பொது செய்தி

தமிழ்நாடு

முதல்வர் பார்வை திரும்புமா? தீபாவளி சிறப்பு பஸ்களில் மாற்றுத்திறனாளிகள் புறக்கணிப்பு

Added : நவ 09, 2012 | கருத்துகள் (10)
Share
Advertisement
முதல்வர் பார்வை திரும்புமா? தீபாவளி சிறப்பு பஸ்களில் மாற்றுத்திறனாளிகள் புறக்கணிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இயக்க உள்ள, 6,000 சிறப்பு பஸ்களில், தாங்கள் புறக்கணிக்கப்படுவதால், முதல்வர், ஜெ., உடனடியாக தலையிட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


எதிலும் இடம் இல்லை:தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வர, சென்னை கோயம்பேடு புறநகர் பஸ் நிலையத்தில் இருந்து, அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் மாநிலத்தின் முக்கிய ஊர்களுக்கு, இம்மாதம், 9, 10, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில், 2,800 பஸ்கள் இயக்கப்படுகின்றன.அதேபோல், சென்னையை தவிர்த்து, மாநிலம் முழுவதிலும் இருந்து, இம்மாதம், 9, 10, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில், 4,000 பஸ்கள் இயக்கப்படுகின்றன. சிறப்பு பஸ்கள், 13 முதல், 16ம் வரை இயக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்திருக்கிறது. சிறப்பு பஸ்களில், தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக, மாற்றுத்திறனாளிகள் வேதனை அடைந்துள்ளனர்.


விண்ணப்பிக்க நாள் இல்லை:இது குறித்து, மாற்றுத்திறனாளிகள் கூறியதாவது:அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில், இணையதளம் மூலம் பயண தேதிக்கு ஒரு மாதம் முன்பிருந்து முன்பதிவு செய்ய வசதி அளிக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும், மேற்கண்ட ஒதுக்கீட்டில், இருக்கை எண் ஒன்று, இரண்டில் பயணம் செய்ய மாற்றுத்திறனாளிகள், பதிவு ஆரம்பித்த, 10 நாட்களுக்கு முன், அதாவது பயண தேதிக்கு, 20 நாட்களுக்கு முன் பதிவு செய்ய வேண்டும்.


இல்லையெனில், அந்த இருக்கைகள், பொது இருக்கைகளாக மாற்றப்படுகின்றன. தீபாவளிக்கு, 10 நாட்களுக்கு முன் அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பதால், ஆன் - லைன் மூலம், மாற்றுத்திறனாளி இருக்கைகளை முன் பதிவு செய்ய முடியாமல் உள்ளது. நேரில் சென்று, கவுன்டர்களில் முன்பதிவு செய்ய முயற்சித்தாலும், இந்த ஒதுக்கீடு கிடைப்பதில்லை.


முன்னதாகவே, அந்த இருக்கைகள் மற்றவர்களுக்கு விற்கப்படுகின்றன. அதே போல், துணை இல்லாமல் பயணம் செய்ய முடியாத மாற்றுத்திறனாளிகள், அரசு மருத்துவரிடம், குறிப்பிட்ட படிவத்தில் சான்று வாங்கி, உதவிக்கு ஒருவரை அழைத்துச் சென்றால், அவருக்கும் சலுகை கட்டணம் அளிப்பதும் இல்லை. இதற்கான அரசாணை இரு ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்டிருந்தும், இன்று வரை நடைமுறை படுத்தப்படவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.


நடவடிக்கை தேவை: தீபாவளிக்காக இயக்கப்படும் சிறப்பு பஸ்களில், அவர்களுக்கு உரிய இரு, "சீட்'களை, பஸ் புறப்படும் முன், ஒரு மணி நேரம் வரை , ஒதுக்கீடு செய்யாமல் இருக்கலாம். அந்த சீட் நிரப்பப்படாத, நிலை ஏற்படின், சீனியர் சிட்டிசன், ஒதுக்கீடாக மாற்றும் உரிமையை நடத்துனருக்கு அளிக்கலாம். இது குறித்து அரசு போக்குவரத்து கழகம் உரிய நடவடிக்கையை எடுக்க முதல்வர் உத்தரவிட்டால் நல்லது என்ற கருத்து பரவலாக உள்ளது.


- நமது நிருபர் -


Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P.R.KANDASAAMI - DHAKA,வங்கதேசம்
09-நவ-201221:52:31 IST Report Abuse
P.R.KANDASAAMI Yes right what is the duty of officers the clear order is there and allso lot of bus and train is there why we want fear
Rate this:
Cancel
muthukkumaran - thiruchy  ( Posted via: Dinamalar Android App )
09-நவ-201220:37:55 IST Report Abuse
muthukkumaran தயவு செய்து உதவுங்கள்
Rate this:
Cancel
A.Muthukkumaran - Chennai  ( Posted via: Dinamalar Android App )
09-நவ-201220:35:36 IST Report Abuse
A.Muthukkumaran pls chench friends & என் இனிய நன்பர்களே அவர்களும் மனிதர்கள் தானே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X