செருப்பு வீசியது யார்? கெஜ்ரிவால் "திடுக்' புகார்

Added : நவ 03, 2012 | கருத்துகள் (4)
Share
Advertisement

புதுடில்லி:அரவிந்த் கெஜ்ரிவால் மீது, "ஷூ' வீசிய நபர், சோனியா மருமகன், வதேராவுக்கு நெருக்கமானவர், என்பது தெரிய வந்துள்ளது."ஊழலுக்கு எதிரான இந்தியா' அமைப்பின் தலைவர், அரவிந்த் கெஜ்ரிவால், டில்லியில் நேற்று முன்தினம், நிருபர்கள் கூட்டத்தில் பேசினார்.


முகேஷ் அம்பானியை பகைத்து கொண்டதால் தான், ஜெய்ப்பால் ரெட்டியின் இலாகா மாற்றம் செய்யப்பட்டதாக, கெஜ்ரி வால் குறிப்பிட்டார்.சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா மீது, கெஜ்ரிவால், ஏற்கனவே, ஊழல் புகார் கூறியிருந்தார். இந்த கூட்டத்தில் நிருபரை போன்று நுழைந்து, கெஜ்ரிவாலிடம் கேள்வி கேட்ட ஜெகதீஷ் சர்மா என்பவர், திடீரென, "ஷூ'வை தூக்கி, அவர் மீது வீசினார்.


கெஜ்ரிவால் மீது "ஷூ' வீசிய ஜெகதீஷ் சர்மா, சோனியாவின் குடும்பத்துக்கு நெருக்கமானவர், என்ற விவரம் தற்போது தெரிய வந்துள்ளது. இதற்கு ஆதாரமாக, ராபர்ட் வதேராவுடன், ஜெகதீஷ் இருப்பது போன்ற படமும் வெளியிடப் பட் டுள்ளது.ஆனால், இதை ஜெகதீஷ் மறுத்துள்ளார். ""காங்கிரஸ் கட்சித் தலைவர் என்ற முறையில் அவரது வீட்டுக்கு பலர் வந்திருக்கலாம். அப்போது, வதேராவுடன், நான் பேசிய படத்தை வெளியிட்டுள்ளனர். வதேராவுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. தனிப்பட்ட முறையில் தான், கெஜ்ரிவால் மீது என்னுடைய கோபத்தை காண்பித்தேன்,'' என்றார் ஜெகதீஷ்.


Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. MURALIDHARAN - CHENNAI,இந்தியா
03-நவ-201210:12:06 IST Report Abuse
S. MURALIDHARAN சோனியா, வதேராவெல்லாம் எவ்வளவு பெரிய மனிதர்கள் அவர்களைப் போய் ஆளை வைத்து செருப்பு வீசினார்கள் என்று கேஜ்ரிவால் குற்றம் சொல்லக் கூடாது அவர்கள் லெவலுக்கு அவர்களே நேரில் வந்து வீச முடியுமா என்ன
Rate this:
Cancel
03-நவ-201207:58:26 IST Report Abuse
அறிவாலயம் c / o போயஸ் சிறப்பான ஆட்சி போய் செருப்பான ஆட்சி நடக்குது வாழ்க காங்கிரஸ் கலாசாரம்
Rate this:
Cancel
03-நவ-201206:47:02 IST Report Abuse
அறிவாலயம் c / o போயஸ் இத்தாலிக் குடும்பத்தால் காங்கிரசின் மானம் பிஞ்ச செருப்பு லெவலுக்கு போய்விட்டது. இத்தாலி மேக் ஷூ பயங்கர விலை.எனவே கேஜ்ரிவால் கலங்கவேண்டாம்
Rate this:
senthil - chennai,இந்தியா
03-நவ-201210:26:05 IST Report Abuse
senthilஅப்போ இத்தாலி மேக் சொக்கத்தங்கம்.........?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X