பதிவு செய்த நாள் :
கருத்துகள் (52)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் அவர் அமெரிக்காவின், 45வது அதிபராக மேலும் நான்கு ஆண்டுகளுக்கு ஆட்சி செய்ய உள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. ஜனநாயக கட்சி வேட்பாளராக அதிபர் ஒபாமா மீண்டும் போட்டியிட்டார். இவரை எதிர்த்து, குடியரசு கட்சி சார்பில், மாசாசூசெட்ஸ் மாகாண முன்னாள் கவர்னர், மிட்ரோம்னி போட்டியிட்டார்.
பல மாதங்களாக இருவரும் தீவிர பிரசாரம் செய்தனர். தேர்தல் நேரத்தில் வீசிய, "சாண்டி' புயலால், இவர்களது பிரசாரம் பாதிக்கப்பட்டது. "போதுமான நிவாரண பணிகள் மேற்கொள்ளாத காரணத்தால், ஒபாமாவின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும்' என, கூறப்பட்டது.மொத்தமுள்ள, 50 மாகாணங்களில், 10 மாகாணங்களில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பது கணிக்க முடியாத நிலையில் இருந்தது. அதிபர் வேட்பாளர்களின் வெற்றிக்கு, கேள்வி குறியாக இருந்த மாகாணங்களில், ஒபாமா கணிசமான ஓட்டுக்கள் பெற்றுள்ளார்; இதன் மூலம் அவர் வெற்றி கனியை பறித்துள்ளார்.

ஒபாமாவிற்கு 303 ஓட்டுக்கள்

இந்த தேர்தலில், பிரதிநிதிகள் சபைக்கு, 435 பேரும், செனட் சபைக்கு, 100 பேரும், வாஷிங்டன் சார்பில், மூன்று பேரும் என, 538 பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஓட்டு போட்டு, அதிபர் மற்றும் துணை அதிபரை, அடுத்த மாதம், முறைப்படி தேர்வு செய்வர். குறைந்த பட்சம், 270 ஓட்டுகள் பெற்றால் வெற்றி நிச்சயம், என்ற நிலையில், அதிபர் ஒபாமாவுக்கு, 303 ஓட்டுக்கள் கிடைத்துள்ளன. மிட்ரோம்னிக்கு 206 ஓட்டுக்கள் கிடைத்துள்ளன.
செனட் சபையில் மொத்தமுள்ள, 100 இடங்களில், குடியரசுக் கட்சிக்கு, 45 இடங்களும், ஜனநாயக கட்சிக்கு, 51 இடங்களும் கிடைத்துள்ளன. மற்ற கட்சிகள், இரண்டு இடங்களை பிடித்துள்ளன.பிரதிநிதிகள் சபையில் மொத்தமுள்ள, 435 இடங்களில், குடியரசு கட்சிக்கு, 231 இடங்களும், ஜனநாயக கட்சிக்கு, 187 இடங்களும் கிடைத்துள்ளன.தனக்கு ஓட்டு போட்டவர்களுக்கு நன்றி தெரிவித்த மிட்ரோம்னி, அதிபர் ஒபாமா மீண்டும் பதவியில் தொடர வாழ்த்து தெரிவித்துள்ளார்.


மத்திய தர மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம்

தன் தொகுதியான, சிகாகோவில் அதிபர் ஒபாமா, வெற்றியை மக்களிடையே பகிர்ந்து உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:என்வெற்றிக்கு பாடுபட்ட அனைவருக்கும் நன்றி. வெற்றி வாய்ப்பை இழந்த, மிட்ரோம்னி, நாட்டு முன்னேற்றத்துக்கு தொடர்ந்து பாடு படவேண்டும். நாட்டு மக்கள் தங்கள் உரிமையை தெரிவிக்கும் முக்கியமான நிகழ்வு தான் தேர்தல். இதற்காக தான், உலகின் பல நாடுகளில் ஆட்சி மாற்றங்களும், போராட்டங்களும் நடந்து கொண்டிருக்கின்றன.நம்நாட்டின் கடன் சுமையை குறைக்கவும், வரி சீர்திருத்தங்கள், குடியேற்ற நடைமுறைகளில் மாற்றம் செய்யவும், எதிர்கட்சியினருடன் சேர்ந்து பணியாற்ற உள்ளேன்.மக்களும் ஓட்டு போட்டதோடு நின்று விடாமல், இக்கட்டான சமயங்களில், அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்

