பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளிகளில் ஆய்வு தமிழில் தடுமாறும் 9ம் வகுப்பு மாணவர்கள்

Added : அக் 26, 2012 | கருத்துகள் (20)
Advertisement
 அரசு பள்ளிகளில் ஆய்வு தமிழில் தடுமாறும் 9ம் வகுப்பு மாணவர்கள்

ஒன்பதாம் வகுப்பில், முழுமையாக தமிழ் வாசிக்க, எழுத தெரியாத மாணவர்களை கண்டறியும் பணி நடந்து வருகிறது.அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்ககம், தமிழகத்தில், 9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்புக்கான கல்வித்தரத்தை மேம்படுத்த, பல்வேறு செயல்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில், 9ம் வகுப்பில் மாணவர்களின் இடைநிற்றல் அதிக அளவில் இருப்பதால், அதில் இருக்கும் சிக்கல்களை களைய, "அச்சீவ்மென்ட் டெஸ்ட்' என்ற சாதனை கண்டறியும் சோதனை, அரசு பள்ளிகளில் நடத்தப்பட்டது.
இதில், தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் உள்ள, 9ம் வகுப்பு மாணவ, மாணவியரிடம் தாய்மொழியான தமிழை முழுமையாக வாசிப்பதிலும், எழுதுவதிலும், திறன் இருப்பது கண்டறியப்பட்டது. எந்த அளவுக்கு மாணவர்களின் கற்றல் பயன் அவர்களிடம் சேர்ந்து, அதனால் திறன் பெற்றிருக்கின்றனர் என்பதை கண்டறியும் வகையிலும் வினாத்தாள் அமைக்கப்பட்டது. இதைக் "கற்றல் அடைவு தேர்வு' என, அழைக்கின்றனர்.இச் சோதனைகளில், 20 சதவிகிதத்துக்கும் அதிகமான மாணவர்கள் தமிழை முழுமையாக வாசிக்கவும், எழுதவும் தெரியாத நிலையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் உள்ள, 9ம் வகுப்பு மாணவர்களுக்கும் இந்த, "கற்றல் அடைவு தேர்வு'களை நடத்தி, தமிழை முழுமையாக எழுதவும், படிக்கவும் முடியாத மாணவர்களை கண்டறியும் பணி, முழு வீச்சாக நடந்து வருகிறது.
தமிழ் மொழி முழுமையாக தெரிந்தால் மட்டுமே, தமிழ்வழி கல்வியில் படிக்கும் மற்ற பாடங்களையும், பிழையின்றி படிக்க முடியும் என்பதால், தமிழ் மொழியை முழுமையாக கற்றுத்தர பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதில் கண்டறியப்படும் மாணவர்களுக்கு சிறப்பு ஆசிரியர்கள் மூலம், பள்ளி நேரம் முடிந்த பின்பும், சனிக்கிழமை களிலும், நவீன முறைகளில் தமிழ் மொழி எழுத்துகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

-நமது நிருபர்-

Advertisement


வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
alwin vedhasingh - chennai,இந்தியா
27-அக்-201219:44:29 IST Report Abuse
alwin vedhasingh வணக்கம், தவறு மாணவர்களிடத்தில் இல்லை. அரசின் பாட புத்தக தயாரிப்பின் குறைபாட்டின் நிமித்தமாகவே. ஏனெனில் அடிப்படை ஆரம்ப வகுப்பில் இருந்து பாட தயாரிப்பு ,மொழி மேம்பாடு இல்லாமலும் இலக்கனத்திற்கு முக்கியத்துவம் இல்லாமலும், திறன்மிக்க பாட வல்லுனர்களால் ஆராய்ந்து தயாரிக்கவில்லை எனவும் கருதுகிறேன். குறிப்பாக அடிப்படையில் இலக்கணத்திற்கு முதல் வகுப்பில் இருந்து முக்கியத்துவம் கொடுத்தால்தான், சிந்திக்கும் திறன் மாணவர்களுக்கு அதிகரிக்கும். அறிவியல் திறனும் அதிகரிக்கும். இதை யும்விட மேலாக தமிழ் ஆசிரியர்கள் பொறுப்புடனும் கடமை உணர்வோடும் மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும். நன்றி
Rate this:
Share this comment
Cancel
Devakumar James - Kadatchapuram,இந்தியா
27-அக்-201219:25:17 IST Report Abuse
Devakumar James இதில் ஆசிரியர்களைக் குறைகூறிப் பயனில்லை. முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிக்கு (ஓரிரு நாட்கள் மட்டுமே) வந்தாலே போதும் (படிக்க வேண்டிய அவசியம் இல்லை) தேர்ச்சி பெற்று அடுத்த வகுப்புக்குச் சென்றுவிடலாம் என்ற அரசின் கொள்கை இருக்கும்வரை ஒன்பதாம் வகுப்பு மாணவன் என்ன ப்ளஸ் டூ படிக்கும் மாணவனும் தமிழ் வாசிக்கமாட்டான். இதில் இலவசக் கட்டாயக் கல்வி சட்டம் வேறு.. கல்வித் தரத்தைக் கெடுப்பதற்காகவே வந்த சட்டம்..இன்னும் ஓரிரு ஆண்டுகளில் கல்வித் தரம் மிகவும் தாழ்ந்துவிடும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.
Rate this:
Share this comment
Cancel
vs.kathi Resan - Mumbai,இந்தியா
27-அக்-201216:34:20 IST Report Abuse
vs.kathi Resan முதல்ல அனைத்து பள்ளியல் உள்ள ஆசிரியர்கள் சரியான தமிழ் பேசுகிறார்களா என்று சோதனை செய்யவும்... மிகவும் கொச்சை தமிழ்.... நிறைய பேருக்கு சரியான தமிழ் உச்சரிப்பு வராது.... இதில் பாதி பேர் தி மு க அனுதாபிகள்.... இதுல சென்னை தமிழ் வேற... கொடுமை... தமிழ் இனி மெல்ல சாகும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X