தமிழ்நாடு

டெங்கு'வை ஒழிக்க ரூ.2.50 கோடி ஒதுக்கீடு:தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

Added : அக் 26, 2012 | கருத்துகள் (1)
Share
Advertisement

திருச்சி: ""இரண்டு மாதங்களில் "டெங்கு' காய்ச்சலை முற்றிலும் ஒழிக்க, 2.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது,'' என சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் பேசினார்.தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜய், கடந்த இரு நாட்களுக்கு முன், ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் "பயோமெட்ரிக்' வருகைப்பதிவேடு முறையை துவக்கி வைத்தார். பின்னர், "டெங்கு' விழிப்புணர்வு பேரணியைதுவக்கி வைத்து, திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள "டெங்கு' சிறப்பு வார்டை பார்வையிட்டார்.தொடர்ந்து திருச்சி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த "டெங்கு' காய்ச்சல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் விஜய் பேசியதாவது:தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி, "டெங்கு' காய்ச்சல் பாதிப்புக்குள்ளான திருச்சி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், மதுரை, ஈரோடு, வேலுர் ஆகிய மாவட்டங்களுக்கு அரசு செயலாளர்கள் தலைமையில் ஒரு குழு அமைத்து, அந்த குழு ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நேரடியாக சென்று "டெங்கு' காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை தொடர்பாக, பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இரண்டு மாதங்களில் "டெங்கு' காய்ச்சலை முற்றிலும் ஒழிக்க, 2.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது."டெங்கு' காய்ச்சல் மற்ற காய்ச்சலை போல் இதுவும் ஒரு வகை வைரஸ் காய்ச்சலாகும். இதற்கு தனியாக மருத்துவ சிகிச்சை எதுவும் கிடையாது. காய்ச்சல் ஏற்பட்ட, இரண்டு நாட்களுக்குள், ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைக்கு சென்று ஆரம்ப நிலையிலே சிகிச்சை பெற்றால், 100 சதவீதம் முற்றிலும் கட்டுப்படுத்த முடியும்.திருச்சி மாவட்டத்தை பொறுத்த வரை ஏற்கனவே "டெங்கு' காய்ச்சல் தடுப்பு குறித்த நடவடிக்கை சிறப்பாக உள்ளது. இதை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.பொதுமக்களுக்கு "குளோரினேசன்' செய்யப்பட்ட குடிநீரே வழங்க வேண்டும். விழிப்புணர்வு குழுக்கள் மூலம் பொதுமக்கள் காய்ச்சி வடித்த குடிநீரை பருக வேண்டும் எனவும், "டெங்கு' காய்ச்சல் முற்றிலும் ஒழிக்கக் கூடியது தான் எனவும் எடுத்துக் கூறி அவர்களது அச்ச உணர்வை போக்க வேண்டும்."ரேபிட்-காட்' பரிசோதனை மூலம் டெங்கு காய்ச்சலை அறிய முடியாது. "எலிசா' சோதனை மூலம் மட்டுமே "டெங்கு' காய்ச்சலை உறுதி செய்ய முடியும். எனவே, காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு "ரேபிட்-காட்' பரிசோதனை செய்யக் கூடாது. மாவட்டத்தில் கூடுதலாக "எலிசா' பரிசோதனை வசதி, மணப்பாறை அரசு மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில் கலெக்டர் ஜெயஸ்ரீ, எம்.பி., குமார், எம்.எல்.ஏ.,க்கள் மனோகரன், பரஞ்ஜோதி, பூனாட்சி, சந்திரசேகர், துணைமேயர் ஆசிக்மீரா, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ராஜாத்தி உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ramesh - Coimbatore  ( Posted via: Dinamalar Android App )
26-அக்-201213:27:47 IST Report Abuse
ramesh கொசு மருந்தடிக்க இரண்டரை கோடியா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X