பொது செய்தி

தமிழ்நாடு

ஒரே டம்ளரில் 3 வித தேநீர் அசத்துகிறார் திருப்பூர் டீ மாஸ்டர்

Added : நவ 14, 2012 | கருத்துகள் (20)
Advertisement
ஒரே டம்ளரில் 3 வித தேநீர்  அசத்துகிறார் திருப்பூர் டீ மாஸ்டர்

திருப்பூர்: ஒரே டம்ளரில், மூன்று வித தேநீரை தயாரித்து, அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறார், திருப்பூரில் உள்ள டீ மாஸ்டர் ஒருவர். டீ அருந்துவதில், பலருக்கும், பல ரசனைகள் உள்ளன. பால் கலக்காத பிளாக் டீ, கிரீன் டீ, லெமன் டீ, ஐஸ் டீ என, பல ருசிகளில் டீ தயாரிக்கப்படுகிறது.கடைகளில் டீ அருந்தும்போது பிளாக் டீ, பால் டீ, லைட் டீ, ஸ்ட்ராங் டீ; இதிலும் சர்க்கரை அதிகம், குறைவு, மீடியம், சர்க்கரை இல்லாமல் என, ஒவ்வொருவரும் தங்கள் விருப்பத்துக்கேற்ப டீ பருகுகின்றனர்.திருப்பூர் பேக்கரி ஒன்றில் பணியாற்றும் டீ மாஸ்டர் பாலு, எதற்கும் அசரும் ஆள் இல்லை. ஒரே டம்ளரில் பிளாக் டீ, பால் டீ மற்றும் டீ என மூன்று வகைகளையும், ஒன்றோடொன்று கலக்காமல் போட்டு, வாடிக்கையாளர்களை வியப்பில் ஆழ்த்துகிறார். தஞ்சாவூரை சேர்ந்த, 24 வயதான பாலு, எட்டு ஆண்டுகளாக, திருப்பூரில் டீ மாஸ்டராக உள்ளார். சிறு வயது முதலே, டீக்கடையில் பணியாற்றி வரும் இவர், ஆர்வத்தில், மூன்று ரக டீயையும், ஒரே டம்ளரில் போட்டு பழகியுள்ளார். அதைக் காணவும், ருசிக்கவும், கடையிலும் கூட்டம் மொய்க்கிறது.

Advertisement


வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அண்ணாத்தம்பி - திருச்சி ,இந்தியா
16-மார்-201317:21:33 IST Report Abuse
அண்ணாத்தம்பி அப்படியே தனித்தனியா இரண்டு பார்சல் டீ ... ப்ளீஸ்
Rate this:
Share this comment
Cancel
Veeraraghavan Trivellore - mumbai,இந்தியா
16-மார்-201310:37:06 IST Report Abuse
Veeraraghavan Trivellore இது ஒன்றும் புதிதல்ல, சுமார் 40 வருடங்களுக்கு முன்பு, திருவள்ளூர் மெட்ராஸ் கபே ஹோட்டலில் இது போல் நிறைய போட்டிருக்கிறார் கோபி மாஸ்டர், எனக்கும் கற்றுகொடுத்திருக்கிறார்
Rate this:
Share this comment
Cancel
கூல் - Madurai,இந்தியா
22-நவ-201201:11:11 IST Report Abuse
கூல் படேன்ட் ரைட் வாங்கி வையுங்கள். இல்லை என்றால் திருட்டு பசங்க எவனாவது கோப்பி எடுத்து பெரிய பண்ணக்காரன் ஆயிருவதன். நீங்க அதே டீ கடைல காபி ஆத்தவேண்டியதுதான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X