அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தின் மின் உற்பத்தி திட்டமிட்டே குறைக்கப்பட்டது: முதல்வர் குற்றச்சாட்டு

Updated : அக் 26, 2012 | Added : அக் 26, 2012 | கருத்துகள் (89)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியின் போது திட்டமிட்டே மின் உற்பத்தி குறைக்கப்பட்டதாக முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டினார். தமிழகத்தின் மின் வெட்டு குறித்து முதல்வர் ஜெயலலிதா இன்று டி.வி.,யில் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்தில் கடந்த அ.தி.மு.க., ஆட்சி காலங்களில் தேவைக்கேற்ப மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. கடந்த 1991-96, 2001-06 கால அ.தி.மு.க., ஆட்சியில்

சென்னை: தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியின் போது திட்டமிட்டே மின் உற்பத்தி குறைக்கப்பட்டதாக முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டினார். தமிழகத்தின் மின் வெட்டு குறித்து முதல்வர் ஜெயலலிதா இன்று டி.வி.,யில் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்தில் கடந்த அ.தி.மு.க., ஆட்சி காலங்களில் தேவைக்கேற்ப மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. கடந்த 1991-96, 2001-06 கால அ.தி.மு.க., ஆட்சியில் மின்வெட்டு பிரச்னை என்பதே இல்லாமல் இருந்தது. அனைவருக்கும் மின்சாரம் தடையின்றி கிடைத்து வந்தது. கடந்த 2001-06ம் ஆண்டில் அ.தி.மு.க., ஆட்சியில் 2518 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் கடந்த தி.மு.க., ஆட்சியில் 206 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்யும் வகையில், திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தற்போது தமிழ்நாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் முறையான பராமரிப்பு இல்லாததால் அவை அடிக்கடி பழுதாகி விடுகின்றன. அதனால் மின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த தி.மு.க., ஆட்சியில் வெளிமாநிலங்களில் இருந்து நீண்ட கால அளவில் மின்சாரம் பெற எந்த ஒரு ஒப்பந்தமும் போடப்படவில்லை. நீண்ட கால அளவில் மின்சாரம் பெற முயற்சிக்காமல் குறைந்த கால அளவிலேயே ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இது முழுக்க முழுக்க திட்டமிட்டே செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் உற்பத்தி திட்டமிட்டே குறைக்கப்பட்டுள்ளது.

நாங்கள் ஆட்சியை மீண்டும் பிடித்த போது, தமிழக மின்சார வாரியத்தின் நிலைமை அதலபாதாளத்தில் இருந்தது. மின்வாரியத்திற்கு ரூ. 40 ஆயிரத்து 375 கோடி அளவிற்கு கடன் இருந்தது. இனி தமிழக மின்வாரியத்திற்கு கடன் கொடுக்கக்கூடாது என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது. இப்படி ஒரு இக்கட்டான சூழலிலும், தமிழக மின்வாரியத்துக்கு தேவையான நிதியை தாராளமாக வழங்கியுள்ளேன். தமிழக மின்வாரியத்தை மீட்டெடுக்க பகீரத முயற்சி செய்து வருகிறேன்.

தமிழக மின்வெட்டு பிரச்னையை போக்க வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்கலாமே என சிலர் ஆலோசனைகள் கூறுகின்றனர். நாங்கள் ஆட்சிப்பொறுப்பேற்றதும் குஜராத்திலிருந்து 500 மெகாவாட் மின்சாரம் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் மின்தொடர் நெருக்கடி காரணமாக, அங்கிருந்து 235 மெகாவாட் மின்சாரம் மட்டுமே பெறப்பட்டு வருகிறது. இதற்கு முழு பொறுப்பு மத்திய அரசே. மாநிலங்களில் மின்தொடர்களை அமைக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசைச் சார்ந்தது. வடமாநிலங்களில் மின்தொடர்களை போதுமான அளவு ஏற்படுத்தியுள்ள மத்திய அரசு, மின்தொடர்களை அமைக்காமல் தென் மாநிலங்களை குறிப்பாக தமிழகத்தை வஞ்சித்து விட்டது.

கடந்த 16 ஆண்டுகளில், ஒரு ஆண்டு தவிர மற்ற 15 ஆண்டுகளில் மத்திய அரசில் தி.மு.க., கோலோச்சி வருகிறது. மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க., மற்றும் காங்கிரஸ் அமைச்சர்களுக்கு மின்தொடர்களை அமைத்து தர முடியவில்லையா. வழிஇல்லையா, வகையில்லையா. அவர்களுக்கு மனமில்லை. நான் ஆட்சிப்பொறுப்பேற்றதும் பிரதமரிடம் ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்திற்கு வழங்கும்படி மன்றாடி கேட்டுக்கொண்டேன். ஆனால் அது நடக்கவில்லை. தி.மு.க., காங்கிரஸ் அமைச்சர்களாவது மின்சாரத்தை பெற நடவடிக்கை எடுத்தார்களா. எதையாவது செய்தார்களா. செய்யவில்லை. காவிரி, முல்லைப்பெரியாறு, மண்ணெண்ணெய் உள்ளிட்ட பிரச்னைகளில் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது மத்திய அரசு.