Advertisement

.நியூயார்க் மற்றும் நியூஜெர்சியில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் சீரடைய, வேற்றுமைகளை மறந்து அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.மேலும், தொழில் வாய்ப்புகளை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய தர மக்களின் பாதுகாப்புக்கு வழிகாண வேண்டியது அவசியம். எனவே, ஏழை, பணக்காரன், கருப்பர், வெள்ளையர், ஆசியர், ஐரோப்பியர், ஊனமுற்றவர் என்றெல்லாம் பாகுபாடு பார்க்காமல், ஒன்றிணைந்து நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடுவோம்.இவ்வாறு ஒபாமா பேசினார்.

அமெரிக்க செனட் சபைக்கு 19 பெண்கள் தேர்வாகியுள்ளனர்
தேர்தல் பிரசாரத்துக்கான விளம்பரத்துக்காக குடியரசு மற்றும் ஜனநாயக கட்சிகள், 3,560 கோடி ரூபாய் செலவிட்டுள்ளன.
ஹவாய் தீவில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டதுளசி கபார்ட் வெற்றி பெற்றுள்ளார். இவர் இந்து சமுதாயத்தை சேர்ந்தவர். ஆனால், இந்திய வம்சாவளியை சேர்ந்தவரல்ல.

துணை அதிபராக ஜோ பிடன் மீண்டும் தேர்வு

வாஷிங்டன்: அமெரிக்க துணை அதிபராக, மீண்டும், ஜோ பிடன் தேர்வு செய்யப்படுவார், என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமா மீண்டும் போட்டியிட்டது போல, ஜனநாயக கட்சியின் சார்பில், துணை அதிபர் தேர்தலில் ஜோ பிடன் போட்டியிட்டார். ஜனநாயகக் கட்சிக்கு கிடைத்த ஓட்டுகள், ஜோ பிடனை, அடுத்த துணை அதிபர் தேர்வுக்கு தகுதியாக்கியுள்ளது.தற்போது தேர்வாகியுள்ள பிரதிநிதிகள், அடுத்த மாதம் கூடி, அதிபரையும், துணை அதிபரையும் முறைப்படி தேர்ந்தெடுப்பார்கள். எனவே, ஜோ பிடன் துணை அதிபராவது உறுதியாகியுள்ளது. இப்போது அவருக்கு வயது 69. "வயதான நபரை, துணை அதிபராக, மீண்டும் தேர்வு செய்வதா' என்ற தயக்கம் சில பிரதிநிதிகளிடம் காணப்படுகிறது.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (52)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
p.saravanan - tirupur,இந்தியா
12-நவ-201220:15:47 IST Report Abuse
p.saravanan A great victory of U .S President mr. opama. every indian people has been very delightful and red . congratulation .
Rate this:
Share this comment
Cancel
dori dori domakku dori - nisova,மான்ட்செரட்
08-நவ-201223:47:44 IST Report Abuse
dori dori domakku dori திருமணம் ஆனாலும் சமையலில் வாழ்க்காய், திதி என்றாலும் வாழக்காய் - இதுதான் அமெரிக்க இந்திய உறவு முறை - so இதில் ஒபாமா வாய் இருந்தால் என்ன , ரோமனி ஆய் இருந்தால் என்ன
Rate this:
Share this comment
Cancel
kadal nandu - Dhigurah,மாலத்தீவு
08-நவ-201216:07:46 IST Report Abuse
kadal nandu All the very best obaama ...........
Rate this:
Share this comment
Cancel
padhu - Chennai,இந்தியா
08-நவ-201215:40:01 IST Report Abuse
padhu வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
