சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஏமாற்றி திருமணம் செய்த கண்டக்டர், தாயுடன் அதிரடி கைது

Added : அக் 27, 2012
Advertisement

தர்மபுரி: குடும்ப நடத்த மறுப்பு தெரிவித்த கணவன் மீது மனைவி கொடுத்த புகாரை தொடர்ந்து, அரசு பஸ் கண்டக்டர் மற்றும் அவரது தாயை போலீஸார் கைது செய்தனர்.
தர்மபுரி, பிடமனேரி, சென்னகிருஷ்ணசெட்டி பகுதியை சேர்ந்தவர் ஞானேஸ்வரி, 30. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அரசு பஸ் கண்டக்டர் குமார், 33, என்பவருக்கும் கடந்த ஏழு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணமான நாள் முதல் கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்னை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
தர்மபுரி மகளிர் போலீஸில் ஞானேஸ்வரி புகார் கொடுத்தார். புகாரில், "திருமணத்தின் போது, எனக்கு என் பெற்றோர், 20 பவுன், 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் வரதட்சணையாக கொடுத்தனர். திருமண நாள் முதல் கணவர் குடும்பத்தார் என்னை மிரட்டி தகராறு செய்து வருகின்றனர். எனது கணவர் என்னுடன் உடலுறவு வைத்துக் கொள்ளாமல் குடும்ப நடத்த மறுத்து வருகிறார். அவர் ஆண்மையற்றவர் என்பதை மறைத்து என்னை ஏமாற்றி கணவர் குடும்பத்தினர் திருமணம் செய்து கொடுத்துளளனர்.
இது தொடர்பாக எனது குடும்பத்தார் பஞ்சாயத்துக்கு சென்றபோது இதை வெளியில் சொல்லாமல் குடும்பம் நடத்துமாறு கூறி மிரட்டினர். எனது கணவர் குடும்பத்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்தார்.
போலீஸார் விசாரித்து, குமார், அவரது தாய் புஷ்பா ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான நார்த்தனார் சாந்தலட்சுமி, அவரது கணவர் ஜெயக்குமார், குமாரின் தாய்மாமன் முருகேசன். அவரது மனைவி பூங்கொடி ஆகியோரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X