சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போட்டோ கிராபர்களை துப்பாக்கியால் சுட முயன்ற, தி.மு.க., நகராட்சி தலைவர்

Updated : ஆக 10, 2010 | Added : ஆக 09, 2010 | கருத்துகள் (60)
Advertisement
 போட்டோ கிராபர்,துப்பாக்கி, சுட முயன்ற, தி.மு.க., நகராட்சி தலைவர்

ராமேஸ்வரம் : கும்பலாக பெண்ணை கற்பழித்த வழக்கில் கைதான ராமேஸ்வரம் தி.மு.க., நகராட்சி தலைவர் ஜலீல் உள்ளிட்ட ஆறு பேரை ராமேஸ்வரம் கோர்ட்டுக்கு போலீசார் நேற்று மாலை அழைத்து வந்தனர். அப்போது, போலீசாரின் துப்பாக்கியை பறித்து, படம் எடுக்க முயன்ற பத்திரிகை போட்டோ கிராபர்களை ஜலீல் சுட முயன்றார்.


ஜலீலிடம் கொடுத்த பணத்தை வாங்க வந்த கீழக்கரையை சேர்ந்த யாஸ்மின்பானு என்ற பெண்ணை, கும்பலாக சேர்ந்து கற்பழித்த வழக்கில், ஜலீல் உட்பட ஆறுபேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை கோர்ட் உத்தரவுப்படி மருத்துவ பரிசோதனைக்காக போலீசார் ராமநாதபுரம் அழைத்துச் சென்றனர். இரண்டு நாட்களுக்கு பின், மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்த, நேற்று மாலை ஆறு பேரையும் போலீசார் வேனில் ராமேஸ்வரம் கோர்ட்டிற்கு அழைத்து வந்தனர். இவர்களை படம் எடுக்க, நாளிதழ் மற்றும் தனியார் "டிவி' போட்டோகிராபர்கள் கோர்ட் வாசலில் காத்திருந்தனர். போலீஸ் வேன் வந்ததும், கீழே இறங்கிய ஜலீல், "படம் எடுக்க கூடாது', என தகாதவார்த்தையில் திட்டினார்.


திடீரென, பாதுகாப்பிற்கு வந்த போலீசாரின் துப்பாக்கியை பறித்து, போட்டோகிராபர்களை சுட முயன்றார். உடனே போலீசார், ஜலீலை மடக்கிப் பிடித்து, அவரிடம் இருந்து துப்பாக்கியை பறித்தனர். அப்போது மயக்கம் அடைந்தது போல் நடித்த ஜலீல் முகத்தில், போலீசார் தண்ணீர் தெளித்து மீண்டும் வேனிற்குள் கொண்டு சென்றனர். பின், சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ்காரர் தியாகராஜன் உள்ளிட்ட ஐந்து பேரை மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தினர். விசாரணை செய்த மாஜிஸ்திரேட் குமரேசன், அவர்களை ஆக., 20 வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டர். ஜலீல் உள்ளிட்ட ஆறுபேரும் மதுரை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.


மருத்துவமனையில் அட்மிட் செய்ய டாக்டர்கள் சான்றிதழ்  :*ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் நகராட்சி தலைவரை பரிசோதித்த டாக்டர்கள், தொடர்ந்து மருத்துவமனையில் அட்மிட் செய்ய வேண்டும் என சான்றிதழ் கொடுத்துள்ளதால், இவருக்கு முறையான பரிசோதனை நடத்திட வேண்டும், என பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
*கோர்ட்டில் படம் எடுக்க சென்ற போட்டோகிராபர்களை துப்பாக்கியால் சுட முயன்ற ஜலீல் குறித்து, நேற்று மாலை ராமேஸ்வரம் வந்த ராமநாதபுரம் எஸ்.பி., பிரதீப்குமாரிடம் புகார் தெரிவித்த நிருபர்கள்,"பாதுகாப்பு வழங்கும்படி,' கேட்டுக்கொண்டனர்.


Advertisement




வாசகர் கருத்து (60)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
காயல் அபு RIYADH - RIYADH,சவுதி அரேபியா
10-ஆக-201023:09:50 IST Report Abuse
காயல் அபு RIYADH வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் DMK இக்கு சரியான பாடம் புகட்டுகள் .அதன் முலம் குடும்ப அரசியல் வாதிகள் தலை நிமிரமாடர்கள்.
Rate this:
Share this comment
Cancel
hameed - dubai,இந்தியா
10-ஆக-201023:03:21 IST Report Abuse
hameed ஹாய்
Rate this:
Share this comment
Cancel
மீரான் - chennai,இந்தியா
10-ஆக-201022:47:04 IST Report Abuse
மீரான் இந்த ஆறு பேரையும் மொட்டை அடித்து கரும்புள்ளி செம்புள்ளி குத்தி வீதி வீதியாக ஊர்வலம் வரசெய்யணும். மீண்டும் இவர்களுக்கு கடும் தண்டனையும் கொடுக்கவேண்டும். அப்போதுதான் இவர்கள் திருந்துவார்கள் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X