பொது செய்தி

தமிழ்நாடு

முதல்வரின் "கிரீன் சிக்னல்' பின்பே நகராட்சி தலைவர் கைது : டி.எஸ்.பி .,க்கே தெரியாமல் மறைப்பு

Added : ஆக 09, 2010 | கருத்துகள் (149)
Advertisement
முதல்வரின் "கிரீன் சிக்னல்' பின்பே நகராட்சி தலைவர் கைது  : டி.எஸ்.பி .,க்கே தெரியாமல் மறைப்பு

 ராமேஸ்வரம் :ராமேஸ்வரத்தில்  "கேங் ரேப்பிங் ' கில் ஈடுபட்டநகராட்சி தி.மு.க., தலைவர் ஜலீலை, முதல்வர் கருணாநிதியின் "கிரீன் சிக்னல்' கிடைத்த பின்பே கைது செய்துள்ளனர். இது டி.எஸ்.பி.,க்கே தெரியாமல் நடத்தப்பட்டுள்ளது.


ராமேஸ்வரத்தில் தி.மு.க.,நகராட்சி தலைவர் சொந்தமான கட்டடத்தில் "கேங் ரேப்பிங் ' கில் ஈடுபட்ட நகராட்சி தலைவர் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். மதுரை ஜெயிலில் அடைக்கும்படி கோர்ட் உத்தரவிட்டது.இதற்கிடையே, மருத்துவ சோதனைக்காக அழைத்து செல்லப்பட்ட இவர்கள், ராமநாதபுரம் தலைமை மருத்துவமனையில் "அட்மிஷன்' போட்டு, அங்கேயே தங்கி உள்ளனர்.


இதற்கு முன் பல்வேறு குற்ற வழக்குகளில் போலீசாரிடம் பிடிபடாமல் தப்பிய ஜலீலை, கற்பழிப்பு சம்பவத்தில் தப்பக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக செயல்பட்ட போலீசார் , ராமேஸ்வரம் டி.ஸ்.பி., கமலாபாய்க்கே தெரியாமல், இந்த "ஆபரேசனை' முடித்துள்ளனர். வழக்கமாக குற்றச்சம்பவங்களில் ஜலீல் ஈடுபட்ட போதெல்லாம் அவரை தப்பவைக்க ,ராமேஸ்வரம் டி.எஸ்.பி., உறுதுணையாக இருந்துள்ளதாக, ஏற்கனவே உயர் போலீஸ் அதிகாரிகள் மத்தியில் புகார் உள்ளது. ஜலீலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் எதிர் கட்சியினர் பல்வேறு சம்பவங்களில், புகார் செய்வது, ஆர்ப்பாட்டம் நடத்துவது போன்ற சம்பவங்களும் நடந்துள்ளன.


இந்நிலையில், கும்பலால் நிர்வாணப்படம் எடுத்து மிரட்டி, கற்பழிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட யாஷ்மின்பானு, தகுந்த ஆதாரங்களுடன் ராமநாதபுரம் எஸ்.பி.,பிரதீப்குமாரிடம் புகார் கொடுக்கவே, இவரது புகாரின் படி நடவடிக்கை எடுக்க ராமேஸ்வரம் இன்ஸ்பெக்டர்களுக்கு உத்தரவிட்டார். "கேங் ரேப்பில்' ஈடுபட்டவர்களை கைது செய்யும் வரை, வேறு யாருக்கும் தெரியக்கூடாது என்றும், முக்கியமாக ராமேஸ்வரம் டி.எஸ்.பி., க்கு தெரியக்கூடாது என்ற உத்தரவும் மேலிடத்தில் இருந்து வந்துள்ளது.


