கொழும்பு: இலங்கை வெலிக்கடை சிறைக்குள் ஏற்பட்ட மோதலில் 27 பேர் கொல்லப்பட்டனர். 35 பேர் காயமுற்றனர். கடும் குற்றம் புரிந்த குற்றவாளிகள் வெலிக்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். போர்க்காலத்தில் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்ட தமிழர்கள் 50 பேர் வரை இந்த சிறையில் உள்ளனர். இங்கு சோதனை நடத்துவதற்காக அதிரடிப்படையினர் வந்தபோது எதிர்ப்பு தெரிவித்த கைதிகள் போலீசார் மீது தாக்குதல் நடத்த துவங்கினர். இதனையடுத்து போலீசார் கண்ணீர்புகை மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் கைதிகள் 27 பேர் பலியாயினர்.
சிறை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை எடுத்து கைதிகள் தாக்குதல் நடத்தினர். பலர் படுகாயமுற்ற நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த மோதலில் இறந்தவர்கள் அனைவரும் கைதிகளே ஆவர் பாதுகாப்பு போலீசார் ஒரு சிலர் காயமுற்றதாக தெரிகிறது. கைதிகள் கலவரத்தை அடுத்து சிறையை சுற்றிலும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் கலவரத்தை பயன்படுத்தி பல கைதகிள் மதில்சுவர் ஏறி வெளியே தப்பி விட்டதாக கூறப்படுகிறது. பல கைதிகள் சிறை கூடாரத்தின் மதில் மீது ஏறி நின்ற படி இருந்தனர். இந்த கலவரம் சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் நீடித்ததாகவும் சிறை வளாகத்தில் பயங்கர துப்பாக்கிச்சப்தம் கேட்டபடி இருந்ததாகவும் உள்ளூர் காரர் ஒருவர் தெரிவித்தார். இந்த மோதலில் தமிழ்கைதிகள் யாரும் இறக்கவில்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE