பொது செய்தி

தமிழ்நாடு

தீபாவளி பயணம் : வசூலை குவித்த அரசு சிறப்பு பஸ்கள்

Added : நவ 16, 2012 | கருத்துகள் (2)
Share
Advertisement

சென்னை : தீபாவளிக்காக இயக்கப்பட்ட அரசு சிறப்பு பஸ்கள், வசூலை அள்ளி குவித்துள்ளன.
சென்னை போன்ற பெருநகரங்களில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, லட்சக்கணக்கானோர் பணிபுரிகின்றனர். இவர்கள், தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல வசதியாக, தமிழக அரச போக்குவரத்துக் கழகங்களின், கோட்டங்கள் தோறும், 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. சென்னையில் இருந்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்ட அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில், 9, 10 மற்றும், 11ம் தேதிகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. "இம்மூன்று நாட்களில், கடந்த ஆண்டைவிட, 1.5 கோடி ரூபாய் அளவிற்கு கூடுதலாக வசூலாகி உள்ளது. இதே போல், 14, 15 மற்றும் 16ம் தேதிகளில், 1 கோடி ரூபாய் அளவிற்கு கூடுதல் வசூல் எதிர்பார்க்கிறோம்' என, அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விழுப்புரம், சேலம், கோவை ஆகிய அரசு போக்குவரத்து கழகங்களும், தீபாவளி சிறப்பு பஸ்களை இயக்கியதில், வசூல் சாதனை படைத்துள்ளதாக, போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kelvin - Chennai,இந்தியா
16-நவ-201218:07:58 IST Report Abuse
Kelvin சிறந்த நிர்வாகம் நடக்கிறது.... கொஞ்சம் கொஞ்சமாக போக்குவரத்து கழகம் மீண்டு வருகிறது என நினைக்கிறேன்.. இதே போல மின்சார கழகமும் வரணும்...
Rate this:
Cancel
Ganesan g Gurusamy - VELLORE,இந்தியா
16-நவ-201214:10:02 IST Report Abuse
Ganesan g Gurusamy எவ்வளவுதான் மக்களிடம் வசூல் பண்ணி லாபம் சம்பாதித்தாலும் நிர்வாகசீர்கேட்டால் மீண்டும் நஷ்டத்தில்தான் ஓட்டுவார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X