 இதனிடையே ஜலீலை கைது செய்ய தமிழக முதல்வரிடமும் அனுமதி கேட்கப்பட்டு, "கிரீன் சிக்னல்' கிடைத்தவுடன்தான் இன்ஸ்பெக்டர்கள் சண்முகம்,சேசு ஆகியோர் நள்ளிரவு 11 மணிக்கு ஜலீல் உள்ளிட்டஆறு பேரை கைது செய்துள்ளனர். மறுநாள் காலை ஐந்து மணிக்குத்தான் டி.எஸ்.பி.,உள்ளிட்ட சக போலீசாருக்கு இது தெரியவந்துள்ளது. செய்வதறியாது திகைத்த தி.மு.க.,பிரமுகர்களும் அமைச்சர், எம்.பி.,என பலதரப்பினரின் சிபாரிசையும் எதிர்பார்த்தனர். ஆனால், அது நடக்காது என தெரிந்தபின், சிறைக்கு செல்வதையாவது தள்ளிப்போடுவோம் என இரண்டு நாட்களாக மருத்துவமனையில் நாட்களை கடத்திவருகின்றனர். சில நாட்களுக்கு முன் நடந்த "ஹம்லா ஆபரேசனில்' கோட்டைவிட்டதில் துவண்டுபோன ராமேஸ்வரம் போலீசாரோ, நகராட்சி தலைவர் ஆபரேசனை(கைது) சாதித்துவிட்டோம் என்ற சந்தோஷத்தில் உள்ளனர்.


Advertisement


வாசகர் கருத்து (149)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RANGARAJAN - CHENNAI,இந்தியா
10-ஆக-201011:19:47 IST Report Abuse
RANGARAJAN பேசாம நம்ம தமிழ்நாட்டு காவல் துறை ஒரு அறிவிப்பு செஞ்சுடலாம். அதாவது இனிமே எந்த புகாரும் ஆளுங்கட்சியினர் மேலே வந்தா அது முதல்வர் கிட்ட இருந்து கிரீன் சிக்னல் அட்டாச் செய்யப்பட்டு இருந்தா மட்டும் தான் FIR பதிவு செய்வோம் அப்படின்னு. அதனால இனிமே ஆளுங்கட்சியினரால பாதிக்கப்பட்டவங்க யாராவது புகார் செய்யணும்ன்னா இங்க ஒரு நடை சென்னை வந்து நம்ம புத்தம் புது தலைமை செயலகதுல வெளில வெய்யில்ல queue ல காத்துருந்து நம்ம முதல்வர பாத்து மனு குடுத்து அதோட உங்க புகாரையும் காமிச்சி ஒரு பச்சை கையெழுத்து (கிரீன் சிக்னலாம்) வாங்கிட்டு அப்புறம் உங்க ஊருக்கு போய் அந்த புகார காவல் துறையில குடுங்க. அப்பதான் வேல நடக்கும். அப்படியே அங்க குடுக்க வேண்டிய மாமுலையும் தவறாம குடுத்துடுங்க. அத பத்தி முதல்வர் தன்னோட கிரீன் சிக்னல் ல எதுவும் குறிப்பு எழுதிருக்க மாட்டார். அதனால குடுக்க வேண்டியத குடுத்துடுங்க.
Rate this:
Share this comment
Cancel
சாமுவேல் - UK,இந்தியா
10-ஆக-201001:18:39 IST Report Abuse
சாமுவேல் உங்களில் யார் குற்றம் செயாதவனோ முதல் கல்லை இவர்கள் மேல் எறியுங்கள் இது நம்ம வாசகர் முல்லை மைந்தனுக்கும் தான்
Rate this:
Share this comment
Cancel
நாக்க முக்க - Madurai,இந்தியா
09-ஆக-201022:17:45 IST Report Abuse
நாக்க முக்க தி.மு.க ரௌடி கழகமாக ஆகி ரொம்ப வருஷம் ஆச்சு. கேடுகெட்ட தி.மு.க மாயையை விட்டு வெளிய வாருங்கள். கேப்டன் அடுத்த முதல்வராக வாய்ப்பு கொடுக்க வேண்டும்... தி.மு.க வின் அணைத்து ரௌடி கும்பலையும் தூக்கி உள்ளே தள்ள வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X