணடு ஆண்டுகளில் மட்டும் சுமார் 103.55 கோடி அளவிற்கு இழப்புஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தணிக்கை குழு அறிக்கை:

ராணுவத்திற்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ள கருவி்கள் அனைத்தும் சிறப்பு நிதிதிட்டத்தின் கீழ் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் எந்த நிதியின் மூலம் ஆயுதங்கள் மற்றும் கருவிகளை கொள்முதல் செய்வது என்பது குறித்து உத்தரவிடமுடியாது என்ற போதிலும் இரண்டு ராணுவ அதிகாரிகளின் மீது முழு விசாரணை நடத்த வேண்டும் என குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ragu - NJ,யூ.எஸ்.ஏ
25-அக்-201202:27:18 IST Report Abuse
Ragu மக்களாகிய நாங்கள் இலவசமாக டிவி பெற்று வரிபணத்தை வீணடித்தோம் , இவர்கள் புல்லட் ப்ரூப் என்று பெயர் வைத்த மழைகால ஜாகேட்டுகளை வாங்கி வீனடிதிருகிரார்கள். என்ன வித்தியாசம்
Rate this:
Share this comment
Cancel
Aboobacker Siddeeq - Singapore,சிங்கப்பூர்
24-அக்-201214:55:21 IST Report Abuse
Aboobacker Siddeeq நம்பிக்கை துரோகம் இது.... மத்தியில் நிலையான நிரந்தரமான ஆட்சி இருக்கிறதோ இல்லையோ... நாட்டின் பாதுகாப்புக்கும், மக்களின் பாதுகாப்புக்கும் ஆட்சியாளர்களை நம்பாமல் முத்தளபதிகளை நம்பித்தானே கோடானு கோடி மக்கள் இருக்கிறார்கள்.. எதிரி நாட்டுக்கரனுக்கு ஆப்பு வைக்கச்சொன்னால் இந்திய மக்களுக்கே குண்டைத்தூக்கி போடுகிறீர்களே.. ஒவ்வொரு முறை பட்ஜெட்டின் போதும் ராணுவத்திற்கு நிதி ஒதுக்கும் போது யாராவது இது அதிகம் என குரல் கொடுத்திருப்போமா? நாட்டின் பாதுகாப்புக்கு இதுவே போதாது என்று சொல்வோர் தான் அதிகம். அப்பேர்ப்பட்ட மக்களுக்கு செய்யும் நம்பிக்கை துரோகம் இது.. எதிரி நாட்டுக்காரனை மன்னிக்கலாம் இவர்களைப்போல் நம்பிக்கை துரோகிகளை மன்னிக்க கூடாது.. விசாரணையை துரிதப்படுத்தி அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க இனி ஜனாதிபதிக்குத்தான் தகுதி... அவரும் ஆவண செய்வாரா அல்லது தன்னை உருவாக்கிய காங்கிரசுக்கு ஜால்ரா அடிப்பாரா.???? பொறுத்திருந்து பார்ப்போம்.
Rate this:
Share this comment
Cancel
vasan - doha,கத்தார்
24-அக்-201213:45:36 IST Report Abuse
vasan சீக்கிரம் சீனாவிடம் அடிமைகளாகும் காலம் நெருங்கிவிட்டது.............இந்த அரசியல் வாதிகள் கொலை அடிச்சா காசில் ஜாலியாக வெளி நாட்டில் செட்டில் ஆகபோகிரார்கள்.....கடைசியில் நாம் தான் சாகபோகிறோம்............மீண்டும் ஒரு சுதந்திர போர் உருவாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை.....காந்தியை தான் குறை சொல்ல வேண்டும் பேசாமல் வெள்ளை காரன் ஆண்டிருந்தால் கூட நமக்கு கொஞ்சம் நல்லது செஞ்சி இருப்பான்................ அடிமைகளாக இருந்திருந்தால் கூட மூணு வேல சாப்பாடு எல்லோருக்கும் கெடச்சி இருக்கும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X