தற்போது வரும் நவம்பர் மாதம் முதல் தமிழகத்தில் நடைபெற்று வரும் புதிய மின் திட்டங்கள் செயல்பாட்டிற்கு வரத்துவங்கும். அப்போது மின்வெட்டு குறையத்துவங்கும். அடுத்தாண்டு இறுதிக்குள் தமிழகத்தின் மின்வெட்டு பிரச்னை முழுவதுமாக மறைந்து, மீண்டும் தமிழகத்தல் ஒளிவீசத்துவங்கும்” என்று அவர் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (89)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
manoharan - chennai,இந்தியா
27-அக்-201217:22:37 IST Report Abuse
manoharan இதை கண்டுபிடிக்க உங்களுக்கு ஒன்றரை ஆண்டுகள் தேவைப்பட்டதோ? இந்த காத்து குத்தலுக்கு எவனாவது இளிச்ச வாயன் கிடைப்பான்.
Rate this:
Cancel
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
27-அக்-201213:48:09 IST Report Abuse
Rangarajan Pg இந்த முதல்வருக்கு நிர்வாக திறமை அற்று போய் விட்டது போல இருக்கிறது. இன்னமும் அடுத்தவர் மீது பழிபோட்டு தன்னை பிரச்சினையிலிருந்து விடுவித்து கொள்ள தான் பார்க்கிறார். தமிழகம் மின் உற்பத்தியில் தன்னிறைவு பெறும் என்று எந்த தைரியத்தில் கூறுகிறார்? அதற்கு என்னென்ன திட்டங்கள் வைத்திருக்கிறார். எடுத்து கூற வேண்டியது தானே. மக்களுக்கு எல்லாவற்றையும் தெரியபடுத்த வேண்டும் தானே. மக்கள் தானே இவரை தேர்ந்தெடுத்தார்கள்? இவர்களுடைய STRATEGY என்னவென்று மக்களுக்கு தெளிவாக கூற வேண்டியது தானே. இன்னமும் இத்தனை மாதங்களில் இதை முடித்து விடுவோம், தன்னிறைவு பெறுவோம், என்றெல்லாம் கூறிகொண்டிருந்தால் எப்படி??. யாருமே இவரை நம்ப மாட்டார்களே. ஒரு மாநிலத்தின் முதல்வர் போல இவர் பேசவில்லை. ஏதோ ஒரு அரசியல்வாதி போல தான் இன்னமும் பேசி வாக்குறுதி கொடுத்து கொண்டிருக்கிறார். எனக்கு TECHNICALLY இதை மின் பிரச்சினையை பற்றியோ மற்றும் ஆட்சிமுறையை பற்றியோ எதுவும் தெரியாது, ஆதலால் இதை இப்படி செய்யலாம் அதை அப்படி செய்யலாம் என்று வெறும் கருத்து கூற முடியாது. ஆனால் ஒரு மாநிலத்தின் முதல்வர் எப்படி இருக்க வேண்டும்? ""தான் ஆளும் நாடு இந்த லட்சணத்தில் இருப்பது தனக்கு தான் வெட்கக்கேடு"" என்று நினைக்கும் முதல்வர் என்று நமக்கு வாய்க்கிராரோ அப்பொழுது தான் நமது நாடு எல்லாவற்றிலும் தன்னிறைவு பெரும், சுய மரியாதை கிடைக்கும் நாடும் மக்களும் சுபிட்சமாக இருப்பார்கள். வெறும் சுயநல அரசியல்வாதிகள் ஆளும் வரை இப்படி தான் எதற்கெடுத்தாலும் பற்றாக்குறை, ஊழல், திருட்டு, வன்முறை என்று நமது நாடு சீரழிந்து கொண்டிருக்கும். இப்படியே சென்று கொண்டிருந்தால் நமது நாடு வாழ தகுதியற்ற நாடாக ஆகி விடும். ஆப்ரிக்கா போல ஒருவரை ஒருவர் அடித்து கிடைத்ததை பிடுங்கி கொண்டு செல்லும் நிலைமை தான் ஏற்படும். இதை எல்லாம் யார் தான் சரிபடுத்துவது. WE ARE LIVING AMOUNG DEMON AND DEVIL .. பேய்க்கும் பிசாசுக்கும் நடுவில் இருந்துகொண்டு மக்களாகிய நாம் யாரை தான் தேர்ந்தெடுப்பது? இவர் ஆண்டாலும் கஷ்டம் தான் கொடுக்கிறார்கள், அவர் ஆண்டாலும் கஷ்டம் தான் கொடுக்கிறார்கள். வேறு யார் ஆண்டாலும் கஷ்டம் தான் நமக்கு பரிசு. இதை எப்படி தான் சரிபடுத்துவது? தேர்தல் சமயத்தில் மட்டுமே எப்படியாவது தனது கொள்ளையடித்த பணத்தை கொண்டு வாக்குகளை விலைக்கு வாங்கி ஆட்சிக்கு வந்து விடுகிறார்கள். தமிழகத்தை முன்னேற விடாமல் செய்து விடுகிறார்கள். பணத்திற்கு விலைபோகும் வாக்காளர்கள் இருக்கும்வரை நாடு முன்னேறாது. மக்கள் இலவசத்திற்கு மயங்காமல், பணத்திற்கு விலைபோகாமல் தேர்தலின் போது மன உறுதியோடு இருந்தால் மட்டுமே இதை போன்ற அரசியல் தீயசக்திகளின் ஊடுருவல் ஆட்சி அதிகாரத்தில் ஏற்படுவது தடுக்க முடியும்.
Rate this:
Cancel
Kumar Gk - Doha,கத்தார்
27-அக்-201212:23:20 IST Report Abuse
Kumar Gk தமிழ்நாடு மக்கள் என்ன பாவம் செய்தார்கள் இவர்களிடம் மாட்டிக்கொண்டு விழி பிதுங்குகிறார்கள் மீண்டும் தீபாவளி எப்போது?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X