K.vijayaragavan - chennai,இந்தியா
08-நவ-201213:31:44 IST Report Abuse
K.vijayaragavan ஒபாமா வெற்றி பெற்றதற்கு வாழ்த்துவது நாகரீகமே என்றாலும், அதை தலையில் தூக்கி வைத்துக்கொண்டாடுவது ரொம்பவே ஓவர். அமெரிக்கர்கள் அவரை மீண்டும் தேர்ந்தெடுத்ததற்கு காரணம், ஒசாமாவை வீடு புகுந்து அடித்தது தான். அவரது ஆட்சியில் நாடு பத்திரமாக இருக்கும் என்ற நம்பிக்கை தான். ஆனால் அவர் பாகிஸ்தானோடு கை கோர்த்தவர் என்பதையும் இங்கு யோசிக்க வேண்டும். இந்தியாவுடனான அமெரிக்காவின் உறவு எப்போதுமே மதில் மேல் பூனை போல் தான் இருந்து வந்திருக்கிறது. காரணம், நேரு காலம் தொட்டு இந்தியா ரஷ்யாவுக்கு தூக்கிய காவடி தான். இன்னும் அந்த ரஷ்ய அடிமைத்தனம் இந்தியாவிடமிருந்து போகவில்லை. இப்போதும் இந்தியாவுக்கு ரஷ்ய பாசம் இருக்கவே செய்கிறது. அந்த அளவுக்கு ரஷ்யா ஒன்றும் விசுவாசம் காட்டி விடவில்லை. அமெரிக்கா இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க இந்தியாவே காரணம். இப்போது ஒபாமா மீண்டும் தேர்ந்துக்கப்பட்டதால் மட்டும் அமெரிக்க உறவு மாறி விடுமா? தனது முதல் ஆட்சி காலத்தில் இந்தியர்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்தவர் தான் இந்த ஒபாமா. யார் அமெரிக்க ஜனாதிபதியாக வந்தாலும், இந்தியாவுடன் சற்று தள்ளியே பழகுவரே தவிர, இந்திய அமெரிக்க உறவு நெருக்கம் இப்போதைக்கு சாத்தியம் இல்லை. ஒபாமா கருப்பினத்தை சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக அவரை தூக்கி வைத்துக்கொண்டாடுவது மெச்சத்தக்கதல்ல. காரணம் அவர் எந்த இனத்தவராக இருந்தாலும், அடிப்படையில் அவர் ஒரு அமெரிக்கர். இதை மறக்காமல் இருப்பது நல்லது.
Rate this:
Share this comment
Cancel
Diviya Rathi - jeddah,சவுதி அரேபியா
08-நவ-201212:44:20 IST Report Abuse
Diviya Rathi இதில் இருந்து அங்கேயும் கருத்து கணிப்பு என்ற பெயரில் கருத்து திணிப்பு நடந்து இருக்கு .என்று புரிகிறது ...
Rate this:
Share this comment
Cancel
Ravichandran - dar salam ,தான்சானியா
08-நவ-201212:14:46 IST Report Abuse
Ravichandran அமெரிக்காவில் நான் கருப்பு இனத்தவன் தான் என தைரியமாக கணக்கெடுப்பில் கூறிய நேர்மை தான் எனக்கு பிடிச்சது. ஆனா எங்க நாட்டுல சிபான்மை இனத்தை சேர்ந்தவர்கள் தங்கள் பேரை மாற்றிகொல்லாமல் அதே ராமசாமி, அர்ஜுனன், கோபால் அப்படினு பேரை வட்சிக்கிட்டு ஊரை ஏமாற்றி ஒட்டு கேப்பார்கள். தான் சேர்ந்த மதத்தையோ இனத்தையோ தைரியமா சொல்லி உங்கள மாதிரி ஒட்டு கேட்க இங்க யாருக்கும் நேர்மை கிடையாது.
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
08-நவ-201211:31:40 IST Report Abuse
villupuram jeevithan ஒபாமா போல், மோடி போல் ஜெயாவுக்கும் மீண்டும் வாய்ப்பு கொடுத்தால் தான் தமிழகம் முன்னேறும்.
Rate this:
Share this comment

Microsoft OLE DB Provider for SQL Server error '80040e31'

Query timeout expired

/xtralog_load.asp, line 349