ஏரல் சேர்மன் அருணாசலசுவாமி கோயிலில் நாளை ஆடி அமாவாசை திருவிழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஏரல் சேர்மன் அருணாசலசுவாமி கோயிலில் நாளை ஆடி அமாவாசை திருவிழா

Added : ஆக 08, 2010
Share
ஏரல்: ஏரல் சேர்மன் அருணாசலசுவாமி கோயில் ஆடி அமாவாசை திருவிழா நாளை  நடக்கிறது. விழாவை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் கூட்டமாக கோயிலுக்கு வரத் துவங்கியுள்ளனர்.  தென் மாவட்ட அளவில் புகழ்பெற்ற கோயிலான ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயில் ஆடி அமாவாசை திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். ஒவ்வொரு ஆண்டும் 12 நாட்கள் நடக்கும் இத்திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து

ஏரல்: ஏரல் சேர்மன் அருணாசலசுவாமி கோயில் ஆடி அமாவாசை திருவிழா நாளை  நடக்கிறது. விழாவை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் கூட்டமாக கோயிலுக்கு வரத் துவங்கியுள்ளனர். 


தென் மாவட்ட அளவில் புகழ்பெற்ற கோயிலான ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயில் ஆடி அமாவாசை திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். ஒவ்வொரு ஆண்டும் 12 நாட்கள் நடக்கும் இத்திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். இந்த ஆண்டு திருவிழா கடந்த ஜூலை 31ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் ஒவ்வொரு நாளும் இரவு பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. இன்று இரவு 8 மணிக்கு சின்ன சப்பரத்தில் பிச்சாண்டவ மூர்த்தி கோலத்தில் கோயில் வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. முக்கிய விழாவான ஆடி அமாவாசை திருவிழா நாளை நடக்கிறது.


நாளை மதியம் 1 மணிக்கு சுவாமி உருகு பலகையில் கற்பூர உலா வரும் காட்சி, சிறப்பு அபிஷேக ஆராதனை, மாலை 4 மணிக்கு இலாமிச்சவேர் சப்பரத்தில் சேர்மத்திருக்கோலம், இரவு 8 மணிக்கு 16 காலம் கற்பக பொன் சப்பரத்தில் எழுந்தருளல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. 10ம் தேதி காலை 4 மணிக்கு 2ம் காலம் வெள்ளை சாத்தி தரிசனம், காலை 8.30 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகம், மதியம் 1 மணிக்கு 3ம் காலம் பச்சைசாத்தி தரிசனம், மாலை 6 மணிக்கு ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோயில் பந்தலில் தாகசாந்தி, இரவு 11 மணிக்கு சுவாமி கோயில் வந்து சேருதல் ஆகியவை நடக்கிறது. வரும் 11ம் தேதி நிறைவு நாள் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று காலை 8 மணிக்கு தீர்த்தவாரி பொருநை நதியில் சகல நோய் தீர்க்கும் துறையில் நீராடல், மதியம் அன்னதானம், மாலையில் ஆலிலைசயன அலங்காரம், இரவு 9 மணிக்கு மங்கள தரிசனத்துடன் இந்த ஆண்டு ஆடி அமாவாசை திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவு பெறுகிறது.  பாதுகாப்பு பணியில் ஏரல் இன்ஸ்பெக்டர் மகிமைவீரன் தலைமையில் ஏராளமான போலீசார் ஈடுபடுகின்றனர். அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் பரம்பரை அக்தார் கருத்தப்பண்டியன் செய்துள்ளார்.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X