பொது செய்தி

தமிழ்நாடு

சூரியஒளி, காற்று, மின் ஆற்றலால் இயங்கும் ஆட்டோ உருவாக்கல்

Added : நவ 13, 2012 | கருத்துகள் (22)
Advertisement
சூரியஒளி, காற்று, மின் ஆற்றலால்  இயங்கும் ஆட்டோ உருவாக்கல்

திண்டுக்கல்: சூரிய ஒளி, காற்று, மின் ஆற்றல்களை கொண்டு இயங்க கூடிய வகையில் ஆட்டோ ஒன்றை திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., கல்லூரி பேராசிரியர் மோசேதயான், மின்னணுவியல் துறை மாணவர்களுடன் இணைந்து உருவாக்கியுள்ளார்.
இந்த ஆட்டோ இயங்கும் போது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது. ஆட்டோவை ஒரு முறை முழு அளவில் சார்ஜ் செய்தால், 96 கி.மீ., தூரத்திற்கு தற்போதைய ஆட்டோக்கள் இயங்கும் வேகத்தில் இயக்க முடியும்
என்கின்றனர். நமது நாட்டில், ஆண்டுக்கு 300 நாட்கள் சூரிய ஒளி கிடைக்கும். காற்றலை சக்தியும் கிடைக்கும். சோலார் மின்தகடுகள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட காற்றாலைகள் மற்றும் மின்சக்சதியின் மூலம் சேகரிக்கப்படும். இச்சக்தி, ஆட்டோவில் இணைக்கப்பட்டுள்ள மின்கலத்தில் சேமிக்கப்படும். ""எஸ்ஆர்எம்'' மோட்டார் மூலம் ஆட்டோ இயங்குகிறது. இந்த ஆட்டோவில் ஆற்றல் குறைந்து விட்டால் பெட்ரோல் மூலமாகவும் இயக்க முடியும்.பேராசிரியர், மாணவர்கள் கூறியதாவது: எதிர்காலத்தில் மேலைநாடுகளை போல நம் நாட்டிலும் மின் சார்ஜர் நிலையங்கள் உருவாகிவிடும். இதை சிறு திட்டமாக துவங்கினோம். நாட்டுக்கு பயன்படும் வகையில் உருவாக்கி முடித்துள்ளதில் மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆரம்ப நிலையில் வடிவமைத்து இருக்கிறோம். மேலும் சில மாற்றங்கள் செய்து வர்த்தக ரீதியாக உற்பத்தி செய்யும்போது, அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohamed rafi - Pondicherry,இந்தியா
15-நவ-201209:29:02 IST Report Abuse
Mohamed rafi கேக்கவே ரொம்ப நல்லா இருக்குங்க... ஆனா சார்ஜ் போட கரன்ட்டுக்கு எங்க போறது...?
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
14-நவ-201222:41:46 IST Report Abuse
Pugazh V ஒரு ஆட்டோ மேல் சோலார் செல் பிக்ஸ் செய்ய சுமார் எண்பதாயிரம் ஆகும் என்ற தகவலைப் போட்டிருக்க வேண்டும். ஏன் போடவில்லை. சென்ட்ரல் போக ஆட்டோ பிடித்தால் சைதாப்பேட்டை வரும் போதே, வெய்யில் போச்சுன்னா அம்பேல் தான். இந்த ஆட்டோ ஆறு மணிக்கு மேல ஓடாது. ஏன் இப்படி போகாத ஊருக்கு வழி தேடுகிறார்கள்? இது லாபகரமானதெனில் எப்போதோ செய்திருக்க மாட்டார்களா? அப்போ, பஸ் இன்னும் பெருசாச்சே, அது மேல சோலார் செல் பிக்ஸ் பண்ணுவீங்களா? லட்சக் கணக்கில் ஆகும் அதான் இது செயல் படுத்தப் படவில்லை. அப்படியே செய்தாலும், ஸ்டார்ட் பண்ண பெட்ரோல் அல்லது டீசல் தான் வேண்டும். சோலார் பனால் சக்தியில் ஆட்டோ பஸ் எதுவும் ஸ்டார்ட் ஆகாது.ஜப்பானில் சோலார் செல் பிக்ஸ் செய்த கார்கள் கூட விலை போகவில்லை என்பது பழைய செய்தி. கலைக்கதிர் என்று ஒரு அறிவியல் புத்தகம் வருகிறது. அதில் சோலார் கார் பற்றிப் பல வருடம் முன்பே வெளி வந்து விட்டது.
Rate this:
Share this comment

Microsoft OLE DB Provider for SQL Server error '80040e31'

Query timeout expired

/xtralog_load_full_taboolabc.asp, line 393