சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தீண்டிய பாம்பை கழுத்தில் போட்டு வேடிக்கை காட்டிய வினோத மனிதர்

Added : அக் 31, 2012 | கருத்துகள் (21)
Share
Advertisement
வேடிக்கை காட்டிய வினோத மனிதர்

ஓசூர்,: சூளகிரியில், பாம்புகளை பிடிக்கும் வாலிபர், கடித்த பாம்பை கழுத்தில் போட்டு, பொதுமக்களுக்கு விளையாட்டு காட்டியதை, பொதுமக்கள் பார்த்து ஆச்சரியம் அடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி பகுதியில், ஏராளமான மலைக் கிராமங்கள் உள்ளன. இந்த கிராமத்தை சுற்றி, வனப்பகுதிகளாக உள்ளதால், மலை பாம்பு, நாகப்பாம்பு, சாரைபாம்பு, காட்டு வீரியன் உள்ளிட்ட, 15 வகை பாம்புகள், உலா வருகின்றன. மழை காலத்தில், விவசாய நிலங்கள், குடியிருப்புகளில், இவை புகுந்து, பீதியை ஏற்படுத்தும்.
அத்திமுகத்தை சேர்ந்த முனியப்பா, 40, என்பவர் தான், இந்த பாம்புகளை பிடிப்பார்; 10 வயதில் இருந்து, பாம்பு பிடித்து வருகிறார். நேற்று மாலை, அத்திமுக குடியிருப்பு பகுதியில், நாகப்பாம்பு புகுந்தது.
தகவல் அறிந்த முனியப்பா, மகுடி ஊதி, ஊர்ந்து வந்த பாம்பை பிடித்தார். அந்த பாம்பு, அவரை கையில் தீண்டியது. இதை பார்த்த பொதுமக்கள், அதிர்ச்சியடைந்தனர். சற்றும் அச்சமடையாத முனியப்பா, எந்தவித சிகிச்சையும் மேற்கொள்ளாமல், தீண்டிய பாம்பை கழுத்தில் போட்டு கொஞ்சியதோடு, பொதுமக்களுக்கு விளையாட்டு காட்டினார்.இது குறித்து முனியப்பன் கூறியதாவது:இதுவரை, 2,000 பாம்பு வரை, பிடித்துள்ளேன்; இதில், மலைபாம்புகளும் அடங்கும். விஷபாம்புகள், 55 முறை, என்னை கடித்துள்ளன. பாம்பின் விஷம், இதுவரை, என்னை ஒன்றும் செய்யவில்லை. பாம்பு பிடிப்பதோடு, பொது மக்களுக்கு, பாம்பு கடி உள்ளிட்ட, விஷ முறிவுக்கு வைத்தியம் அளிக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார். ஓசூர் அரசு மருத்துவமனை, டாக்டர் பொன்ராஜ் கூறியதாவது:பாம்பின் விஷத்தில் இருந்து தான், பாம்பு கடிக்கு மருந்து தயார் செய்யப் படுகிறது. எனவே, பலமுறை பாம்பு கடி பட்டவர்களுக்கு, அதனால் பாதிப்பில்லை; சிகிச்சை அளிக்கவும் தேவையில்லை. அடிக்கடி பாம்பு கடிக்கும் போது, அவரது உடலில் விஷத்தன்மை முறிக்கும் நிலை ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sikandar - GEorge town,யூ.எஸ்.ஏ
03-நவ-201204:06:36 IST Report Abuse
Sikandar முற்றிலும் தவறான செய்தி டாக்டர் அவர்களே. பாம்பின் விஷத்திலிருந்துதான் விஷ முறிவு மருந்து தயாரிக்க படுகிறது ஆனால் அது மனித உடம்பில் செலுத்தி அல்ல. ஏனெனில் மனித ரத்தம் பாம்பின் விஷதிற்கு அண்டிடோட் எனப்படும் எதிர் சக்தி உருவாக்காது. ஆனால் குதிரை ரத்தம் பாம்பின் விஷதிற்கு அண்டிடோட் எனப்படும் எதிர் சக்தி இயற்கையாகவே உருவாக்கும். அதலால் தான் பாம்பு கடித்தால் குதிரை சாவாது. எனவே பாம்பின் விஷதை முதலில் குதிரைக்கு செலுத்தி பின் அதிலிருந்து அண்டிடோட் தயாரிப்பர்கள் .
Rate this:
Cancel
Snake Ravi - Sydney,ஆஸ்திரேலியா
02-நவ-201201:09:59 IST Report Abuse
Snake Ravi " எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசாதேள் அம்பி, பாம்பின் விஷத்திலிருந்துதான் விஷ முறிவு மருந்து தயாரிக்க படுகிறது என்பது அனைவரும் அறிந்ததே.... " - நன்றி துபாய் ஏகாம்பரம்.
Rate this:
Cancel
Snake Ravi - Sydney,ஆஸ்திரேலியா
02-நவ-201201:08:22 IST Report Abuse
Snake Ravi ஹேய் நம்ம snake பாபு மாதிரி இந்த பாம்பாட்டி snake ரவி brisbane ஆஸ்திரேலியாவில் இப்போது இல்லாமல் தான் கிண்டி சென்னையில் இருக்கும்போது பார்த்ததை அப்படியே அடிச்சு விடுறாரு இந்த snake ரவி. கருத்து என்னமோ அறிவியல் ஆனாலும், இந்த பிளாஸ்மா ஒதைக்குது. பிளாஸ்மாவில் இருக்கும் புரதம் அது தான் இந்த antibody என ஆங்கிலத்தில் கூறுவார். அந்த antibody தான் antivenom அதாவது பாம்புக்கடிக்கு எதிர் மருந்து. என்ன பாம்பாட்டி ரவி உம் முகமூடி மற்றும் சிருஆசிரியர் வேலையை உதறிவிட்டு அறிவியல் விவாதம் நடத்த தயாரா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X