பதிவு செய்த நாள் :
கருத்துகள் (13)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

தமிழக அரசின் சூரிய ஒளி மின் சக்தி திட்டத்தில், முதல் கட்டமாக, முதல்வர் அலுவலகம் மற்றும் கவர்னர் மாளிகை ஆகியவற்றில், சோலார் மின் சக்தி திட்டம் நிறைவேற்றப்படுகிறது.

தமிழக அரசு, கடந்த வாரம், மாநில சூரிய மின்சக்தி கொள்கையை அறிவித்தது. அதில், கடும் மின் பற்றாக்குறையில் தவிக்கும் தமிழகத்துக்கு, மாற்று மின்சக்தியாக, சூரிய மின்சக்திக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அரசு அலுவலகங்கள், படிப்படியாக சூரிய மின்சக்திக்கு மாற்றப்படும்.

வீடுகளில் சூரிய மின்சக்தி அமைக்க, அரசு ஊக்கத் தொகை வழங்கும் என, கூறப்பட்டுள்ளது.சூரிய மின் கொள்கையின் முதல் கட்டமாக, முதல்வர் அலுவலகம் மற்றும் கவர்னர் மாளிகை ஆகியவற்றில், இந்த மின்சக்தி உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்காக, சர்வதேச டெண்டரை, தமிழக எரிசக்தி மேம்பாட்டு

முகமை கோரியுள்ளது. 35 கிலோவாட் மின்சாரத்தை பெரும் வகையில், இந்த டெண்டர்
விடப்பட்டுள்ளது.முதல்வர் அலுவலகத்தில், 10 கிலோ வாட் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்யும் நிலையத்தையும், கவர்னர் மாளிகையில், 10 கிலோ வாட் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்யும் நிலையம் இரண்டும், 5 கிலோ வாட் சூரிய மின் சக்தியை உற்பத்தி செய்யும் நிலையம் ஒன்றும் அமைக்கப்படுகின்றன.

சூரிய மின் உற்பத்தி நிலையத்தை அமைக்கும் நிறுவனம், ஐந்து ஆண்டுகள் தொடர் பராமரிப்பில் ஈடுபட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.பராமரிப்புப் பணிக்கு, திட்டத்தின் மொத்த மதிப்பில் ஆண்டுக்கு, 3 சதவீதம் என, 15 சதவீதத் தொகை அளிக்கப்படுகிறது. 25 ஆண்டுகள் உத்தரவாதத்துடன் உபகரணங்கள் பொருத்தப்படுகின்றன.
இதுகுறித்து, தமிழக எரிசக்தி மேம்பாட்டு முகமை

Advertisement

அதிகாரி ஒருவர் கூறியதாவது:முதல்வர் அலுவலகம் மற்றும் கவர்னர் மாளிகையில், சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையம் அமைக்க கோரப்பட்டுள்ள டெண்டருக்கு, இம்மாதம், 15ம் தேதி கடைசி நாள். இதன்பின், ஓரிரு மாதங்களில், சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும்.

அரசின்சூரிய மின்சக்தி கொள்கையில், அரசு அலுவலகங்களில், சூரிய மின்சக்தி உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக, முதல்வர் அலுவலகம் மற்றும் கவர்னர் மாளிகை ஆகியன இவ்வகை மின்சக்திக்கு மாற்றப்படுகிறது.

படிப்படியாக, அரசு அலுவலகங்கள் இதுபோன்ற மின்சக்திக்கு மாற்றப்படும்.முதல் கட்டமாக, அரசு கட்டியுள்ள, 60 ஆயிரம் பசுமை வீடுகளில், சூரிய மின்சக்தி அமைக்கப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.
- நமது சிறப்பு நிருபர் -
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (13)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kannappan - sivagangai,இந்தியா
10-நவ-201220:06:05 IST Report Abuse
kannappan சூரிய ஒளி மூலம் மின்சாரப் பயன்பாடு என்பது உண்மையில் ஒரு நல்ல விஷயம். இதை கண்டிப்பான முறையில் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் நமக்கு நல்லது.
Rate this:
Share this comment
Cancel
இரா. விஸ்வநாதன் - மதுரை,இந்தியா
07-நவ-201204:01:04 IST Report Abuse
இரா. விஸ்வநாதன் நல்ல திட்டம். தொடக்கம் முதல்வரின் இல்லத்தில் (போயஸ் கார்டன்) இருந்து துவங்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும். ஏன் அண்ணா பல்கலைக்கழகம், அல்லது IIT - Madras, இவற்றிடம் இப்பணியை ஒப்படைக்கலாமே?
Rate this:
Share this comment
Cancel
Kuppusami Poongavanam - VELLORE,இந்தியா
04-நவ-201222:40:57 IST Report Abuse
Kuppusami Poongavanam சூரிய சக்தி மின்சாரத்தை வீட்டில் பொருத்த மானியத்துக்கு குறைந்த பட்ச மின் உற்பத்தி என்பதை மாற்றி எல்லோருக்கும் கிடைக்க செய்ய வேண்டும். அப்போதுதான் நடுத்தர வர்க்கத்தினரும் தத்தமது வீடுகளில் சூரிய சக்தி மின்சாரத்தை பொருத்த வாய்ப்பு ஏற்படும்.
Rate this:
Share this comment
Cancel
Tamil_Dravidan - singapore ,சிங்கப்பூர்
04-நவ-201221:49:55 IST Report Abuse
Tamil_Dravidan வீடுகளில் சூரிய மின்சக்தி அமைக்க, அரசு ஊக்கத் தொகை வழங்கும் என, கூறப்பட்டுள்ளது - இதை பற்றிய முழு விபரமும் தந்தால் பொதுமக்களும் பயனடையலாம். இதில் வெளிப்படைத்தன்மை இருந்தால் இது வெற்றி அடையும். அதைத்தான் எதிர்பார்கிறோம்.
Rate this:
Share this comment
Cancel
கொங்குநாடு பொள்ளா - பொள்ளாச்சி,இந்தியா
04-நவ-201220:13:59 IST Report Abuse
கொங்குநாடு பொள்ளா இலவச லேப்டாப் தருவதற்கு பதில் சோலார் panel குடுக்க முடியுமா
Rate this:
Share this comment
Cancel
Ananda Ayyappan JV - Düsseldorf,ஜெர்மனி
04-நவ-201220:08:03 IST Report Abuse
Ananda Ayyappan JV "மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது...." நல்ல முயற்சி...வரவேற்போம்
Rate this:
Share this comment
Cancel
Erode kingcobra - erode,இந்தியா
04-நவ-201218:58:03 IST Report Abuse
Erode kingcobra சர்வதேச டெண்டர் ஏன்? இந்திய அளவில் யாரும் இல்லையா ,உள்நாட்டுக்கு டெண்டர் கொடுத்தா லாபம் கம்மி என்று வெளி நாட்டு டெண்டரா ? எல்லா பொருள்களும் மிக நீண்ட வருடம் உத்தரவாதம் கொடுக்க வேண்டும் .சரி சரி எல்லாம்.அடுத்த ஆட்சி வந்ததும் டெண்டர்ல கோளாறு சொல்லி கேஸ் போடாமலிருந்தால் நல்லது .
Rate this:
Share this comment
Cancel
ramesh babu - madurai,இந்தியா
04-நவ-201216:30:09 IST Report Abuse
ramesh babu நம் தமிழ்நாடுக்கு இப்போதைய மிக அவசிய தேவை சூரிய மின்சக்தி மட்டுமே. எல்லா வீடுகளுக்கும் சூரிய மின்சக்தி பெற அரசின் மானியம் மற்றும் ஆக்கபூர்வ உதவி செய்தால் இத்திட்டம் சுலப வெற்றி பெரும்
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
04-நவ-201211:28:45 IST Report Abuse
villupuram jeevithan அரசு கொடுக்கும் டிவி, மிக்ஸ்சி, பேன், கிரைண்டர் எல்லாமே சூரிய மின்சக்தியில் செயல்படும் நிலையை உருவாக்கினால் நல்லது.
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
04-நவ-201208:39:11 IST Report Abuse
villupuram jeevithan அதேபோல் எல்லா சுயநிதி கல்லூரிகளும் சூரிய சக்தியை தான் பயன்படுத்தவேண்டும் என்ற கட்டாயம் இருக்க வேண்டும். கல்லூரிக்கு அருகில் விளைநிலங்கள் வைத்துக் கொண்டு அதற்கான இலவச மின்சாரத்தை உபயோகப் படுத்துகிறார்கள் பல் கல்லூரிகள்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X